22 May 2016

மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா :)

வேண்டாம் என்பதற்கும்  பெரிய மனசு வேணும் :)            
              ''அந்த சர்வருக்கு தன்மானம் ஜாஸ்தின்னு ஏன் சொல்றே ?''
              ''வாங்க மாட்டேன் டிப்ஸ் என்று பேட்ஜ்  குத்தியிருக்காரே !''
மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிக்கும் ?
          ''காக்காகிட்டே  இருந்து கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,ஆனால் ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
        ''மனுசங்களைப் பார்த்து அதுங்க கத்துக்கிச்சோ என்னவோ ?''
மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா :)
          ''அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
         ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''
வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :)                        
         ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
        ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
        ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
        ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

18 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பார்த்து இருக்க்கீங்களா ,டிப்ஸ் மறுக்கிற சர்வரை :)

   Delete
 2. Replies
  1. மல்லிகைப் பூவை மட்டும்தானே :)

   Delete
 3. ‘பேட்ஜ்’ வொர்க்கிங்கிறது இதுதானோ...? உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...! மானஸ்தன்...!

  காக்கா கூட்டத்தப் பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்கன்னு... யாரும் கேக்க மாட்டங்க...!

  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி...! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்...!

  ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ‘பீஸ’ மறக்கவே முடியல... ஞாபக மறதி போயிடுச்சு...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. இந்த மானஸ்தன் மகன் ,வாங்க மாட்டேன் வரதட்சனை என்று சொல்வானோ :)

   இப்போது கூட்டத்தைக்கூட பார்க்க முடிவதில்லையே :)

   போலி எதுன்னு தெரிஞ்சாதானே ஏமாறாமல் இருக்கமுடியும் :)

   காசை இப்படி பிடுங்கினா எப்படி மறக்க முடியும் :)

   Delete
 4. அட...போலி டாக்டர்ரர..இப்படித்தான் கண்டுபிடிக்கிறதா.....????????

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடிப்பவர்களை விட அவரிடம் சிகிச்சை பெறுபவர்களே அதிகம் :)

   Delete
 5. சூப்பர் ஜி சூப்பர்..மனிதர்களிடம் இருந்து காக்கை கற்றுக் கொண்டது,சிந்திக்க வைத்தது ஐயா.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. காக்கைக்கும் கலிகாலம் ஆகிப் போச்சு :)

   Delete
 6. சூப்பர் ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி இருந்தும் இந்த நிலையா :)

   Delete
 7. 01. இந்தியாவில்தானா ?
  02. காலம் மாறிப்போச்சுல...
  03. குஷ்பூவாக இருக்கலாம்.
  04. எஸ்.எம்.எஸ் போதும் போலயே...

  ReplyDelete
  Replies
  1. ஏன் நம்ப முடியலையா :)
   மாறி மட்டும் போகலே ,கெட்டும் போச்சு :)
   அது எல்லார் கண்ணிலும் விழுந்த பூவாச்சே :)
   உங்க தகுதிக்கு அது போதுமா :)

   Delete
 8. அய்யய்யோ !!

  நேத்து தானே எங்க டாக்டர் கிட்ட சொன்னேன்:
  வேளா வேளைக்கு டாப்லட் சாப்பிட மறந்து போறது.எதுனாச்சும் யாராச்சும் நியாபகப் படுத்தினா நல்லதா இருக்குமே என்றேன்.

  அதுக்கென்ன செஞ்சுடுவோம் என்றார் டாக்டர்.
  உங்க செல்லைக் கொடுங்க.. பத்து நிமிஷம் கழிச்சு ரேசெப்சன் லே வாங்கிக்கங்க.என்றார்.

  சரி என்றேன். பத்து நிமிஷம் கழிச்சு ரிசெப்ஷனில் வாங்கிக்கொண்டேன்.

  அடுத்த நாளிலிருந்து
  கரெக்டா
  ஆறு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஒரு காலர் ட்யூன் பாட்டு வருது.

  இன்னாடா பாட்டு அப்படின்னு பாத்தேன்.

  போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா..  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. இந்த பாட்டைக் கேட்டால் ,மருந்து சாப்பிடும் எண்ணமே போயிடுமே அய்யா :)

   Delete
 9. கண்ணிலே பூ , வேளா வேளைக்கு மருந்து
  அருமை நண்பரே....
  ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. மல்லிகைப் பூ என்றதும் பலரும் பல்பு வாங்கிட்டாங்க போலிருக்கே :)

   Delete