23 May 2016

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களையா சொல்வது ?

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களையா  சொல்வது .?
         ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
          ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ்கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
பையன் சரியா படிக்கலைன்னா இப்படியுமா :)
            ''தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு சொல்ல முடியலியா ,ஏன் ?''
           ''+1 வகுப்பிலே மூணு வருசமா  இருக்கிற உங்க  பையனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''
காட்டின் நடுவே 'வன'மூர்த்தி :)
          '' முதலாளி ,கார் ஸ்டேரிங் 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கச் சொல்றீங்களே ,ஏன் ?''
           ''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு இல்லே சொல்லி இருக்கணும் ?''
சுயநல வேண்டுதல் ?
என் உறவுகளுக்கும் வேண்டும் ...
என் பொருளாதார வலிமை !
வேண்டிக் கொண்ட அய்யாவுக்கு பரந்த மனமில்லை ..
கொடுக்கல் இருக்காதே என்பதுதான் காரணம !

22 comments:

 1. இதுக்குத்தான் எல்லா நேரங்கிலும் உண்மையே பேசக்கூடாதுங்கிறது...! வள்ளுவர் சொன்னத இனியாவது கடைபிடித்து வாழக்கத்துங்க... ‘பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்.’

  டிகிரி காப்பி குடிச்சு... ஒன்பதாம் வகுப்பையும் டிகிரி போல மூணு வருசம் படிக்கனுமுன்னு நெனச்சுட்டான் போல் இருக்கே...!

  காய்லாங் கடையில நிக்கிற காரு அப்படித்தானே இருக்கம்...!

  எல்லாத்துக்கும் பொருள்தான் ஆதாரம்... அந்த ‘ரம்’ எடுங்க... ‘ ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு - இப்போ
  உலகம் சுழலுதடி பல ரவுண்டு!’

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. வள்ளுவரே சொன்ன பிறகு ,உளறிக் கொட்டியது தவறுதான் :)

   ஒன்பதாம் வகுப்பு வரை ஆல்பாஸாம்,அவனை பிளஸ் ஒண்ணுக்கு மாற்றிட்டேன்:)

   காயலாங் கடைக் காரை எடுத்துகிட்டு காயல் பட்டினம் போக நினைச்சா தப்புதான் :)

   ரம்முன்னு சொல்லாம கம்முன்னு கிடங்க ,காரியம் தானாய் நடக்கும் :)

   Delete
 2. மாட்டிகிட்டாரடி மயிலைக்காளை... என்று பாட வேண்டியதுதான்!

  அது பையனோட குற்றம்...

  அதானே!

  புரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. மழை மேகத்தைக் கண்டு மயிலாட ,ம்யிலைப் பார்த்து இவர் ரொம்பத்தான் ஆடிவிட்டார் போலிருக்கு :)

   பையனின் குற்றத்தில் அப்பனுக்கு பங்கில்லையோ :)

   வனமூர்த்தி ,சின மூர்த்தி ஆனதை மறந்து விட்டீர்களே :)

   சொந்த பந்தங்களுக்கு கொடுத்து முடியவில்லை என்று அங்கலாய்க்கிறார் :)

   Delete
 3. இப்போ எல்லாம் பத்தாம் வகுப்பு வரை படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ்தான்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் தகவலை அடுத்து ,அவனை +1 க்கு மாற்றிவிட்டேன் ஜி :)

   Delete
 4. Replies
  1. மச்சத்தால் அதிர்ஷ்டமும் இல்லை .ஆபத்தும் இல்லை என்பதுதானே உண்மை :)

   Delete
 5. 01 .உளறுவாயன்
  02. உண்மைதைனே...
  03. பேரை மாற்றினால் உடனே சரியாகிடும்
  04. சுயநலம்தான்....

  ReplyDelete
  Replies
  1. தானாடாவிட்டாலும் தன் நாக்கு ஆடுமோ :)
   அவர் என்ன செய்யமுடியும் :)
   வானமூர்த்தி எனலாமா :)
   ஆனாலும் இவரிடம் தானே செல்வம் சேருது :)

   Delete
 6. Replies
  1. அங்க அடையாளங்கள் நன்றா :)

   Delete
 7. உங்களால் மட்டும் எப்படி முடிகிறது ... அருமை

  ReplyDelete
  Replies
  1. என்னவள் ,ஜோக்காளிப் பைத்தியம் என்கிறாள் என்னை :)

   Delete
 8. வில்லங்கம்ன்னா ஆ..ஆபத்து..வில்லங்கம் எதுவுமில்லேன்னா அ..அதிர்ஷ்டம்...ங்கோ...

  ReplyDelete
  Replies
  1. மச்சம் எப்படி இரண்டுக்கும் காரணமாய் இருக்க முடியும் :)

   Delete
 9. அருமையான நகைச்சுவைகள்
  ரசித்தேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. ஏன் படம் நன்றாய் இல்லையா :)

   Delete
 10. Replies
  1. வேறு வழியே இல்லை :)

   Delete
 11. Replies
  1. பார்வைக்கு தெரியாத மச்சத்தை பார்த்து .அய்யா மாட்டிக் கொண்டதை ரசீத்தீர்களா :)

   Delete