28 May 2016

பெண்கள் ,சிறகுகள் இல்லா தேவதைகள்தானா :)

                 ''சிறகுகள் இல்லாமலே, பெண்களை தேவதைகளாக்கும்
வல்லமை புடவைகளுக்கு உண்டுன்னு  சொன்னவருக்கு...  கல்யாணம் ஆகியிருக்காதுன்னு  எப்படி சொல்றீங்க ?''
                   ''இப்படி சேலைக் கட்டிட்டு பெண்டாட்டி வெளியே வந்தா அப்படிச் சொல்லுவாரா ?''
நன்றி...படத்துடன் கவிதை சொன்ன முகமறியா 'வாட்ஸ் அப் ' நண்பருக்கு !
மறக்காம 'சிம்'மையும்  சேர்த்து புதைத்து இருப்பார்களா :)              
              ''செத்ததுக்கு பிறகு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த உன் புருஷன் ஆவி ,வராம இருக்க என்னடி செய்தே ?''
               ''அவரைப் புதைத்த இடத்திலேயே அவரோட செல்போனையும் புதைச்சுட்டேன்  !''
புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு  போதுமா  :)
         ''கடையை பூட்டப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட்  பண்ணுங்க !''
           ''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் , திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''
பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா :)
          ''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
          ''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''
காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்  :)
இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

20 comments:

 1. உண்மை தான் ஒரு சில பெண்களால் பெண் குலத்திற்கே அவமானம் ஏற்படுகிறது ஐயா.அனைத்தும் அருமையாகவும் சிந்திக்கவும் வைத்தது ஐயா.நன்றி

  ReplyDelete
  Replies
  1. மலாலா போன்ற சாதனைப் பெண்கள் பிறந்த பெண் குலத்தை அவமானம் செய்கிறோம் என்கிற உணர்வு ,மசாலா நடிகைகளுக்கு இருக்குமா என்று தெரியவில்லை :)

   Delete
 2. அதானே...

  ஹா.... ஹா... ஹா.... உண்மை.. இப்படியும் பல ஜென்மங்கள் இருக்கிறார்கள்!

  என்ன ஒரு வாய்ப்பு என்று நினைத்திருப்பார்களோ!

  ஹா.... ஹா... ஹா...

  ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. சேலையில் கூட எங்களால் கவர்ச்சி காட்ட முடியுமென்று பேட்டி வேறு கொடுப்பார்கள் இந்த நடிகைகள் :)

   செத்தாலும் செல்போனை விடமாட்டார்கள் இந்த ஜென்மங்கள் :)

   அதுவும் பார்த்து வைக்கிறாராம்,செலக்சன் அப்புறமாம் :)

   அப்படி பிறக்காதவங்க கூட இலவசத்துக்கு அலைகிறார்கள் என்பது உண்மை :)

   கள்ளச் சாவிகள் பூட்டைத் திறக்கின்றன என்றால் பூட்டும் சரியில்லை என்றுதானே அர்த்தம் :)

   Delete
 3. Replies
  1. நீங்க வழக்கம் போல கருத்தைச் சொல்லியிருக்கீங்க ,இன்னைக்கு ஏடாகூடாமா படமும் இருப்பதைப் பார்த்தீங்களா :)

   Delete
 4. அருமை, கருத்தும் படமும்..!

  ReplyDelete
  Replies
  1. இப்படி சேலைக் கட்டிக்க நடிகைகளால்தான் முடியும்,சரிதானே ஜி :)

   Delete
 5. தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி... சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா...?!

  இனி 'சிம்' ரன் எடுக்க முடியாதில்ல...!

  கடையில உள்ள எல்லாப் புடவையும் இப்பத்தான் பாத்து முடிச்சோம்... இனிமேல்தான் இதில எது நல்லா இருக்குன்னு பாத்து ஒன்ன செலக்ட் செய்யனும்... ஆத்தில போட்டாலும் அளந்து போடனுமுல்ல...!

  பிரசவத்துக்கு இலவசமுன்னு எழுதியிருந்த ஆட்டோக்காரனுக்குப் பிறந்தவனாச்சே...!

  பூட்டாத பூட்டுக்களைக் காலாவதியான சாவிகள் திறக்க முயற்சிக்கின்றனவோ...?

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. எந்த தேவதை இப்படி அரைகுறை உடையோடு வருகிறதோ :)சுடிதார் போட்டா அந்த வாசம் போயிடுமா :)

   அடக்கமான பின் இனி ரன்னா:)

   இன்னொரு நைட்டும் பூட்டிட்டு போகணுமா :)

   அவன் புருசன்தானே:)

   திறந்து கொண்டால் லீவர்கள் கெட்டு பூட்டும் கெட்டுவிடுமே :)

   Delete
 6. 01 அவரு சொல்லும்போது இப்படி இல்லையே...?
  02. இடத்தையும் சொல்லி இருக்கலாம் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கைச்செலவுக்கு உதவுமே..
  03. நியாயமான வார்த்தை
  04. இப்படியும் இருக்குதா.?
  05. உண்மை

  ReplyDelete
  Replies
  1. வேறெப்படி இருந்ததாம் :)
   பிணமே ,பணம் என்றால் வாய் திறக்குமாமே :)
   அடுத்த நாள் மடிச்சு வைக்கிறது யார் :)
   நம்ம ஊரே சாட்சி :)
   ஆண்மை இதுவா :)

   Delete
 7. Replies
  1. படத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா ஜி :)

   Delete
 8. புடவை எடுத்தல் ஒரு மாபெரும் போருக்கு செல்வது போன்றது

  ReplyDelete
  Replies
  1. கூட போகும் புருஷனுக்குத் தானே :)

   Delete
 9. ஒரு வேளை சேலை பறக்குமோ....???

  ReplyDelete
  Replies
  1. அதைப் பார்க்கும் இள மனதுதான் பறக்கும் :)

   Delete
 10. ரசித்தோம் ஜி அனைத்தும்

  ReplyDelete
  Replies
  1. காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்... என்பதையும்தானே :)

   Delete