3 May 2016

சின்ன வீடு 'தலையாரி வீடா 'ப் போச்சே :)

கோபம் வராமல் என்ன செய்யும் :)

             ''ஒப்பந்தத்தைப் படிக்காமலே நடிகை கிழித்து எறிந்து விட்டாராமே ,ஏன் ?''

             ''உடன்படிக்கை என்பதற்கு பதில் உடன்படுக்கை  என்று  இருந்ததாம் ! ''

சின்ன வீடு 'தலையாரி வீடாப் 'போச்சே :)

            ''போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துக்கிட்டிருந்த தலைவரை 'சின்ன 'வீட்டிலே வைச்சுப்  பிடிச்சிட்டாங்களாமே !''

            ''பாவம் ,அவரால் 'தொடர்பு 'எல்லைக்கு அப்பால் போக முடியலை போலிருக்கு !''

மாமனாரின் அதிரடி முடிவு :)

          ''உங்க மாப்பிள்ளையை  தலை தீபாவளிக்கு அழைக்கப் போறதில்லையா ,ஏன் ?''

           ''என் பொண்ணைக் கொடுமை பண்ற அந்த 'முண்டத்'துக்கு எதுக்கு 'தலை ' தீபாவளி ?''

கணவனுக்கு நரகமே பழகிப் போச்சு :)

              ''என்னங்க ,நான் செத்தா ,சொர்க்கத்திற்கு போகணும்னு வேண்டிக்கிறீங்களே ,என் மேலே அவ்வளவு பிரியமா ?''

              ''அதெல்லாம் ஒண்ணுமில்லே,நரகத்திலேயாவது நான் நிம்மதியா இருக்கலாம்னுதான் !''

இந்த நெருடல் சாதிக்கத் தூண்டணுமே :)

       நாட்காட்டித்தாளை  தினசரி  கிழிக்கும்போதும் ஒரு நெருடல் ...

       நேற்றும் என்ன செய்து கிழித்தோமென்று ?


22 comments:

 1. 01. அப்படீனாக்கா கேமரா இருக்கோ ?
  02. தொடர்பின் அளவுகோல் இவ்வளவுதானோ ?
  03. முண்டத்தை தலையை எடுக்க வேண்டியதுதான்...
  04. அப்பவும் இவனுக்கு நரகம்தான் வேணுமோ ?
  05. நாளைக்கும் கிழிக்கணுமே...

  ReplyDelete
  Replies
  1. சுவருக்கும் பார்க்கின்ற விழியுருக்குமோ:)
   கழுதை தப்பினா ......:)
   எடுத்தால் இவருக்கும் தீபாவளி இல்லாமல் போய்விடுமே :)
   பெண்டாட்டியில்லா இடமே அவருக்கு சொர்க்கம்:)
   கிழிப்பதையன்றி வேறொன்று அறியேன் :)

   Delete
 2. ரசித்தேன் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. படத்தைப் பார்த்தால் சின்ன வீட்டை வாங்கத் தோன்றவில்லையா :)

   Delete
 3. என்ன இருந்தாலும் ஒரு எழுத்துப் பிழைக்காக இப்பூட்டு கோபம் ஆகாது...! சரி... கோபப் படாதிங்க... ‘புதிய உடன்படிக்கை’ போட்டிடுவோம்...!

  சின்ன வீடு அழகா இருக்குன்னு சொல்லிக்கிட்டே... தலைவரைப் பிடிச்ச போலீசை இப்பக் காணாமாம்... தேடிக்கிட்டு இருக்காங்க...!

  என்னதான் இருந்தாலும் ‘தலை இல்லாம வால் ஆடக்கூடாதுல்ல...’ முண்டத்துக்கு தெரியல...!

  ‘ரம்மை... ஊர்வசி... மேனகா...’ இருக்கிறது தெரியாம பேசுறீங்கன்னு நெனைக்கிறேன்...! நரகத்தில யார் இருக்கா...?

  இன்று கிழித்தது போதாதா...? யாரது பொற்‘கிழி’ கொண்டு வாங்க...!  ReplyDelete
  Replies
  1. நீங்கதான் 'புதிய உடன்படிக்கை 'நாடகம் எழுதியவராச்சே ,அதுதானே இந்த பதிவுக்கு எனக்கு க்ளு கொடுத்தது :)

   சின்ன வீடு மீண்டும் கணக்காகிப் போச்சா :)

   முண்டத்துக்கு இனிமேல் புரியும் :)

   rம்பா,uர்வசி,mனகா ..rum இருக்கும்ல:)

   சாதனைக்கு பொற்கிழி ஒண்ணுதான் பாக்கி :)

   Delete
 4. சிரிக்க வைத்தீரே நன்றி நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. நான்காம் தேதி உங்களை சிரிக்க வைக்க முடியலைன்னு வருந்துகிறேன் :)

   Delete
 5. வித்தியாசமான உடன்படிக்கை?

  ReplyDelete
  Replies
  1. எல்லா விசயத்தையும் உடன்படிக்கையில் கொண்டு வர முடியாதே :)

   Delete
 6. Replies
  1. மாமனாரின் அதிரடி முடிவு சரிதானே :)

   Delete
 7. நேற்றும் என்ன செய்து கிழித்து விட்டோம்? .... அதானே!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வேதனை என்னவென்றால் தேதித் தாளைக் கிழிக்கிறதுக்கு சிலருக்கு நேரம் இருப்பதில்லை :)

   Delete
 8. என்னது தலையாரியை கைது செய்துட்“டாங்களா....??? நம்ப முடியவில்லை.... நம்ப முடியவில்லை....

  ReplyDelete
  Replies
  1. தலையாரி என்ன பாவம் செய்தார் ,ஒளியத் தெரியாமல் வந்து ஒளிந்தவரை கைது செய்து விட்டார்கள் :)

   Delete
 9. என்னது தலையாரியை கைது செய்துட்“டாங்களா....??? நம்ப முடியவில்லை.... நம்ப முடியவில்லை....

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் கேட்பதைப் பார்த்தால் ,உங்க சந்தேகம் தீரலைப் போலிருக்கே :)

   Delete
 10. Replies
  1. ஒப்பந்தத்தைக் கிழித்தது சரிதானே :)

   Delete
 11. உடன்படிக்கை... ரசனை...
  அனைத்துமே ரசனை சகோதரா.
  மகளிடம் இலண்டன் சென்றோம் தாமதம்....
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. நீங்க லண்டன் சென்ற நேரம் ,எனக்கு நெட் கட்...நானும் தாமதம்தான்:)

   Delete