31 May 2016

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னாரே :)

 ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க துவட்டிக்கலாம் :)            
            '' மழையிலே நனைஞ்சு வந்திருக்கேன் ,அவசரம் அவசரமா என் கையிலே எதுக்கு தாயத்து கட்டுறே ?''
            ''நீங்க நனைஞ்சது 'பேய் 'மழையிலாச்சே !''
 பீப்பீ கோஷ்டி வரலேன்னு BPஏறுதா :)              
             ''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ    கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''
             ''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ   (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''
பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா ' தரகர் சொன்னது :)
           ''பொண்ணுக்கு  காது மந்தம்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
            ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
          ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்து பார்த்தாலும் நிலா தெரியுமே ?''
வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!
உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !

20 comments:

 1. நா முழுதும் நனைஞ்சாச்சு... ஒனக்கு முக்காடு எதுக்கு...? ‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே...’ ‘பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு புத்தியை புகட்ட வந்த தாயத்து...!’

  பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போல பொங்குற மனசு பாடாதோ? ‘பூவரசம் பீ பீ...!’

  போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு...!

  நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே...! ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்... வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்...’

  உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?’ இனி சொல்ல முடியாது...!

  த.ம. 1
  ReplyDelete
  Replies
  1. இப்படி துவட்டுவாங்க என்று தெரிந்தால் தினசரி நனையலாமே ?பெண்டாட்டிப் புடவை பக்தர்களுக்குமா தாயத்து :)

   பூவரசம் பூவும் நாதஸ்வரம் வாசிக்குமா :)

   தேவையுள்ளதுக்கு மட்டும் காது கேட்குமா :)

   நம் மேல் ஏறாமல் போனால் சரி :)

   ஊர்க்குருவி பருந்தாகுமா? ஆனால் ,இறங்கி வந்தால் பலருக்கும் விருந்தாகி விடுமே :)

   Delete
 2. ஹா... ஹா... ஹா... ஒரே பேய்களா பூமியில் பொழிந்தால் எப்படி இருக்கும்!

  அங்கேருந்தே வாசிச்சு ஸ்கைப்ல ஒளிபரப்பச் சொல்லுங்க!

  ஹா.... ஹா.... ஹா...அப்போ புல்லுன்னா என்னவா நிப்பா?

  ஹா.... ஹா... ஹா...

  கரெக்டுங்க!

  ReplyDelete
  Replies
  1. பூமியில் வாழும் பேராசை பேய்களுக்கு இடமில்லாமல் போய் விடுமே :)

   வாசிக்கிற இடத்தில் துட்டும் விழும் அள்ளிக்கச் சொல்லுங்க :)

   குடிச்சு மயங்கி விழக்கூடும் :)

   எங்கிருந்து பார்த்தாலும் நிலவு ஒன்றுதானா :)

   கனிந்த மரம் கல்லடி படும் எனலாமோ :)

   Delete
 3. அனைத்தும் ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. முட்டிக்க சீனப் பெருஞ்சுவருக்கு போக முடியுமா ஜி :)

   Delete
 4. Replies
  1. நாதஸ்வர இசையையும்தானே:)

   Delete
 5. ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பவங்க எல்லாம் காது கேட்காதவுங்க என்று கருதலாம்..

  ReplyDelete
  Replies
  1. அப்படி நினைக்கிறவங்களை டியூப் லைட் என்றும் சிலர் கருதக் கூடும் :)

   Delete
 6. அனைத்தும் அருமை இரசித்தேன் ஐயா.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நிலவில் இருந்து டெலஸ்கோப் வழியா பார்த்தா ,மெரினா பீச் தெரியுமா தெரியாதா :)

   Delete
 7. பேய் மழைன்னா தாயத்து அவசியம்தான்! அனைத்தும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அதை ,மழையில் போறதுக்கு முன்னால் அணிவது நல்லதாமே ?நம்ம ஜோசியர் சொன்னார் :)

   Delete
 8. 01. சொந்த அனுபவத்தை வெளியில் சொல்லலாமா ஜி ?
  02. பஸ்ஸும் பீப்பீ ஊதிருச்சா ?
  03. அவ்வளவுதான் சொல்லமுடியும்.
  04. அபுதாபியில் அல் காமராஜர் ரோட்டில் நின்று பார்த்தாலும் தெரியுதே...
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தாயத்து காட்டிக் கொடுக்கத்தானே போவுது :)

   ஆமா நம்ம ஊர்லே இதெல்லாம் சகஜம் தானே :)

   கொடுக்கிற காசுக்கு :)

   அங்கே காமராஜர் இருக்காரா :)

   புகழ் கூட கரும்புள்ளியா மாறிடக் கூடும்தானே :)

   Delete
 9. பேய் மழை, பீப்பி அஹஹஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம்...ஜி...(காது மந்தம் தவிர...)

  ReplyDelete
  Replies
  1. மந்தம் தவிரவா ? தீயென்றால் சுடவா போகிறது :)

   Delete
 10. பேய் மழை அட்டகாச கற்பனை
  தத்துவம் அருமை

  ReplyDelete
  Replies
  1. எவனோ ஒருவன் பேய் மழை தாயத்து கிடைக்கும்னு போர்டு மாட்டாம இருக்கணும் :)

   Delete