5 May 2016

ரெகுலராய் சந்தித்தால் பிக்கப் தானா :)

  அன்பார்ந்த வலை உறவுகளே ....             
                   நேற்று முன்தினம் மாலையில்  செயல் இழந்த நெட்  தொடர்பு  இப்போதுதான் சரியானது ,ஜோக்காளியின் பல ஆண்டு வரலாற்றில் நேற்றைய  தினம் மட்டும் பதிவை வெளியிட முடியவில்லை .இதனால் நேற்றிரவு  சிலருக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்ததால் ,இதோ இன்று அவசரப் பதிவு :)
நாற்பதில் வர வேண்டியது :)
          ''என்னைப் பார்த்தா ,நாற்பது வயசுன்னு நம்ப முடியலையா ,அவ்வளவு இளமையா இருக்கேனா ?''
           ''இப்போ வரவேண்டிய நாய்குணம் ,ஐந்து வருசத்துக்கு முன்னாடியே  உங்களுக்கு வந்திருச்சே,அதான் நம்ப முடியலைன்னு சொல்ல வந்தேன்  !''
சினிமா பாடலை ரசிப்பதிலும் கொலைவெறியா :)
          ''என்னடா ஆச்சு உனக்கு ?சினிமாப் பாட்டை கேட்டுட்டு...பாவம் அந்த குழந்தைங்கிறே?''
          ''கண்ணன் 'ஒரு கை ' குழந்தையாமே ?''
வக்கீல் புருஷனை வாதத்தில் ஜெயிக்க முடியுமா ?
          ''என்னங்க ,கேஸ்  கட்டை எடுக்க  மறந்து கோர்ட்டுக்குப் போறீங்களே , நீங்கெல்லாம் பெரிய கிரிமினல் லாயரா ?''  
           ''குக்கர்லே கேஸ்கட்டை  போட மறக்கிற  நீ  அதைச் சொல்றீயாக்கும் ?''
வாழ வைக்கும் அமெரிக்காவுக்கு ஜே !
USA  பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டாலும் ...
அங்கே பணிபுரியும் நம்மவர்கள் ...
கையிலே டாலர்  ,செண்ட்டும் மட்டுமின்றி 
கழுத்திலே தங்க டாலரும் ,வாசனை செண்ட்டுமாய் 
ஜொலிக்கிறார்கள் !மணக்கிறார்கள்!

கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)
               ''பூசாரியை காதலிப்பதால் எனக்கொரு வசதி,ஈஸியா கருவறையிலும் நுழைய முடியுது !''
               ''என்னால் அந்த பூசாரியை நம்ப முடியலே ,'கருவறை 'விசயத்தில் ஜாக்கிரதையாய் இருந்துக்கோடி !''
மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா ?
            ''உங்க பெர்சனல் உதவியாளரா என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பாஸ் ...என் பெயரை ஏன்  சாந்தின்னு மாற்றிக்கச் சொல்றீங்க ?''
         ''அது என் மனைவி பெயர் ,நான் தூக்கத்திலே உளறினாலும் அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதுன்னுதான் !''

லட்சங்கள் போனாலும் லட்சியம் ஸ்டாராய் மின்னுவதே !
            ''இவ்வளவு கேஸ்கள்,பவர் ஸ்டார் என்ன ஆவாரோ ?''
             ''கஞ்சிக்கு வழி  இல்லைன்னாலும் 'புவர்ஸ்டார் 'ன்னு  போட்டுக்க மாட்டார் !''
ரெகுலராய் சந்தித்தால் PICKUP தானா ?
 PICKUP என்பது அவசியம் 
  பஸ்களுக்கு இருக்கவேண்டியது ,ஆனால் ..
  அடிக்கடி முன் இருக்கையில் பயணிக்கும் பெண்ணுக்கும் டிரைவருக்கும் உண்டாகி விடுகிறதே !

22 comments:

 1. காலையிலேயே வந்து தேடிச் சென்றேன்.

  அனைத்தையும் ரசித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. ஏமாற்றம் நாளையும் தொடர்ந்து இருக்கும் ,இன்னும் bsnlயை நான் நம்பியிருந்தால் !

   Delete
  2. BSNL லிருந்து மாறியாச்சா? இன்றைய பதிவை இன்னும் காணோமே....

   Delete
  3. bsnl ஆபீஸுக்கு மோடத்தை செக் பண்ண கொண்டு வரச் சொன்னார்கள் ,கொண்டு சென்றால் அடாப்டர் கொண்டு வரலையா என்கிறார்கள் ,சரி இதோ கொண்டு வருகிறேன் என்றால் ,இன்னைக்கு செக் செய்ய ஆளில்லை இல்லை ,நாளை காலை கொண்டுட்டு வாங்க என்றார்கள் !கஷ்டமரைத் துரத்துவதில் bsnl நிர்வாகம் நன்றாகவே செயல் படுகிறது !பொதுத் துறையை சீரழிப்பதுதானே மத்திய அரசின் கொள்கை ?
   இந்த லட்சணத்தில் நாடு வல்லரசு ஆகிக் கொண்டிருக்கிறதாம் !

   நேரமின்மைக் காரணமாய் பதிவு தாமதமாகிறது ...மாலையில் சுடச் சுட வெளியாகும் :)

   Delete
 2. Replies
  1. ரசித்தது ,சாந்தியின் பெயர் மாற்றத்தையும் தானே :)

   Delete
 3. தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்... இதற்குப் போயி ‘வல்லு வல்லுன்னு...’ விழுறீங்களே...! என்ன இதுவும் கடந்து போகுமா...? அதையும் தாண்டி புனிதமானது...!

  நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...!

  ஒரு மாசமாவே கேஸ் பிராபளம்தான்... டாக்டர்கிட்ட போகணும்... நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டாய்...!

  ‘சாதிமல்லிப் பூச்சரமே – சங்கத்தமிழ் பாச்சரமே... ஆசை என்ன ஆசையடி – அவ்வளவு ஆசையடி...’ தாய் மண்ணே வணக்கம்... சென்ட் என்ன விலை... கானி நிலம் வேண்டும்... டாலர் எவ்வளவு வேண்டும்...?

  ம்...ம்... எனது கருவறை காலியில்லை...! எல்லாம் அந்தப் பூசாரிதான்... சாரி... இதுக்கு மேல சொல்ல முடியல...! அப்புறம் அழுதிடுவேன்...!

  நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி..!

  பவர் இல்லைன்னாலும் ஸ்டார்தான்...‘மின்னுவதெல்லாம் நட்சத்திரம் அல்ல...!’

  கெமிஸ்ட்ரி... வொர்க்கவுட் ஆயிடுச்சே...!  ReplyDelete
  Replies
  1. [[கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)
   ''பூசாரியை காதலிப்பதால் எனக்கொரு வசதி,ஈஸியா கருவறையிலும் நுழைய முடியுது !''
   ''என்னால் அந்த பூசாரியை நம்ப முடியலே ,'கருவறை 'விசயத்தில் ஜாக்கிரதையாய் இருந்துக்கோடி !'']]

   >>>>>கருவறையில் என்றாலே ஒரே அர்த்தம் தான்...
   பூசாரி ஜோக் ஒகே...
   இதே ஜோக் காஞ்சி தேவநாத ஐயர், பூஜை செய்யும் கோவிலில் என்றால்...
   "நீ கருவறைக்குள் நுழைவது எவ்வளவு ஈசியோ, அதைவிட ஈஸியா அந்த குருக்கள் உன் கருவறைக்குள் புகுந்து விளையாடிர்வாடி!
   _______________
   பகவான்ஜி! ஒரு கேள்வி!
   அது ஏன் மு.க. விலிருந்து எல்லோரும் [சூத்திர]பூசாரியை மட்டும் தாக்கி எழுதுகிறீர்கள்.
   இந்த ஜோக் காஞ்சி தேவனாதனை மனதில் கொண்டு தான் எழுதியுள்ளீர்கள் என்று ஊரே அறியும்!
   அப்புறம் ஏன் சூத்திர கோவிலில் பூஜை செய்யும் பூசாரி? ஏன் தவறு செய்த குருக்கள் அல்லது ஐயர் என்று சொன்னால் என்ன தப்பு!

   கோவில் கருவறையை ஆபாசம் செய்தது அவன். அப்படி இருந்தும் என்ன தயக்கம். குருக்கள் என்று சொன்னால் என்ன? எல்லா எழவுக்கும் பூசாரி தானா!

   Delete
  2. மணவை ஜேம்ஸ் ஜி ....
   தொடர்பு எல்லையை தாண்டினாலே வெறுப்புதானே வரும் :)

   சபாஷ் சரியான போட்டி :)

   கேஸ் இல்லாமல் டாக்டர் அல்லாடிகிட்டு இருக்கார் ,சீக்கிரம் போங்க :)

   டாலரெல்லாம் மண்ணாய் மாறியதோ :)

   இப்போ அழுது ஆகப் போவது என்ன :)

   தூக்கத்திலுமா :)

   ந்ட்சத்திரம் இல்லையென்றால் எரிகல்லா :)

   ஆயிடுச்சு ,கலக்சன் டல்லாகிப் போச்சே :)

   Delete
  3. நம்பள்கி ஜி ....

   பூஜாரிக்கும்,குருக்களுக்கும் உள்ள வேற்றுமையைப் பற்றி நான் யோசிக்கலே !சரி ,குருவைப் பற்றியும் அடுத்த பதிவில் போட்டாச்சு ,சரிதானே :)

   Delete
  4. இந்த குரு அல்ல! இந்த குரு என்றால் ஆசிரியர். நான் சொல்லும் குருக்கள் என்றால் உயர்ஜாதி கோவிலில் பூஜை செய்யும் ஐயர்கள்! சூத்திரக்கோவிலில் பூஜை செய்வது பூசாரி! பராசக்தியில் வரும் கோவிலில் பூஜை செய்வது பூசாரி! காஞ்சிபுரம் கோவிலில் பூஜை செய்த தேவநாதன் ஐயர் குருக்கள்....குரு அல்ல!

   சரி! உங்கள் ஜோக்கை நானே எழுதுகிறேன் சரியாக...
   >>>>>கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)
   ''குருக்களை [or ஐயரை] காதலிப்பதால் எனக்கொரு வசதி,ஈஸியா கருவறையிலும் நுழைய முடியுது !''
   ''என்னால் அந்த குருக்களை [or ஐயரை] நம்ப முடியலே ,'கருவறை 'விசயத்தில் ஜாக்கிரதையாய் இருந்துக்கோடி !''

   இப்ப சரி!

   Delete
  5. உங்க கோணம் சரிதான் !குருக்கள் என்றால் வயதானவரின் தோற்றம் நினைவுக்கு வரும் ,எனக்கு தேவை வயது குறைந்த காதலனாச்சே !குருக்கள் எனும்போது இருவரோ என்ற குழப்பம் வேறு வருகிறதே :)

   Delete
 4. ரெகுலராய் சந்தித்தால் PICKUPப்பா...நிஜம்தானா..???

  ReplyDelete
  Replies
  1. வலிப்போக்கரே சந்தோசமாய் கேட்பது போல் இருக்கு,,,

   Delete
  2. உங்களுக்கு அனுபவம் போதாது :)

   Delete
  3. பிக்கப் ஆன சந்தோசம் இப்பவே தெரியுதா :)

   Delete
 5. கேஸ்கட் சூப்பர் பகவானே,

  தூக்கத்தில் உளறினாலும் சந்தேகம் வராது,,,,,

  அனைத்தும் அருமை ஜீ,,,

  ReplyDelete
  Replies
  1. வக்கீலும் ,மேனேஜரும் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)

   Delete
 6. வக்கீலுக்கு ஏற்ற மனைவிதான்
  இருந்தாலும் நீங்க தேவநாதனை இப்படியெல்லாம் சொல்வது பாவம் ஜி

  இரண்டு தினங்களாக துபாய் வாசம்... நானும் வரமுடியவி்ல்லை

  ReplyDelete
  Replies
  1. அவர் தேவநாதனா ,தேகநாதனா:)

   இனிமேல் துபாய் பக்கம் போகாதீங்க ,நானும் வலைப் பக்கம் வரவிடாமல் போயிடும் போலிருக்கே :)

   Delete
 7. பி.எஸ்.என். எல் உங்களை எங்களிடமிருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்திவிட்டதோ? சிறப்பான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்! இங்கு ரிலையன்ஸ் கூட சில வாரங்களாய் சரியாக ஒர்க் ஆகவில்லை!

  ReplyDelete
  Replies
  1. பதிவர்களின் மண்டையைக் காய வைக்காத 'நெட் சர்விஸ் பிரோவைடர் ' யாரென்று தெரியவில்லை...எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போலிருக்கே :)

   Delete