17 May 2016

மகிழ்ச்சி தந்த காதலே , துக்கமாகுமோ :)

எனக்கொரு உண்மை தெரிந்தே ஆகணும் !             
                ''தலைவருக்கு பிரஷர் கூடிப் போச்சாமே ,தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பதாலா ?''
              ''பிடிபட்ட 570 கோடி பணம் திரும்பக் கிடைக்குமான்னு என்பதற்காகவும் இருக்கும் !''
பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)             
           ''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன்  ?''
           ''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''
மனைவி தந்த கசப்பான அனுபவம் :)
         ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
         ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ,தேவையா எனக்கு ?''

இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது :)
        ''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
        ''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''
மகிழ்ச்சி தந்த காதலே ,துக்கமாகுமோ :)
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று 
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !

20 comments:

 1. காதலில் இவ்வளவு பிரச்சனையும் உள்ளதோ ... அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக காதலிக்காமல் இருந்துடாதீங்க :)

   Delete
 2. போனால் போகட்டும்... இது மாதிரி எத்தனை வண்டி இருக்கிது தெரியுமா...? தலைவர் எங்க பிரஷர் கொடுக்கனுமுன்னு தெரியாதா...?

  ரொம்ப நேரம் பயணம் செய்றதுக்காக காசெல்லாம் கூடக் கேட்க மாட்டோம்...கவலைப்படாதிங்க...!

  தண்ணிக் கஷ்டத்துக்கு தண்ணிய ஏன் வீணாக்கனுமுன்னு சொல்லலை... எப்படி இருந்தாலும் சம்பளம் வாங்கின உடனே நீதானே வாங்கிக்க போறாய்...!

  ‘கிளி பேச்சு கேட்க... வா...?!’

  ‘ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்... ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்...’

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. தலைவர் பிரஷர் கொடுக்கப் போய்தான் ,இப்போ வங்கிப் பணம் என்று கதையை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களோ :)

   கேட்டா என்னாகும் ,தெரியாம ஏறுகிறவன்கூட ஏற மாட்டானே :)

   அதை தண்ணியா செலவு செய்யப் போறதும் நீதானே :)

   கிளிக்கு பொய் பேசத் தெரியாதே :)

   என்றும் பொருந்தும் பாடல் :)

   Delete
 3. அத்தனையும் ரசித்தேன் நண்பரே....

  570 கோடியின் ப்ரஷர் இருக்கத்தானே செய்யும்...

  ReplyDelete
  Replies
  1. வெளியே வந்தது இது ,வராதது எவ்வளவோ :)

   Delete
 4. படத்தில் உள்ளது போல உள்ள காலையில் எழுந்திருச்சு குளிச்சுவிட்டு தலை நிறைய பூ வைச்சிக்கிட்டு பொண்ட்டாடி கோலம் போட்ட எழுந்திருச்சு பக்கதில் உட்கார்ந்து பார்த்து ரசிச்சுகிட்டே இருக்காம தூங்குகிறவனுக்கு ஒரு அய்யோ

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,கோல மயிலின் அழகை விடவா,கோலம் அழகாய் இருக்கப் போகிறது :)

   Delete
 5. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு! படித்ததும் ஒரே சிரிப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கிளியின் கீச்சும் அருமைதானே :)

   Delete
 6. 01. பணம் இவுக விட்டுதானா... நான்கூட நம்மைத்தேடி வந்துருவாங்களோனு நினைச்சேன்.
  02. சரியாத்தானே எழுதி இருக்கு.
  03. முன் எச்சரிக்கைதான்.
  04. அடடே....
  05. உண்மை

  ReplyDelete
  Replies
  1. கண்ட்டைனர் லாரி டயர் பஞ்சர் ஓட்டணும்னா தேடி வருவாங்க :)
   படிச்சவர்தான் சரியாய் புரிஞ்சிக்கலே :)
   தன் தலையில் தானே ...:)
   சிந்திக்கத் தெரிந்த மனிதன் சொல்வது எல்லாமே ரீல் தானே :)
   நிஜ முகம் தெரிந்தால் என்ன ,வெல்வது தானே உண்மை காதல் :)

   Delete
 7. வெள்ளி மதியம் முதல் கணினி ரிப்பேர். அலபேசியில் வந்து வாக்களித்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் ஜி...

  ReplyDelete
  Replies
  1. இந்த நேரத்தில் உதவ வேண்டும் என்பதற்கு உங்கள் 'கே வா போ 'வை ,த ம வாசகர் பரிந்துரையில் கொண்டு வந்து விட்டேன் :)

   Delete
 8. காத்திருத்தலின் வலி..... பலருக்கும் இந்த வலி இருக்கிறது!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. இந்த வலியைப் போக்க மாத்திரை எதுவுமில்லையே :)

   Delete
 9. கல்யாணம் ஆகவதற்கு முன்னர்தான் காதல் மகிழ்ச்சியாக இருக்கும்போல........

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக ,கல்யாணத்தைப் பண்ணிக்காம இருந்து விட முடியுமா :)

   Delete