6 May 2016

கணவன் சுடச் சுட சாப்பிட மனைவியோட ஐடியா :)

                 ''என் பெண்டாட்டி புத்திசாலின்னு மதியம் சாப்பிடும் போதுதான் தெரிந்ததா ,எப்படி ?''
                 ''உனக்கு அனுப்பியிருக்கிற  ஹாட் பாக்ஸ்சை இன்னொரு பெரிய ஹாட் பாக்ஸ்சில்  வைத்து அனுப்பியிருக்காரே !''
அவர் கடமையைத் தானே  செய்தார் :)
             ''நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ''
             '' நடிகையை ,விரைவில் முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவேன்னு சொன்னாராம்  !''
கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா ' பிட் &ஃபைட்' தெரியணும் :)
         ''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
          ''படிக்கிற காலத்திலே, என்கிட்டே  'பிட் 'கேட்டு ,என்னோட 'ஃபைட் 'பண்ணி பரீட்சை எழுதிவனாச்சே நீ !''
'சாரி வித் பிளவுஸ் பிட்'னு போட்டா சந்தேகம் வராது !
              ''புதுசா வாங்கின சேலையை  கணவர்கிட்டே ஏன் காட்டினோம்னு இருக்கா  ,ஏன் ?''
               ''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன்  பிளவுஸ் சைஸ்  கடைக்காரருக்கு  எப்படி தெரிஞ்சதுன்னு கேட்கிறாரே !''

மூணு முடிச்சுப் போடலாம் ...!
மூணு 'போகம் ' விளையலாம் ..
கல்யாண  வை 'போகம்' ஒன்றுதான் ...
மிட்டாமிராசுதாராய் இருந்தாலும் !

20 comments:

 1. அருமை அருமை..................

  ReplyDelete
  Replies
  1. நீங்க சேலையைச் சொல்லவில்லைதானே :)

   Delete
 2. தீட்சை ஜோக் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நடிகையும் அதைதான் எதிர்ப்பார்க்கிறாரோ :)

   Delete
 3. ஒன்னு கைவிட்டாலு மற்றொன்று கைவிடாது என்ற நம்பிக்கைதான்...!

  தீ(ரா)ட்சை கொடுத்தாலென்ன... தண்ணீரையே ரசம் ஆக்கும் வித்தை கத்து வைத்திருக்கிறாரே...! சோதனை மேல் சோதனை போதுமட சாமி...!

  பழச இன்னும் மறக்கலயா...?

  கண்ணால அளந்திடுவாரு... ஒங்களமாதிரி இல்ல...!

  வள்ளி தெய்வாணை... பாமா ருக்மணி... சிந்து பைரவி... இவங்களுக்கும் ஒரே வை போகம் தானாம்... கணவருக்குத்தான் யோகம்...!

  த.ம. 3


  ReplyDelete
  Replies
  1. இந்த நம்பிக்கை டிபன் பாஸ்சுக்கு மட்டும் தானா :)

   ரசம் எங்கே ஆக்கினார் ?விரசமாய் அல்லவா காட்சி தந்தார் :)

   மறக்கக் கூடியதா அந்த சண்டை :)

   இது வேறையா ,அந்த கடைப் பக்கம் காலை உடைச்சிடுவேன் :)

   நமக்கு யோகம் அடி வாங்குவதுதானா :)

   Delete
 4. [[நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு]]

  குரு அல்ல! இந்த குரு என்றால் ஆசிரியர். நான் சொல்லும் குருக்கள் என்றால் உயர்ஜாதி கோவிலில் பூஜை செய்யும் ஐயர்கள்! சூத்திரக்கோவிலில் பூஜை செய்வது பூசாரி! பராசக்தியில் வரும் கோவிலில் பூஜை செய்வது பூசாரி! காஞ்சிபுரம் கோவிலில் பூஜை செய்த தேவநாதன் ஐயர் குருக்கள்....குரு அல்ல!

  ReplyDelete
  Replies
  1. குருக்கள் வர்றார் வழியை விடுங்க என்று சத்தியராஜ் கலாய்ப்பார் ,அது நினைவுக்கு வந்தது !அதாவது ,பலிக் கொடுக்கிற கோவிலில் இருப்பவர் பூசாரி ,சுண்டல் கொடுத்தால் குருக்கள் ,அப்படித்தானே :)

   Delete
 5. அருமை...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. சாரி வித் பிளவுஸ் என்றால் ரசிக்க முடியுதா :)

   Delete
 6. 01. அறிவுக்கொழுந்தியாள்
  02. அது அவரது கடமை.
  03. இப்பவும் அப்படித்தானோ....
  04. நியாயமான கேள்விதான்
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. நம்'மக்கு' இப்படி ஒரு கொழுந்தியாள் இல்லையே ஜி :)
   ஆனால் சிலர் ,அது மடமைன்னு சொல்றாங்களே :)
   தொட்டில் பழக்கம் விடுமா :)
   ஆனால் சந்தேகப் படுவது சரியா :)
   இதை சொன்னால் சில மதவாதிகள் ஏற்றுக்க மறுக்கிறார்களே :)

   Delete
 7. அட்டகாசமான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பிட் & ஃபைட் தெரியணும், சரிதானே :)

   Delete
 8. Replies
  1. ஹாட் பாக்ஸ்சை ருசித்து பார்த்தீர்களா :)

   Delete
 9. Replies
  1. பழசு என்றைக்கும் சுவைதானே அய்யா :)

   Delete
 10. மனைவியோட ஐடியா...நல்லாத்தான்..இருக்கு..ஆனா......

  ReplyDelete
  Replies
  1. ஆனா,என்ன ஆனா ,சொல்லுங்க :)

   Delete