18 May 2016

'சிம்'ரனை ரசித்தால் காது எப்படி கேட்கும் :)

 உண்மைக் காரணம் எதுவாய் இருக்கும் :)                 
                   ''வோட்டு போட்ட அடையாள மையை சுட்டு விரல்லே எதுக்கு வைக்கிறாங்க ?''
                    ''யார் ஜெயிக்கணும்னு நாம 'சுட்டிக்' காட்டுவதால் ஆகியிருக்குமோ ?'' 'சிம்'ரனை ரசித்தால் காது எப்படி கேட்கும் :)
                ''என்னங்க ,பால் பொங்கிறக் கூடாதுன்னு ,காஸ் அடுப்பை 'சிம் 'லே வைக்கச் சொன்னேனே.. என்ன  செய்துகிட்டு  இருந்தீங்க ?''
               ''டிவி யில் 'சிம்'ரன் படம் பார்த்து கிட்டிருந்தேன் !''

பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் :)
         ''ஏன்யா பெருசு ,பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு ஓயாம டயத்தைக்  கேட்கிறீயே ...வாட்சு நின்னு பத்து நிமிஷமாச்சு !''
           ''கோவிச்சுக்காதீங்க தம்பி  , எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க !''
இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை !
              ''கடைக்கு யாரும் வரலேன்னா, அந்த ஸ்வீட் கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''
              ''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''
              ''யாராவது  வந்தா ?''
               ''அப்பவும் ஈயை  ஓட்டித்தான் ஆகணும் !''
கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா :)
பிளைன் பிரியாணி வாங்குவதற்கும் 
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே  பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !

30 comments:

 1. 01. ஆஹா நினைப்பு பொழைப்பை கெடுத்துடாம...
  02. ஆஹா மாட்டிக்கிட்டான் போலயே..
  03. ஆஹா இந்தக்கடை பக்கம் போககூடாதோ....
  04. ஆஹா பெரிய ஆணியாக இருக்கும் போலயே....

  ஆஹா ஒரேநாளில் இரண்டா....

  ReplyDelete
  Replies
  1. சிம்ரன் படம் பார்க்கும் போதாவது ,அடுப்பு சிம் ஞாபகம் வந்திருக்க வேண்டாமா :)
   என்ன ஒரு துயரம் :)
   ஈயை ஒட்டாமல் எப்படி எடை போடுவாரோ :)
   ஜம்போ பிரியாணியா இருக்கும் :)

   இரண்டு கிடையாது ,இன்றைய சமையல் ஆகிக் கொண்டிருக்கும் போதே நீங்க மோப்பம் பிடிச்சிட்டீங்க :)

   Delete
 2. Replies
  1. சிம்பிளாய் இருந்தாலும் அழகுதானே அய்யா :)

   Delete
 3. Replies
  1. அதை ,ஈயடிச்சான் ஸ்வீட் கடை என்று சொல்லலாமா :)

   Delete
 4. ஜோக்ஸ் அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பிடிச்சது ...ஹிஹிஹி .ஜோக்கை விட ...:)

   Delete
 5. ஒனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது...!

  சிம்ம ராசின்னு சொன்னது இதுதானோ...!

  கோவிச்சுக்காதீங்க தம்பி... எ வேலையே வாட்ச்மேன் வேலைதான்...!

  ‘ஈ’வது விலக்கேல்...!

  நம்பி... ‘கை’ இருக்கு...! பிரியாணிய நம்பி...‘கை’யேந்தி வாங்கிச் சாப்பிடலாம்...!

  த.ம. 4  ReplyDelete
  Replies
  1. தேர்தல் முடிவைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)

   புலி பசித்தாலும் புல்லை தின்னாது ,சிம்மம் எப்படியோ :)

   இந்தாங்க வாட்சு ,பார்த்துக்கிட்டே இருங்க :)

   ஈயை விலக்காமல் சாப்பிட முடியுமா :)

   கூடவே ஒரு குவார்ட்டரும் நம்பி வாங்கி சாப்பிடுங்க:)

   Delete
 6. அடையாள மைக்கான காரணம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உன் நெஞ்சினை நோக்குதடா என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருதே :)

   Delete
 7. வேறு தேர்தல் இருந்தபோது அடையாள மையை நடுவிரலில் வைத்து அதைக் காட்டிக்கொண்டிருந்தார்களே அதுக்கு என்ன அர்த்தம்.?
  சிம்மில் வைப்பதற்கு பதில் சிம்ரனைப் பார்த்துக் கொண்டிருந்தாராக்கும்
  வாட்ச் நின்று பத்து நிமிழங்கள் ஆனால் நின்ற நேரம் தெரிந்தால் இப்போதைய நேரமும் தெரியுமே
  சமந்தா வந்தாலும் ஈ ஓட்டத்தானே வேணும் . அதுசரி சமந்தா பற்றி நிறையவே எழுதுகிறீர்கள் போல
  லட்டு போய் பிரியாணி ஆச்சா.

  ReplyDelete
  Replies
  1. வலது நடுவிரல் என்றால் ஓரு அர்த்தப் படுத்தலாம் .இடது விரலாப் போச்சே என்ன செய்வது :)
   மெய் மறந்து விட்டாரோ:)
   அதுக்குத்தானே ,நின்ற நேரத்தைக் கேட்கிறார் :)
   சரியாக சொல்வதைப் பார்த்தால் சமந்தாவை உங்களுக்கும் பிடிக்கும் போலிருக்கே :)
   பிரியாணி செம டேஸ்ட்தானே :)

   Delete
 8. பிளைன் பிரியாணி செம

  ReplyDelete
  Replies
  1. பிளைனே இப்படின்னா ....:)

   Delete
 9. இன்னுமா..சிம்“ரன்னை ரசிக்கிறார்..அடக் கொடுமையே.....

  ReplyDelete
  Replies
  1. நிஜத்தில் பேரன் பேத்தி எடுத்தாலும் கனவு கன்னி என்றும் இளமைதானே :)

   Delete
 10. Replies
  1. அருமை ,நாம் பார்க்கும் சிம்ரன் படமும்தானே:)

   Delete
 11. ரசித்தேன்..!
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. நம்மால் சுட்டிக் காட்டப் பட்டவர் தோற்று விட்டால் ,சுட்டு விரலை என்ன செய்வது :)

   Delete
 12. அருமை நண்பரே .

  ReplyDelete
  Replies
  1. படத்தில் உள்ள விஞ்ஞானியை பார்த்தால் ,நாடு சீக்கிரமே வல்லரசு ஆகிடும் போலிருக்கே :)

   Delete
 13. அடையாள மையையும், சிம் ரன்னையும், ஈயையும் ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. மை சிம் ஈயை ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 14. நேரம் கேட்பவர் தொல்லை தாங்காமல்
  மணிக்கூடு நின்று போச்சு என்றால்
  எப்ப இருந்து என்கிறாரே

  ReplyDelete
  Replies
  1. இவர் தொல்லை ஒரு தொடர்கதையாய் இருக்கே :)

   Delete