Saturday, 11 June 2016

கணவன் சொன்னா மட்டும் மனைவிக்கு பிடிக்காதது :)


                 ''என் பையன் சொன்னா சந்தோசப் படுற என் மனைவி ,அதையே நான் சொன்னா மட்டும் எரிஞ்சு விழுறா !''
                 ''அப்படியென்ன சொன்னீங்க  ?''
                ''தாயிற் சிறந்த கோவிலுமில்லைன்னு  தான் !''

வாயிலே என்ன கொழுக்கட்டையா  :)
           ''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த  ,நீ ஏன் சத்தம் போடலே ?''
             ''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''

பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!
கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரிலே  பெருகி விட்டார்கள் !

               

27 comments:

  1. ஆளுக்கொரு நீதி!

    ஹா... ஹா.... ஹா...

    ஆம்... ஆம்... ஆம்...

    ReplyDelete
  2. சம்சாரம் மின்சாரம்... தாயுக்கு முன் தாரமோ...?!

    ஆயுள் நீள வேண்டுமே...!

    ஜீனி(யி)லேயே சர்க்கரை இருப்பது சகஜம்தானே... கருத்திருமகன்...!

    த.ம. 3

    ReplyDelete
  3. எரிஞ்சு விழுகிறதுக்கான காரணம் தெரிஞ்ச போச்சு.....

    ReplyDelete
  4. 01. எல்லா குடும்பத்துலயும் இதுதான்
    02.அது முக்கியம்தான்
    03. உண்மைதான்

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை. மனைவிக்குப் பிடிக்காதது மிகவும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  6. யாருடைய தாய் என்று விளக்கி இருக்க வேண்டுமோ
    ஆயில்புல்லிங் எப்போது பீரோ புல்லிங்போதா
    எல்லாபாட்டன்களும் திரு உடையாரா

    ReplyDelete
  7. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete