2 June 2016

வயசுப் பொண்ணைக் கடையில் தனியாய் விடலாமா :)

 பதிவர் திரட்டியில்  ,இரண்டாம் இடத்துக்கு  முன்னேற  ஊக்கம் தந்த ,வலையுலக உறவுகளுக்கு  ஜோக்காளியின் மனம் கனிந்த நன்றி !


பதிவர்கள்


 • Rank / User
 • Karma
 • Submissions
 • Published
 • Comments
 1. sukumaran's avatar1

  sukumaran

  1021036.00
  321
  318 (99%)
  0
 2. bagawanjee's avatar2

  bagawanjee

  1010249.00
  171
  155 (90%)
  0மாற்றம் நல்லாவே தெரியுதே :)             
                 ''நம்ம தலைவர் ஆளும் கட்சிக்கு  தாவப் போறார் போலிருக்கா ,ஏன் ?'' 
                ''பெட்ரோல் விலைஏற்றம்னு  சொல்லிக்கிட்டு இருந்தவர் ,விலைமாற்றம்னு  சொல்லத் தொடக்கி விட்டாரே !''
வயசுப் பொண்ணைக் கடையில் தனியாய் விடலாமா :)
            ''நான் பஜாருக்கு போய் சரக்கு வாங்கப் போறேன் ,கடையைப் பார்த்துக்கோன்னு சொன்னா , ஏன் முடியாதுன்னு சொல்றே ?''
           ''நேற்று ஒரு காலிப் பய வந்து லிப் 'லாக் 'கிடைக்குமான்னு கேட்கிறாம்பா !''
பணம் இருந்தால்தான் மனதில் பலம் இருக்குமோ :)
        ''அவர் ,ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் போனதில் மனநிலை பாதிக்கப் பட்டிருக்காரா ,எப்படி ?''
          ''ஷேர்  ஆட்டோவில்கூட ஏறமாட்டேன்னு  சொல்றாரே  !''
வாத்தியார் ரொம்ப விவரம்தான் :)
              ''நீங்க வாத்தியாரா இருக்கிற பள்ளியில்தான் , மாநிலஅளவில் முதல் இடம் பிடித்த  உங்க பொண்ணும் படிக்குதா ?''
              ''இல்லே ,வேற ஸ்கூல் ! ''
              ''அதானே பார்த்தேன் ,நல்லா  சொல்லித் தர்றதுக்கு உங்க  ஸ்கூல்லே யாரும் இல்லையே !''
தூளி அசைந்தால் தாயின் தூக்கம் ?
தூளியில் தூங்கும் குழந்தை 
தாய்க்கு தந்தது ...
ஒரு துளி தூக்கம் !
பொருத்தமான படம் அமைய உதவிய ...என் .பாண்டியன்  அவர்களுக்கு நன்றி !

16 comments:

 1. மாற்றம்... மாற்றம்... வேண்டும் என்று பெருத்த ஏமாற்றம்தான் மிச்சம்...! விலை மதிப்பில்லா பொருளாகி... இனி தாவித் தாவியாவது பார்க்க வேண்டியதுதான்...!

  லிப் ஸ்டிக் இருக்கு... லிப் 'லாக் ' இருக்கான்னு தெரியல... பஜாருக்குப் போயி அந்த பஜாரிக்கிட்ட கேட்டுட்டு வாரேன்...!

  ஒருத்தரையும் விட மாட்டேங்கிறாரு...! யாரப் பாத்தாலும் மார்கெட் நிலவரம் இப்ப எப்படி இருக்குன்னு கேக்கிறாரு...!

  நல்லா சொல்லித் தந்தா... நல்லா கேக்கறதுக்கு ஆளில்லை...!

  துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா... நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா... தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. வாக்காளர்கள் பணம் வாங்கக்கூடாதுன்னு சொல்லிட்டு ,கோடிக்கணக்கில் கட்சிகளே பணம் பெற்றால் எப்படி மாற்றம் வரும் ?ஏமாற்றம்தான் வரும் :)

   இதெல்லாம் கெட்டு வாங்கிற சமாச்சாரமா :)

   மெண்டல் ஆயிட்டாரோ :)

   இரண்டும் சரியாக எங்கே அமையுமோ ,அங்கே வெற்றி தேடி வருமோ :)

   அடியைக்கூட தாங்கிக்கலாம் ,உன் அழுகையை எப்படி தாங்கிக்க முடியும் :)

   Delete
 2. வார்த்தைகளில் இருக்குது சூட்சுமம்!

  லிப் லாக்கா? அப்படி ஒரு பண்டம் இருக்கிறதா? இல்லை வம்பா?

  ஹா.... ஹா.... ஹா...

  ஹா.... ஹா... ஹா...

  ஓ....

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் ,பாமரனுக்கு பட்டை நாமம்தான் :)

   வயசு பிள்ளைக்கு வம்பு பண்ண சொல்லியாத் தரணும்:)

   ஒரு ஹர்சத் மேத்தா பல்லாயிரம் பேரை பைத்தியமாக்கி விட்டாரே :)

   வீட்டிலே இவர் நல்ல வாத்தியாரா இல்லை :)

   தூளி நிலவால் ,தூக்கம் ஆனது கனவு :)

   Delete
 3. அட!விலைமாற்றம் சூப்பர் வார்த்தை.உமையவே ஆளுங்கட்சி உங்களுக்கு அவார்ட் கொடுக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. ஆளும்கட்சி ஆட்டோவை அனுப்பாமல் இருந்தால் சரி :)

   Delete
 4. தூளியில் தூங்கும் குழந்தை அருமை...

  அதானே வயசுப் பெண்ணைக் கடையில் தனியா விடலாமா!!!ஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தாயும் சேயும் நலம் ,இருவருக்கும் ஆனந்த தூக்கம் :)

   வீட்டிலேயே விட முடியலே ,கடையில் விடலாமா :)

   Delete
 5. பதிவர் திரட்டியில் இரண்டாம் இடம் வந்தமைக்கு வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. இலாப நோக்கம் இன்றி திரட்டியை நடத்தி வரும் ,நம்ம, வேலூர் மகேந்திரன் ஜி அவர்களுக்கும் ,உங்களுக்கும் நன்றி :)

   Delete
 6. பதிவர் திரட்டியில் இரண்டாம் இடம் பெற்றதுக்கு வாழ்த்துகள்! நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. பதிவர் திரட்டியில் ஒரு பதிவு போட்டால் ,கர்மா என்பதன் கீழ் அறுபத்தாறு பாய்ன்ட் ஏறுகிறது ,அப்புறம் ஏதோ சதவீதக் கணக்கு வேறு !அதென்ன 'கர்மா '? திரட்டியின் அதிபர் சகோ மகேந்திரன் ஜி விளக்குவாரா :)

   Delete
 7. வாழ்த்துகள் ஜி விரைவில் ஒன்றைப் பிடியுங்கள்.

  01. இப்படியும் சொல்லலாமோ... ?
  02. ஆஹா இப்படியும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்களா ?
  03. இப்படியொரு வியாதியா ?
  04. காலை வாறிட்டாரே....
  05. ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஒன்றைப் பிடிக்கத்தான் ஆசை ,ஆனால் ....:)

   எதிர்கட்சி விலையேற்றம்,ஆளும்கட்சி விலைமாற்றம் என்றுதானே சொல்கிறது :)
   அவன் வயசு அப்படி கேட்க வைக்குதே :)
   புதிய பொருளாதார வியாதி :)
   இவர் கற்றுக் கொடுப்பது அவ்வளவுதான் :)
   படமும்தானே :)

   Delete
 8. ஹாஹாஹா! அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வயசுப் பிள்ளையை நீங்களும் ரசித்தீர்களா :)

   Delete