23 June 2016

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலுமா சண்டை வரும் :)

இவன் டயத்துக்கு ஸ்கூலுக்கு வர மாட்டான் போலிருக்கே :)        
                '' அதெப்படி ஒரே பொருள் ,காலையில் எரிச்சலும்  ,மாலையில் சந்தோஷமும் தர முடியும்  ?''
              ''எங்க ஸ்கூல் பெல் தருதே !''
சுவீ(ட்)கார  விழா  என்று அழைத்து இருப்பார்களோ :)              
          ''பந்தியில் சாப்பாட்டுக்கு முன்னால் சுவீ ட் மட்டுமே வைப்பார்கள் ,நீங்க காரமும் வைக்கிறீங்களே ,ஏன் ?''
          ''இந்த சுவீகார விழாவை நீங்க மறக்கக் கூடாதுன்னுதான் !''

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலுமா சண்டை வரும் :)
          ''காசிக்கு  முதல் தடவை வந்துட்டு , இந்த படித்துறையில்  ஏற்கனவே குளித்த மாதிரி இருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''இந்த  'நாரதர் படித்துறை'யில் குளிக்கிற  தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத் தான் இருக்கும்னு  சொல்றாங்களே !''

இந்த கேள்விக்கு பதிலேது :)
''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''

உலக அதிசயம்னா சும்மாவா ?
பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்கச் செலவோ ,கோடிக்கணக்கில் !

24 comments:

 1. Replies
  1. பதிவிட்டவுடன் முதலில் வந்தமைக்கு நன்றி :)

   Delete
 2. அடடே...

  அடடே.... அடடே...

  இப்படி வேற ஒண்ணு இருக்கா!

  'எலி'மையான கேள்வி!

  ஆனா அதுலயும் பைசா இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. இவன்தான் மணிப் பயல் போலிருக்கா :)

   ஸ்வீட்டுக்கு ஒண்ணு காரத்துக்கு ஒண்ணு ,அதான் ரெண்டு அடடேவா :)

   முதலில் நானும் நம்பலே ,ஆனால், நாரதர் காட் என்று ஒரு படித்துறை இருக்கு,இந்த நம்பிக்கையும் இருக்கு ,யாரும் அங்கெ குளிப்பதே இல்லை:)

   பதில்தான் தெரியலே :)

   அதுவும் நம்ம ஊரில் என்றால் , கமிஷன் நாற்பது சதம் 'பைசா' பார்த்து விடுவார்கள் :)

   Delete
 3. பையன் மணி மணியா படிக்கிறான்னு சொன்னது இதுதானோ...?!

  அப்ப... பையன் சு(ப)...வீ...யா இருப்பான்னு சொல்லுங்க...!

  இன்னைக்கு சண்டேன்னு சொல்றீங்களா...?!

  காயப்போடலைன்ன எலி காய்ந்து போயிடுமே...! இரண்டுக்குமே வெயில்தான் காரணம்...!

  'பைசா 'கோபுரம் சைசா இருக்கனுமுனா... பைசா செலவு செஞ்சுதானே ஆகனும்...!

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. இவன் பெயர் மாலை மணியா இருக்குமோ :)

   சுப வீ மாதிரி நிறைய படிச்சு ,நாலு பேருக்கு புரியுற மாதிரி சொன்னா ,நல்லாவே வருவான் :)

   இன்னிக்கு மட்டுமில்லே என்னைக்கும் சண்டேதான் :)

   சுயநலம் பாருங்க ,இவருக்குத் தேவையான எள்ளுதான் காயணுமாம்:)

   நேரா நின்னா ,எவன் உலக அதிசயம்னு பார்க்க வருவான் :)

   Delete
 4. Replies
  1. நம்ம ஊர்லே எத்தனையோ கட்டிடம் சாய்ந்த நிலையிலே இருக்கு ,அங்கே...லேசா சாய்ந்து இருப்பதை உலக அதிசயம்னு சொல்றாங்களே ,ரசிக்க முடியுதா :)

   Delete
 5. 01.உண்மைதான்
  02. பொருத்தமானதே...
  03. ஹாஹாஹா
  04. எலி காய‘’போட்டு’’ போனதா ?
  05. அவசிமில்லையோ...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் அப்படித்தானா :)
   தின்பதற்கு கசக்குமா :)
   போன ஜென்மத்தில் அங்கே குளித்திருப்பாரா :)
   அள்ளிட்டுப் போக வந்தால் ,கேட்டுச் சொல்றேனே :)
   சாய்வதில் ஒன்றும் ரகசியமில்லையே :)

   Delete
 6. ஹாஹாஹா! பள்ளிக்கூட பெல்லுன்னா சும்மாவா? சுவீகாரம் ரொம்பவே ரசித்தேன்! சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பள்ளி மணியோசை இருவேறு உணர்வுகளைத் ததததா?ஸ்வீட் காரம் இருவேறு ருசிகளைத் தந்ததா ?நன்றி :)

   Delete
 7. சண்டை இல்லாத கணவன் மனைவி லோகத்தில் லேது?? நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. அடிக்கிற கைதான் அணைக்கும்னு சும்மாவா சொன்னாங்க :)

   Delete
 8. Replies
  1. கருத்து போட்ட கையோட அட்டகாசமாய் இன்னொரு காரியமும் எப்போதும்செ ய்வீர்களே !அது ஏன் மிஸ்ஸிங் ஆச்சு :)

   Delete
 9. Replies
  1. நீண்ட இடைவெளிக்கு பின் வந்து ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அதென்னவோ ,இரண்டு நாள் தாமதமாவே ரசிக்கிறீங்க :)

   Delete
 11. சண்டை இல்லேன்னா....எப்படி?

  ReplyDelete
  Replies
  1. அங்கே குளிக்காமலே சண்டை வருதே ,அதை தடுக்க குளியல் உண்டான்னு தெரியலே :)

   Delete
 12. கபாலி என்ற குப்பையை பற்றி எப்போன்னா எழுதப்போகிறீர்கள்? நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நான் வேறு கழுவி கழுவி ஊற்றணுமா ?செத்த பாம்பை அடிக்கிற பழக்கம் எனக்கில்லை :)

   Delete