28 June 2016

கட்டில் காலோட கால்கட்டு :)

              ''உன் வீட்டுக்காரர் காலை ஏன்  கட்டில் காலோட சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்கே ?''
             ''இல்லைன்னா ,அவர் பாட்டுக்கு கதவை திறந்து போட்டுட்டு  தூக்கத்தில்  நடந்து போய் விடுகிறாரே !''

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?
          ''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''
          ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
                (படத்திலுள்ள பெண்ணுக்கும்  மேற்படி ஜோக்குக்கும்  மயிரளவு கூட சம்பந்தமில்லை :) 
மனைவியிடம்  'கடி 'வாங்கியதால் வந்த மறதியோ ?
         '' ஆயிரம் கொசு கடித்தாலும் கடிக்கிற உணர்வே தெரிய மாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
         ''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !
          '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
          ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''

இது ஒரு தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !
என் ஆதர்ச குருவும் பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகனந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !

22 comments:

 1. இதுக்குத்தான் சங்கிலி முருகனைக் கட்டிக்காதேன்னு சொன்னா கேட்டாத்தானே...!

  ‘கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்... இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ...?!’
  மயிரளவில் உயிர் தப்பிய மயிரழகி வாழ்க...!

  என்ன கொசு விரட்டி கிரீம்... அந்த பேரச் சொல்லுங்க...!

  உள்ளே போன எதுவும் வெளிய வராம இருக்காதுங்கிறாரு இவரு...!

  ஆசைமகன் நூறு பேரை உருவாக்கிட்டுப் போலாமே... ! துறவிதான் இப்ப எல்லாத்தையும் துறந்திடுறாங்களாம்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. அந்த சங்கிலி முருகன் இவர்தானா :)

   யாரிடமிருந்து தப்பினார் :)

   அதானே தடவினாலே கொசு கடிப்பது நிற்கவில்லை :)

   ரொம்ப நாள் வாழ்வார் அவர் :)

   இல்லத்தை துறவாதவர் துறவியா :)

   Delete
 2. பாவம்.

  ஹா... ஹா... ஹா...

  அட, இப்படி ஒரு உப யோகமா?

  சரியாத்தான் சொல்றார்...

  ஆ.....

  ReplyDelete
  Replies
  1. இப்படி உபயோகம் இருந்தால் நல்லதுதானே :)

   Delete
 3. 01. நல்ல யோசனைதான்
  02. இவளுக்கு டவுசர் நீளமில்லையே...
  03. இனிமேல் பேஷ்ட் செலவு மிச்சம்
  04. அடடே..
  05. ஊருக்குத்தானே உபகாரம்

  ReplyDelete
  Replies
  1. அம்மாவை ஒருவேளை அய்யாவால் சமாளிக்க முடிய வில்லையோ :)
   அதனால் என்ன அழகாய் இல்லையா :)
   அது வேஸ்ட் செலவோ :)
   மீண்டும் பேஸ்ட்டா:)
   தனக்கு வந்தால் அபகாரமா :)

   Delete
 4. முத்தான நகைச்சுவைகள் நன்று

  ReplyDelete
  Replies
  1. முத்துக்களை ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 5. பெஸ்ட் பகிடி நல்லா சிரித்தேன்
  முடி...வாய்......
  மற்றவைகளுடன் செர்த்து
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. பேஸ்டுதான் இருப்பதில் பெஸ்ட்டோ:)

   Delete
 6. அடடா.. கதவை திறந்து போட்டுட்டு.--எவ்வளவு பறந்த உள்ளம்....

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு தாராள மனசு:)

   Delete
 7. படம் மிக அருமை ...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி ,நானும் ரசித்தேன் ..கூந்தலை :)

   Delete
 8. தூக்கத்தில் நடந்து வேறங்காவது போய்விடக் கூடாதே என்னும் முன்னேற்பாடு...!
  வாய் நீளம் என்றாலும் அகலமாய்த்தான் இருக்கும்.
  இல்லாவிட்டாலும் பல்லில் கொசு கடித்தாலும் தெரியாது.
  சன்னியாசம் வாங்குபவர் எல்லாம் விவேகாநந்தராக முடியுமா

  ReplyDelete
  Replies
  1. ஒரேயடியாக போய்விட்டால் என்ன செய்ய முடியும் :)
   நீள அகலம் பொருத்தம்தான் :)
   என்னைக்கு தெரிந்தது :)
   சந்நியாசம் வாங்காமல் ஆக முடியுமா :)

   Delete
 9. ஹாஹாஹா! அருமையான ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. நாக்கு நம்மை கவிழ்த்து விடும்தானே :)

   Delete
 10. //கட்டில் காலோட கால்கட்டு//
  கட்டிலையும் இழுத்துட்டே நடந்துடுவார். அதனால, அவள் தன் காலோடவே கட்டியிருக்கலாம் பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே ,அவரிடம் சொல்லி விடுகிறேன் :)

   Delete
 11. anaithum rasithom ji.....

  key board language settings corrupt aagiduchu. so not able to type in tamil. oru sample parkareengala ji......eg. bhagavanji jokkali ithaith thamizil adikarom parunga......

  யெபயஎயயதே தடிமமயயட hahahahahah eppadi irukku???!!!!!

  ReplyDelete
  Replies
  1. 'அமுது' சரியாக வரவில்லை ஜி ,அதாவது தமிழுக்கு அமுதென்றுதானே பெயர் :)

   Delete