30 June 2016

பெண்டாட்டியைத் தேடிக்கலாம் ,நகையை :)

 தம்பதிகளுக்கு  'அப் அன் டௌன் ' டிக்கெட் வேண்டாமாம் :)               
           ''நிலவுக்குக் கூட்டிப் போகும் திட்டம்  எதுவும் இருக்கான்னு ஆர்வமா கேட்கிறீங்களே ,போகப் போறீங்களா ?''
            ''பெண்டாட்டியோட போய் ,நான் மட்டும் திரும்பி வரலாம்னு இருக்கேன் !''

புத்திசாலிப் பசங்கதான் :)            
              ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
               ''முட்டாளோட கேள்விக்கெல்லாம்  பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

நல்ல பிக் அப்தான் :)
           ''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா' நல்ல பிக் அப் 'தானே ?இதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க ?''
         ''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''

பெண்டாட்டியைத் தேடிக்கலாம் ,நகையை :)
          ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
           ''சரி நான் என்ன செய்யணும் ?''
          ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''

பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?
பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !

26 comments:

 1. Replies
  1. காதலித்தால் மட்டும் போதுமா என்பதைப் போல ரசித்தால் மட்டும் போதாது என்று முதல்த ம வாக்கு அளித்தமைக்கு நன்றி :)

   Delete
 2. நிலவு என்ன காசியா ஒன்றை விட்டு விட்டு வருவதற்கு!

  ஹா... ஹா... ஹா..

  அடப்பாவமே..

  அடப்பாவி!

  அப்படியா...

  ReplyDelete
  Replies
  1. காசியில் போய் விட்டாலும் திரும்ப வந்து விடலாம் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது ,அதான் :)

   Delete
 3. ஒரு நிலவைக் கூட்டிக் கொண்டு போய் இன்னொரு நிலவில் விட்டுவிட ஆசை...!

  நன்றாகப் புரிந்து கொள்ளச் செய்து விட்டாரே...!

  கவலையை விடுங்க... செலவு மிச்சம்தானே...!

  பெண்டாட்டி போனா போகட்டுமா...? பேச்சு மாறக்கூடாது... இந்தாங்க ஒங்க நகை...!

  கன்னுக்குட்டிக்குப் பாலக் கொடுக்க விடனுமுல்ல...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. ஹனிமூன் வரைதான் நிலவு ,அதன் பிறகு பகல் கனவு :)
   இவரல்லவோ திறமை மிக்க ஆசிரியர் :)
   பணம் கிடக்கட்டும் மானம் போயிடிச்சே :)
   பெண்டாட்டியை அவர் வைத்துக் கொண்டாரா :)
   அப்படின்னா தாய் அழாம இருக்கட்டும் :)

   Delete
 4. Replies
  1. ஏன் இந்த பெயரைத் தவிர்க்கிறீர்கள் :)

   Delete
 5. Replies
  1. பிக் அப் அருமைதான் :)

   Delete
 6. // தம்பதிகளுக்கு 'அப் அன் டௌன் ' டிக்கெட் வேண்டாமாம் :)//
  நிலவில் பெண்கள் தொகை பெருகிவிடும். அப்புறம் அங்கே அல்லி ராஜ்யம்தான்!

  மறதியில் ‘காமக்கிழத்தன்’ பெயரில் பின்னூட்டம் இட்டுவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அங்கே இருந்து விட்டு போகட்டுமே :)

   Delete
 7. நமக்கு முன்னேரே வந்துவிடும் சக்தி பெண்களுக்கு உண்டு ஜீ... விடாது கருப்பு

  ReplyDelete
  Replies
  1. அப்படி நடந்தால் நம்ம அங்கே இருந்து விடலாமே :)

   Delete
 8. 01. பொண்டாட்டியை தொலைக்க அவ்வளவு தூரமா ?
  02. அவருதான் விடையைச் சொல்லிட்டாரே... ?
  03. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிப்பான் போலயே...
  04. அப்படினா கூட்டிக்கிட்டு போனவனுக்கு என்னதைக் கொடுக்குறது ?
  05. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. திரும்பி வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணம்தான் :)
   அதானே விடையை புரிந்து கொள்ளாத பசங்க யாரும் இல்லையே :)
   குறி ஒண்ணுக்கு ரெண்டு விழுந்தால் கசக்கவா போகிறது :)
   முதல் நபருக்கு இவன் பரவாயில்லையே :)
   உங்க அனுபவத்திலும் உண்மைதானா இது :)

   Delete
 9. நல்ல ஹனிமூன் அல்லது மணி மூன்??!!! ஹஹஹ்

  ஹஹஹாஹ்...


  அவன பிக் அப் பண்ணிடுவாங்களே போலீஸ்
  லாஸ்ட் அருமை...
  ReplyDelete
  Replies
  1. தனி மூன் என்று சொல்லலாம் :)

   வயசுக்கு வந்தவங்களை போலீஸ் எப்படி பிடிக்கும் :)

   Delete
 10. ஹாஹாஹா! ரசிக்க வைத்த ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பிக்கப் அருமைதானே :)

   Delete
 11. நிலா பாவம் மனைவியை திரும்ப பூமிக்கு அனுப்பிட்டு கணவன் அங்கேயே இருக்கறது உத்தமம்

  ReplyDelete
  Replies
  1. மனைவி அங்கிருந்தால் நிலாவே பாவமா ?இந்த கோணத்தில் கணவன் யோசிக்கவே இல்லையே :)

   Delete
 12. அன்றிலிருந்து இன்று வரை
  நல்ல பிக்-அப் தான் - அது
  காதலர் ஓடிப் போக...

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளி தளம் பிக் அப் ஆனதை சொல்கிறீர்களா :)

   Delete
 13. ஆகா...ஆகா...எங்கேயோ உதைக்குதே....!!!!!!

  ReplyDelete
  Replies
  1. அது உதைத்து விட்டு போகட்டும் ,இந்த பதிவுக்கு .. கடைசி ஒரு மணி நேரத்துக்கு த ம மகுடம் சூட்டியமைக்கு நன்றி :)

   Delete