4 June 2016

முதல் பார்வையில் வந்தால்தான் காதலா :)

 அங்கேயும் இதே தொழில்தானா :)           
             ''கொஞ்ச நாளா ஆளையே காணலையே ,பிச்சை எடுப்பதை விட்டுட்டியா ?''
             ''அக்கினி வெயில் தாங்க முடியலே ,ஊட்டிக்குப்  போயிருந்தேன் !''
எத்தனை அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
            ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு என்னடா யோசிக்கிறே ?''
            ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதான் தர்றாங்க ,தொடர்ந்து பெய்ற மழையை ஏன் 'அடை'மழைன்னு சொல்றாங்க ?''
எறும்பு வராத காரணம் என்ன :)                    
         ''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''
        ''வீ ட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''
முதல் பார்வையில் வந்தால்தான் காதலா :)
        ''கெமிஸ்ட்ரி லேப்புக்கு வந்தும், அவளையே ஏண்டா சைட் அடிச்சுக்கிட்டே இருக்கே ?''
       ''எனக்கும் அவளுக்கும் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகணும்னுதான் !''
தேவைப் பட்டால் கொலையும் செய்வான் :)
மலருக்கு துளியும்  சேதமின்றி 
துளித்துளியாய் தேனை சேர்ப்பது  தேனீ ...
புகை போட்டு அதை விரட்டி தேனை 
புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதன் !

22 comments:

 1. Replies
  1. அதிகாலையில் ,நீண்ட நாளுக்குப் பின் சிரித்து மகிழ்ந்தமைக்கு நன்றி, ஜெபரத்தினம் ஜி :)

   Delete
 2. //''கொஞ்ச நாளா ஆளையே காணலையே ,பிச்சை எடுப்பதை விட்டுட்டியா ?''
  ''அக்கினி வெயில் தாங்க முடியலே ,ஊட்டிக்குப் போயிருந்தேன் !''//
  அங்கேயும் பிச்சை எடுத்திருப்பாரே?!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சிம்லாவுக்கு போவாரோ :)

   Delete
 3. // ''எனக்கும் அவளுக்கும் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகணும்னுதான் !''//
  படிச்சி உருப்பட்ட மாதிரிதான்!

  ReplyDelete
  Replies
  1. 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகவில்லை என்று ,ஆசிட் வீசாமல் போனால் சரி :

   Delete
 4. // ''எனக்கும் அவளுக்கும் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகணும்னுதான் !''//
  படிச்சி உருப்பட்ட மாதிரிதான்!

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும் :)

   Delete
 5. அஞ்சு செட் "ஹா... ஹா... ஹா... பார்ஸல்....!!

  :)))

  (ஸ்வீட் கடைல எறும்பு வராமலிருக்க எறும்பு மருந்து போட்டிருப்பாங்களோ... டவுட்டு!)

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு செட்டா....:)

   மாவிலேயே கலந்து இருப்பாங்களோ :)

   Delete
 6. ஒரு வேலை ஊட்டிக்கு போய் பிச்சை எடுத்து இருப்பாரோ...? பணக்கார பிச்சைக்காரர்கள் பெருகிவிட்டார்களே...

  ஸ்வீட் கடையில லெக்ஷ்மண் கோடு போட்டு இருப்பார்களோ....

  கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்டும் அதே நேரம் ஃபெயிலும் ஆகிடப்போது:)

  த+ 1

  ReplyDelete
  Replies
  1. அவர்களாவது அனுபவிக்கட்டுமே :)

   எறும்பு சாக்பீஸ் பெயர் அதுவா :)

   பாஸும்,பெயிலும் சங்கமமா :)

   Delete
 7. 01. வாழ்க்கையில என்ஜாய்மெண்ட் வேணும்
  02. நியாயமான கேள்விதான்
  03. அதுவும் இளிச்சவாயனைப் பார்த்துதான் வருது.
  04. இதுவும் சரிதான்
  05. உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. குறிப்பா ,அவங்களுக்கு வேணும் :)
   அடை தின்ன வாய்க்கு பதில் கிடைக்கட்டும் :)
   எறும்புக்கும் தெரியுதோ :)
   அங்கே பார்த்துகிட்டே, ஆஸிட்டைமடியிலே கொட்டிக்காம இருக்கச் சொல்லுங்க :)
   பேராசை மனிதனாச்சே :)

   Delete
 8. Replies
  1. கண்ணழகியையும் தானே :)

   Delete
 9. ‘பிச்சை புகினும் ஊட்டி நன்றே...’ - புதிய வெற்றிவேற்கை...!

  ‘அடடா மழைடா அட மழைடா...’

  சீனிவாசன் அவன் தானே...!

  ‘உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு...’ நமக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகட்டும்...!

  ‘வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத்தான் தண்டனை...’

  த.ம. 7  ReplyDelete
  Replies
  1. ஊட்டி யாரைத்தான் வர'வேற்காமல்' விட்டது :)
   சாப்பிட்டு நனைவோமா :)
   புற்றுதான் கோவிலா :)
   உயிரோடு எப்படி கலப்பது :)
   குடிக்காட்டியும் மலர் வருந்துமே :)

   Delete
 10. அக்கினி வெயில் அவரையும் ஊட்டிக்கு அழைத்துவிட்டது! ஹாஹாஹா! அருமையான ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு இருக்கிற வசதிக்கு டார்ஜிலிங்க் போகலாம் :)

   Delete
 11. அந்த கண் மை நிறைந்த கண்களை பார்த்துக் கொண்டே இருந்தால் கெமிஸ்ட்ரி ஒர்க ஆகி இருந்தா.... இன்னேரம்... நடிகையை பர்த்தகண்கண்.. எல்லாம்....!!!!

  ReplyDelete
  Replies
  1. நடிகையை எல்லோருமா நேரில் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் :)

   Delete