7 June 2016

நிச்சயம் ,இவர் ' சிலுக்கு ' ரசிகர்தான் :)

 ஏலம் முடிந்தது என்று சொன்னவர் :)            
                ''ஒரு தரம் ,ரெண்டு தரம் ,மூணு தரம் ..எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு கல்லறையிலே எழுதியிருக்காங்களே ஏன் ?''
                ''இறந்தவர், ஏலக்கடை வைத்திருந்தாராமே !''

அப்பன் குணம் அறிந்த பிள்ளைங்க  :)
             ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாடும் போது, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
            ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா  நாயேன்னு கேட்கிறானே !''

நிச்சயம் ,இவர் ' சிலுக்கு ' ரசிகர்தான் :)
            ''அவர்,தற்கொலை செய்துகொண்ட கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் .. தூக்க மாத்திரை  அதிகமாய்  உண்டு துக்கத்தை ஏன் கொடுத்தாய்னு புலம்புறாரே !''

முதல் அழுகை ,தாய்க்கு ஆறுதல் !
பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !

20 comments:

 1. "முதல் அழுகை ,தாய்க்கு ஆறுதல்!

  பிறந்ததும் சிசு அழுதது ...
  தாயின் வலியை உணர்ந்து!" என்ற
  உண்மையை வரவேற்கிறேன்.
  உண்மையான உணர்வு வரிகள்!

  ஒரு நகைச்சுவைக்கும்
  அடுத்த நகைச்சுவைக்கும்
  இடையே
  ஓரிரு வரி (Line) இடைவெளி இருப்பின்
  பதிவின் அழகு கூடுமே!
  நான் சொன்னதில் தவறு இருப்பின்
  அடுத்து மதுரைக்கு வரும் வேளை
  எனக்கு நல்ல அடி போடுங்க...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் யோசனையை செயல் படுத்திவிட்டேன்,அழகு கூடியிருக்கா :)

   இங்கே ,மதுரையில் ..அந்த சொக்கனே பிரம்படி பட்ட வரலாறு உங்களுக்கு தெரியும்தானே :)

   Delete
 2. ஒன்னாம் தாரம்... இரண்டாம் தாரம்... மூனாம் தாரம்... எல்லாம் கல்லறையில் அழுதது போதும்... கல்லறை காய்றதுக்கு முன்னாடி அடுத்த வேலையப் பாருங்க...!

  ஒங்களால முடியல... சரி விடுங்க... அப்பனுக்குப் பிள்ளை தப்பி பிறந்துட்டான்...!

  ‘என்னை யாரும் தூங்க விடலை... அதனால்தான்... சாரி... சரி... நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு... குடிங்க... குடிச்சிக்கிட்டே கவலைய மறங்க...!’

  அழுத பிள்ளைதான் பால் குடிக்குமுன்னு சொல்றாங்களே...! அதனால்தான்...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. அடப் பாவி மனுஷா ,செத்தாதானே தெரியுது உனக்கு இத்தனை வாரிசு இருக்குன்னு :)

   அப்பனுக்கு பிழைக்கத் தெரியலே ,பிள்ளை நல்ல வருவான் :)

   ரசிகர்களை தூங்க விடலையே நீ ,உனக்கெப்படி தூக்கம் வரும் :)

   பிறந்ததும் முதல் வேலை ,வயிற்றை நிரப்பிக் கொள்வதுதானா :)

   Delete
 3. ஏலக்காய் மரம் வைக்கவில்லையா?

  காட்டிக் கொடுக்கறானே!

  ஆ! நல்ல இருக்கே வரிகள்!

  உணர்ந்தால் சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. கல்லறை இன்னும் காயலே ,ஏலக்காய் மரமும் நட்டா போச்சு :)

   குலத தொழில் பாகம் படுமோ :)

   சோகத்திலும் கவிதை வரும் :)

   பிறப்பிலேயே உணர்ந்ததால் மறக்க மாட்டான்(ள்) :)

   Delete
 4. அனைத்தும் அருமை! ரசித்தேன் நண்பரே!
  த ம காணவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் அருமைதான் ,ஆனால் ,நம் அனைவர் தளத்திலும் இருந்த த ம பட்டையைக் காண வில்லையே ,எங்கே போய் மனு கொடுப்பது :)

   Delete
 5. சிலுக்கு படத்தை பார்த்தவுடனே தெரிந்தது. அவர் சிலுக்கு ரசிகர்தான்னு

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் சிலுக்கை மறக்கவில்லை போலிருக்கே :)

   Delete
 6. அனைத்து நகைச்சுவையும் ரசித்து சிரிக்க வைத்தன பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாப்பா படமும் பிடித்து இருக்கணுமே :)

   Delete
 7. அனைத்த் நகைச் சுவைகளையும் ரசித்தேன்/ ஆனால் ஒவ்வொன்றுக்கும் கருத்திட கற்பனை கை கொடுக்கவில்லை. வாழ்த்தௌகள்

  ReplyDelete
  Replies
  1. கை கொடுக்கும் போது போடுங்கள் அய்யா ,தங்களின் வருகையே எனக்கு மகிழ்ச்சி அய்யா :)

   Delete
 8. 01. குழியில் இறக்கியபோது சொன்ன வசனமா ?
  02. தன்வினை தன்னைச்சுடும்.
  03. சரியான கண்டுபிடிப்பூ
  04. தாய்ப்பாசம்தான்

  ReplyDelete
  Replies
  1. சொல்லியது மட்டுமில்லே ,கல்வெட்டும் வச்சாச்சு :)
   இதுக்கு துப்பாக்கியே வேண்டாம் :)
   கொஞ்சம் ஓவர் பில்ட் அப் மாதிரி தெரியுதே:)
   துளியும் வேஷமில்லா பாசம் :)

   Delete
 9. Replies
  1. எதுக்கு இந்த ஹீ ஹீ ஹீ :)

   Delete
 10. தாயின் வலியறிந்து அழுத குழந்தை..... வாவ்.....

  ReplyDelete
  Replies
  1. வலி வந்து சந்தோஷத்தைத் தந்ததே :)

   Delete