Wednesday, 8 June 2016

அடுத்தவன் மனைவி பெயரை சொன்னால் வம்புதானே :)

உன் நண்பனைக் காட்டு ,உன்னைப் பற்றி சொல்கிறேன் :)
               ''எனக்கு  நண்பர்கள்  யாரும் இருக்க மாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது ?''
               ''உங்களோட ஒரு நிமிஷம்  பேசியதில் ,எனக்கே மண்டைக் காய்ந்து ,முடியெல்லாம் கொட்டுதே !''

அடுத்தவன் மனைவி பெயர் சொன்னால் வம்புதானே :)
              ''என்னடா சொல்றே ,பெண்டாட்டி அடிச்சா கூட 'ஐயோ ' ன்னு சொல்லக் கூடாதா ?''
             '' ஆமா ,'ஐயோ 'ங்கிறது  எமனோட  பெண்டாட்டி பெயராம் ..என் பெண்டாட்டி  பெயரை எவண்டா சொன்னதுன்னு  எமன் வந்து நிற்பானாமே!''

கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் :)
           ''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு 
என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
           ''ஆமா ,அவர்தானே ...ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  
வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''

இன்றையப் பெண்களுக்கு பொருந்தும் :)
பெண்ணுக்கு , விரல் நக வெட்டியாய் ...
வெட்கம் !

16 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 01. இது ஹெல்மெட் இல்லையா ?
      02. இதென்ன கூத்து
      03. குடும்பத்துல சொத்து பிரிக்கவில்லையோ...
      04. ஸூப்பர்

      Delete
    2. எனக்கும் ஒரே குழப்பமா இருக்கே :)
      கூத்தில்லே, நிஜப் பெயர் இது :)
      அதான் பிரித்துக் கொண்டு போய்விட்டார்களா :)
      சில நேரங்களில் நாமதான் வெட்கப்பட்டு திரும்பிக்க வேண்டியுள்ளது :)

      Delete
  2. கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது
    அதுக்குத்தான் - எதுக்கு
    கொள்ளையடிக்கத் தான் - ஓ
    கொள்ளையடிப்பதே
    படித்துச் செய்ய வேண்டிய
    தொழிலாச்சே!

    ReplyDelete
    Replies
    1. புதிய பாடம் படிக்க வேணும் வாத்தியார் அய்யான்னு பாடுவதும் மனதைக் கொள்ளை அடிக்கத்தானா :)

      Delete
  3. ஹா.... ஹா... ஹா...

    :)))

    இதுல இப்படி ஒரு ஆபத்தா!

    புரியலை!

    ReplyDelete
    Replies
    1. புரியலை?......கால் விரலால் வெட்கத்துடன் கோலம் போடும் பெண்ணைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ,வெட்கத்தை நகத்தைப் போல் வெட்டி எறிந்து விட்டார்களே :)

      Delete
  4. இனி மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...!

    இவள்ட்ட குடும்பம் நடத்துறதுக்கு... 'ஐயோ 'வைக் கூப்பிட வேண்டியதுதான்... ஐயா...!

    அமெரிக்காவில நாம கொள்ள அடிச்சுட்டு வரப் போயிருக்கனுமுன்னு நெனச்சுட்டாங்க போல இருக்கு...!

    வெட்டி வேலைங்கிறது இதுதானோ...?!

    த.ம. 4





    ReplyDelete
    Replies
    1. நல்ல சௌகரியம்தான் :)

      ஐயோ எத்தனை பேருக்கு வருவாள்:)

      நினைப்புதான் அவங்களுக்கு பிழைப்பைக் கொடுக்குதோ :)

      வெட்கப் படுவதும் வெட்டி வேலைதானா :)

      Delete
  5. Replies
    1. வீடு கொள்ளைப் போனதை ரசித்தீர்களா:)

      Delete
  6. ஹாஹாஹா! ஹெல்மெட் அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. இப்படியா நண்பர்களை மண்டைக் காய விடுவது :)

      Delete
  7. 'ஐயோ 'ங்கிறது எமனோட பெண்டாட்டியா?..அய்யோ...!!

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான பெயர்தானே :)

      Delete