Wednesday, 15 June 2016

Topup செய்ததும் காதலன்தான் !

பிற்போக்குவாதின்னா  என்ன அர்த்தம் என்று புரிகிறதா :)
         '' ஆபீசுக்கு ஏன் வரலேன்னு கேட்டா ,நேற்று மட்டும் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
         ''வாந்தி எடுத்த அன்னைக்குதான் !''

இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !
                  ''காசிக்குப் போனா ,எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலிருக்கு !''
            ''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
         ''விட்டுட்டு வரலாம்னா ,என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''

Topup செய்ததும் காதலன்தான் !
திருமணம் ஆனதும் ...
மிஸ் கால்   மிசஸ் காலானது !

நெற் 'பிள்ளை 'க்கு பாய்வது புல் 'அப்பனுக்கும் பாயும் ?
புருசன்மார்களுக்கு வகைவகையாய்
புசிக்க கிடைக்கிறது என்றால் ...
பிள்ளைகள் மேல் தாய் காட்டும்
பாசம்தான் காரணம் !


13 comments:

  1. ஓ... புரிகிறது!

    ஹா... ஹா... ஹா... ஹடப்பாவி!

    ம்ம்...

    ம்ம்ம்...

    ReplyDelete
  2. அட... கழிசல்ல போக...!

    அப்ப... ஆத்துல விட வேண்டியதுதான்...!

    மிஸ்டு கால் ஆகாமல்... காலோடு கால் சேர்ந்தது...!

    பிள்ளைகள் மேல் தட்டு மக்களோ...!


    த.ம. 2





    ReplyDelete
  3. அனைத்தும் அருமை ... ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  4. 01. இதுக்கு எல்லா மனிதரும் ஒத்து வந்தே தீரணும்.
    02. அப்படின்னா ''விட்டுட்டு'' போக வேண்டியதுதானே....
    03. ஆனாஸ் ஆன்சர் டிலே ஆகுமே...
    04. அப்படியாவது கிடைக்கட்டுமே...

    ReplyDelete
  5. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. வாந்தி எடுக்காத அன்றைக்கு.?
    அதுவும் சரிதான்
    நிறையவே மிஸ்ட் காலாக இருக்குமே
    நெற்பிள்ளை புல் அப்பன் ....ரசித்தேன்

    ReplyDelete