Sunday, 10 July 2016

புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)

ஒரு பானைச்  சோறுக்கு ....:)      
           ''என்ன சொல்றீங்க ,நாடு உருப்படும் போலத் தெரியலையா ?''
           ''நம்மாளுங்க காணாம போனவங்களைத் தேடுற மாதிரி தெரியலே !''
               (2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் – செய்தி)
 புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)
        ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
        ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''

மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !
          '' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்களே , டாக்டருக்கு  போன் பண்ணி  வரச்  சொல்லிட்டியா  ?''
         ''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''

அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !
கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய்  நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !

28 comments:

  1. ஜாக்கெட் ஜோக்கையும், கடைசி உண்மையையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜாக்கெட்டை விட உண்மை இனித்ததா :)

      Delete
  2. Replies
    1. பக்கத்து ஊர் டாக்டரை வரச் சொன்ன மருமகளையும்தானே :)

      Delete
  3. தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன்... தேடல்தானே வாழ்க்கை...!

    ‘ஏ’ மாற்றம்...!

    டாக்டர்... கால் நடையா வந்து சேருவாரு...!

    ஆமாம்... நிச்சயம் தந்தை கோழியாத்தான் இருக்கும்... கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! கொந்தளிக்கும் நெஞ்சிலே, கொண்டிருக்கும் அன்பிலே, அக்கறை காட்டினாத் தேவலே...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் :)

      தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்தால் கஷ்டம்தான் :)

      அதுக்கு முன்னாலே அந்த நாலு பேர் வந்துடுவாங்களே :)

      தந்தைக் கோழிக்கு பாசமில்லாமல் போகுமா :)

      Delete
  4. என் பாக்கெட்டில் இருந்த பணம்
    அவ ஜாக்கெட்டில் போனது தான்
    சேமிப்பு

    ReplyDelete
    Replies
    1. சேப்டி லாக்கரில் இருந்தால் நல்லதுதானே :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தீர்கள் சரி ,பலரும் ரசிக்க ஒரே ஒரு த ம வாக்களிக்க வேண்டாமா :)

      Delete
  6. ’கோழி மிதித்து.....’ -மனதைத் தொட்ட கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தாய்க்கோழி இல்லை என்றால் குஞ்சை மிதித்தது யாரோ :)

      Delete
  7. /அதிகம் தேடப்பட்ட நபர்பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் – செய்தி)/

    தேடினவங்க உருப்பட்ட மாதிரிதான்!

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் எப்படி நாடு உருப்படும் :)

      Delete
  8. Replies
    1. கருத்தை விட உங்கள் வோட்டு பலவற்றைச் சொல்கிறதே :)

      Delete
  9. மூன்றும் நன்கு ரசித்தேன் சகோ..
    நன்றி.
    நன்று சகோதரா நேரமிருக்கும் போது
    என் தளத்திலும் கருத்திடுங்கள். நன்றி.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கு நன்றி :)
      நானும் ரசிக்க வருகிறேன் !

      Delete
  10. 01. உருப்படா''தூ''
    02. A-மாற்றம்தான்
    03. சொந்த பந்தங்களுக்கு சொல்லி விடலாம்
    04. உண்மைதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. யார் மேலே இந்த தூ :)
      நடமாடும் பீரோவில் இருக்கட்டுமே :)
      டாகடர் வருவதற்குள் வந்து விடுவார்கள் :)
      தாய் மிதித்தாலும் சுகம்தானா :)

      Delete
  11. பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனது நல்ல மாற்றம்....

    ReplyDelete
    Replies
    1. தாலி பாக்கியமோ இது :)

      Delete
  12. Replies
    1. அய்யா ஜம்புலிங்கம் அவர்களுக்கு தந்த பின்னூட்டப் பதில் உங்களுக்கும் பொருந்தும் :)

      Delete
  13. Replies
    1. வருகிறேன் வருகிறேன் தங்களின் ஆயுதப் பூ பறிக்க வருகிறேன் :)

      Delete
  14. சிரி சிரி என்று சிரித்தேன்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சிரித்த சத்தம் இங்கே எனக்கும் கேட்டது ,நன்றி :)

      Delete