11 July 2016

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் ஒரே வித்தியாசம்தான் :)


இது சிரிப்பதற்கு அல்ல ,சிந்திக்க !                 
              '' ஹெல்மெட் கட்டாயமில்லைன்னு  சொல்லப் போறாங்களா ,ஏன் ?''
              ''கட்டாய ஹெல்மெட் அமுலுக்கு வந்த பின்தான் ,முன்பைவிட அதிகமாய் குடிகாரர்கள்  விபத்தில் பலியாகி இருக்கிறார்களாம் !''

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் உள்ள வித்தியாசம் !
என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?
என்னோட 'ஜோக்'கான சில கமெண்ட்களை ரசிக்க முடிகிறதா என்று சொல்லுங்களேன் !
1.நம்ம மதுரைத் தமிழன் அவர்களின் வலைப் பூவில் படித்தது....
அந்த காலத்தில் ஒரு பெண்ணை காதலிக்கிறதுக்குஅவ அப்பன் மோசமான ஆளா ? 
அண்ணன்காரங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
பார்த்து காதல் பண்ணினாங்க 
ஆனால் இந்தகாலத்தில் காதலிக்கிறதுக்கு முன்னாடி  அவ புருஷன் மோசமான ஆளா ?
பிள்ளைங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
என்று பார்த்து காதல் பண்ண வேண்டியிருக்கு 
ச்சே காலம் எப்படி எல்லாம் மாறுது பாருங்க ..
அன்புடன் 
மதுரைத் தமிழன் 
இதற்கு நான் போட்ட கமெண்ட்..
அப்பனையும் அண்ணனையும்பற்றி  விசாரித்து  செய்தால், அது காதல் !புருசனையும் ,பிள்ளையையும் பற்றி விசாரித்து செய்தால் ,அது  கள்ளக் காதல் !இந்த தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கலே போலிருக்கே !
2.நம்ம யாழ் பாவாணன் அவர்கள் 'ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்'என்ற தலைப்பில் எழுதி இருந்தார் ,எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்களுக்கு  வேண்டுகோள் விடுத்து இருந்தார் ....அதற்கு என் கமெண்ட் இதோ ....
சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர் 
பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் 
அய்யா !நீங்கள் சொல்வது சரிதான் ,இப்படி பலியாகும் முன்னர் 
திருத்த வேண்டாமா?
------------------------------------------------------------------------------------------------------------
3..நம்ம பதிவர் பரிதி முத்துராஜன் ஜி அருமையான தகவலை G+ ல் அனுப்பி இருந்தார்,அது .... 
இதற்கு என் கமெண்ட் இது ...
        அதைப் பிடித்து என்னதான்  செய்யப் போறீங்க ?


22 comments:

 1. Replies
  1. சிரித்தீர்கள் சரி ,பார்த்தீர்களா :)

   Delete
 2. ஹெல்மெட் மாட்டிக்கொண்டு பெண்களிடம் செயின் பறிக்க பாதுகாப்பாக இருக்கிறதாம்...!

  ‘கள்’ளக் குடிச்சும் போதை வரலை...! வர வர காதல் கசக்குதய்யா...!

  இதையெல்லாம் கொட்டை எழுத்தில் போட வேண்டுமா...?!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. சட்டம் யாரைப் பாதுகாக்கிறது ,பாருங்கள் :)

   அடுத்தவன் காதல் வேண்டுமானால் புளிக்கும் ,உங்க காதலுமா:)

   அதானே ,போட்டவர்கள்தற்கொலைப் படை என்பது சரிதான் :)

   Delete
 3. Replies
  1. தீவிரவாத தற்கொலைப் படை போல இருக்கே ,ரசித்தீர்களா :)

   Delete
 4. வழக்கம் போல உங்களுக்கே உரிய கேலியும் கிண்டலும். ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. என்கேலியால் யார் மனமும் புண்படாமல் போனால் சரிதானே:)

   Delete
 5. கருத்துக்கள் கூட நகைச்சுவையாய்...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. இதை இனிமேல் தொடரலாமா :)

   Delete
 6. “கொட்டையைப் பிடிப்போம்”/

  எட்டி உதைச்சாங்களே, அவங்களோடதை! அப்புறம் அவங்கெல்லாம் கூண்டோட கைலாசம்தான்!!

  ReplyDelete
  Replies
  1. கைலாசம் போயிட்டாங்களே :)

   Delete
 7. வணக்கம்
  ஜி

  கலாட்டாவுக்கு பஞ்சமில்லை...இரசித்தேன் ஜி வாழ்த்துக்கள் பகிர்வுக்கு த.ம 8
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கலாட்டா தொடரும் :)

   Delete
 8. உங்களின் நகைச்சுவை உணர்வு அபாரம்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாரம் தாங்க முடியாமல்தான் இறக்கி வைத்து விடுகிறேன் :)

   Delete
 9. 01. கணக்கு இப்படியாகிப் போச்சா ?
  02. ஸூப்பர் கருத்து
  03. நானும் படித்தேன் என்னிடம் புகைப்படம் இருக்கின்றது
  04. ஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. 'தலை 'கீழ் கணக்காகி போச்சு :)
   ரசீத்தீர்களா :)
   புகைப் படம் கொஞ்சம் ஜொள்ளு அதிகம்தான் :)
   மக்கள்தான் அவர்கள்கொட்டையை அறுத்து விட்டார்களே :)

   Delete
 10. ஒவ்வொன்றும் ஒருவிதம்...ரசிக்க நன்று

  ReplyDelete
  Replies
  1. பறவைகள் பலவிதம் போலவா :)

   Delete
 11. தங்களின் காதல் தத்துவத்தை தெரிந்து கொண்டேன் தலீவரே......

  ReplyDelete
  Replies
  1. தத்துவம் புரிந்தால் நீங்கதான் கில்லாடி :)

   Delete