12 July 2016

நடிகைக்கு எந்த கூச்சமும் இருக்காதா :)

 இப்படியும்   சந்தோஷப்படலாம்  :)     
             ''வேலைக்கே லாயக்கில்லைன்னு மேனேஜர் உன்னைச் சொன்னாரே ,வருத்தமாயில்லையா ?''
            ''இருந்தது ,உன்னையும் அப்படி சொன்னப்ப  சந்தோஷம்  ஆயிட்டேன்  !''

உண்மையான  மாமியார் வீட்டில் இருக்க நினைப்பது தவறா :)
       ''வீ ட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சா ,ஏன்?''
       'வருசத்திலே பாதி நாள் 'மாமியார் வீட்டு'லேதான்  இருக்கேன்னு திருட்டுப் பயலுங்க  வந்து நிற்கிறாங்க !''
நடிகைக்கு  எந்த கூச்சமும் இருக்காதா :)
          ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
           ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''

நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...
              ''முதலாளிக்கு நண்டுன்னா  பிடிக்கும் !''
              ''பிறகேன் ,தொழிலாளிங்க பெர்ம'நண்டு 'ஆக்கச்  சொன்னா மட்டும் ,பிடிக்க மாட்டேங்குது ?''

ஜாக்கெட்டா .சேப்டி மினி லாக்கரா ?
மனைவிமார்கள் கணவனை நெஞ்சிலும் ...
அவன் தந்த  பணத்தை   நெஞ்சுக்கு அருகிலும் வைத்து 
போற்றிப் பாதுகாக்கிறார்கள் !

22 comments:

 1. ஹை முதல் போணி நம்ம தானா ?
  தம +

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாள் கழித்து என்றாலும் முதல் வருகைக்கு நன்றி மது ஜி :)

   Delete
 2. இதுதான் தன்னைப்போல் பிறரையும் நினைப்பதா?

  ஹா.... ஹா.... ஹா...

  ஹா.... ஹா... ஹா... சொல் கூச்சம் கூட இல்லை போலிருக்கு!

  அந்த னண்டு வேற இல்லையோ...

  ஆமாமாமாம்!

  ReplyDelete
  Replies
  1. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்று நினைப்பது தப்பா :)

   கூச்சத்தை விட்டால்தானே சினி ஃபீல்டில் நிலைக்க முடியும் :)

   மொக்கையில் இந்த நண்டு வந்தால் தப்பில்லை :)   Delete
 3. மேனேஜரைப் பார்த்து எம்.டி.யே அதேதானே சொல்றாரு...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...?

  பெரிய திருடன்தான்... ஒத்துக்கிட்டுத்தான் ஆகனும்...! சின்னத் திருடனுக்கும் வழியக் காட்டுங்க...!

  முழுதும் நனஞ்சாச்சு... இனி முக்காடு எதுக்கு... எல்லாம் நடிப்புத்தானே... நடிச்சுத்தானே ஆகனும்...!

  ஒரு நண்டு மேல ஏறுனா இன்னொரு நண்டு கீழே இழுத்து விடுமாமே... பரவாயில்லை...இருந்தாலும் முதலாளிய நண்டுப் பிடியாப் பிடிச்சீங்க...! ‘நண்டு ஊருது... நரி ஊருது...!’

  பணம் பாதாளம் மட்டும் பாயுங்கிறது உண்மைதானா...? பணம் பத்தும் இல்ல... பத்துக்கு மேலயும் செய்யும்...!

  த.ம. 2


  ReplyDelete
  Replies
  1. எம் டி சம்சாரமும் வீட்டிலே இதையே சொல்வதாக கேள்வி :)

   வழி காட்டினால்திருந்துவானான்னு பார்க்கணும் :)

   நடிப்பு நிஜத்திலுமா :)

   அது இந்திய நண்டுன்னு சொல்வாங்க :)

   பாதாளமும் பாயும் ,மேலேயும் செய்யுமா :)

   Delete
 4. Replies
  1. முதலில் வந்தவரின் சந்தோஷம் அல்ப சந்தோஷமா :)

   Delete
 5. அல்ப சந்தோஷம்
  ஏற்கனவே திருமணம் ஆனவர்களா
  அவளும் பெண்தானே
  ஹூம் ...வார்த்தை விளையாட்டு.......!?
  அவனையும் அவன் பணத்தையும் அருகே அருகே....?

  ReplyDelete
  Replies
  1. பலரும் இப்படித்தானே இருக்க வேண்டியிருக்கு :)
   அந்த மாமியார் வீட்டிற்கு போக திருமணம் தடை இல்லையே :)
   பிறகு ஏன் காசுக்கு இப்படி நடந்து கொள்கிறார்கள் :)
   விளையாட்டு போரடிக்குதா :)
   வச்சுகிட்டா தப்பில்லைதானே :)

   Delete
 6. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு! சிரிப்போ சிரிப்பு!

  ReplyDelete
  Replies
  1. நடிகைன்னா பல் கூச்சம் என்று கூட சொல்லக் கூடாதா :)

   Delete
 7. 01. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரனுக்கு ரெண்டு கண்ணும் போகணும்
  02. தப்புதான்
  03. அவங்களுக்கு பொய் சொல்ல வாய் கூசுமே...
  04. அவங்க ''பெரு''மதி கூடிடக்கூடாதே...
  05. சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி கூட நினைக்கலே ,ஒரு கண்ணுக்கு ஒரு கண் போனால்போதும் :)
   வீட்டோட மாப்பிள்ளையை வச்சுக்கிறது மட்டும்சரியா :)
   கூசட்டும் நமக்கொன்றும் கஷ்டமில்லை :)
   நண்டுக் கறி இவர் சாப்பிடுவது குறைந்து போகுமா :)
   பிறகேன் சிலருக்கு பிடிக்க மாட்டேங்குது :)

   Delete
 8. Replies
  1. பல் கூச்சத்தையும் தானே :)

   Delete
 9. நகைச்சுவை நன்று

  ReplyDelete
  Replies
  1. மினி லாக்கர் என்பதும் நன்றுதானே:)

   Delete
 10. அனைத்தும் அருமை ஜி....
  கூச்சத்தையும் நண்டையும் கூடுதலாக ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அந்த நடிகை 'நண்டு பிடி'ப்பதைப் பார்த்தால் இன்னும் நிறைய ரசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் :)

   Delete
 11. நடிகையின்னா பல்கூச்சம்கூட இருக்காதே.....

  ReplyDelete
  Replies
  1. இது ரொம்ப பாவம் இல்லையா :)

   Delete