16 July 2016

காதல் சின்னம் தந்த அவதி :)

இதை விட சிறந்த யோசனை யார் தருவார் :)
          ''  தியானத்தில் ஓம்னு  சொல்லிப் பார்த்தேன் ,நிம்மதி  கிடைக்கலே !''
          ''பெண்டாட்டிப் பேச்சுக்கெல்லாம் ஆம்னு சொல்லிப் பாறேன் !''
காதல் சின்னம்  தந்த அவதி :)
வட இந்திய டூர் - பாகம் 5

         டெல்லியில் இருந்து தாஜ்மகால் பார்க்க ,ஆக்ராவுக்கு ரயிலில் போகலாமா என ஆலோசனை செய்ததில் எல்லோருமே வேண்டவே வேண்டாம் என்றார்கள் .அதற்கு காரணம் ,அங்கு ஓடும் ரயிலில் எல்லாம் முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியில் கூட மக்கள் கணக்கு வழக்கு (?)இல்லாமல் ஏறி விடுகிறார்கள் .இரவில் பயணம் என்றால் அதை விடக் கொடுமை ...நடை பாதையில் கூட படுத்து விடுகிறார்கள் !
கொளுத்துகிற வெயில் பயமுறுத்தியதால் ,ஏசி வேன் பிடித்து பயணமானோம் ... நான்கு மணிநேர பயணத்திற்கு பின் ,ஓரிடத்தில் ஓட்டுனர் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் .சுற்றி சுற்றிப் பார்த்தாலும் தாஜ் மகால் கண்ணுக்கு தென்படவில்லை .காரணம் ,நாம்
இறங்குகிற இடம் ,தாஜ் மகாலில் இருந்து  முக்கால் கிலோமீட்டர்   தூரத்தில் இருக்கிறது .அங்கேஇருந்து  தாஜ்மகால் வளாகத்தின் வாசலுக்கு செல்ல பேட்டரி கார் ,ஒட்டகம் பூட்டிய சாரட்வண்டிகள் அணிவகுத்து நின்றன .அதில் ஏறி ...இதோ நீங்கள் பார்க்கிறீர்களே ...
         இந்த கோட்டை வாசலின் முன்புறம்  இறங்கி ,தலைக்கு இருபது ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு கோட்டைவாசல் படியேறினால் ...முன்புறம் பச்சை பசேலென்று தோட்டம் விரிந்து கிடக்க ,தூரத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இதோ ,தாஜ் மகால் !
         நாம் இங்கிருந்து நடுவில் உள்ள நீருற்று ,சுற்றியுள்ள செடிகொடிகளை ரசித்துக் கொண்டே ...தாஜ் மகால் முன்னால் மேடைபோல் தெரிகிறதே ,அங்கே சென்றதும் அதிர்ச்சி !
தாஜ்மகால் அமைந்து இருக்கும் கோட்டை கொத்தளத்தின் மீது வெறும்  செருப்போ ,சூவோ அணிந்து செல்ல அனுமதி இல்லையாம் ...
செருப்பின் மேல் ஒரு பையைக் கட்டிக்கொள்ள வேண்டுமாம் ,அந்த பை எங்கே கிடைக்கும் என்று கேட்டால் ,நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்தில் மட்டும்தான் கிடைக்குமாம் ...முதலிலேயே இதையும் நுழைவுச் சீட்டுடன்  கொடுத்தால் என்ன ?
        எங்களைப் போன்றே பலரும் கொதிக்கின்ற வெயிலில் அவதி அவதியாய் ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் ,முன் வாசலுக்கு வந்து செருப்'பையை' வாங்க வேண்டியதாகி விட்டது !
           முக்கியச் செய்தி ...தாஜ்மகால் மாடிக்கோ ,மும்தாஜ் சமாதி இருக்கும் கீழ் தளத்துக்கோ செல்ல அனுமதி இல்லை !அங்கே எல்லோரும் நடுத்'தள 'வர்க்கம்தான் !
                                                            பயணம் தொடரும் ...

இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?
            ''நீ காதலிக்கு வாங்கிக் கொடுத்த இளநீரால் காதலே முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
        ''அவ குடிச்ச இளநீர் வழுக்கையையும்  கீறி ,நானே சாப்பிட்டது  
அவளுக்குப் பிடிக்காமப் போச்சே  !''

நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...
இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே 
இன்றைய மணமகளின் எதிர்பார்ப்பு !

14 comments:

 1. “ஓம்... சாந்தி...”ன்னா... ஏங்க தியானத்திலையும் என்ன நிம்மதியா இருக்க விடாம என்னோட பெயரைச் சொல்றீங்களேன்னு கேக்குறாளே... ‘அமைத்திக்குப் பெயர்தான் சாந்தி’ன்னு வேற சொல்றீங்களே...!

  ‘உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயம்’ 14 பிள்ளைகளைப் பெற்ற அர்ஜுமண்ட் பானு பேகத்தின் மீது கொண்ட காதலுக்காகக் கட்டப்பட்ட உலக அதிசயத்தைக் கண்டு களிக்க கண் கோடி வேண்டும்...!

  வழுக்கையானாலும் பரவாயில்லைன்னு காதலிச்ச என்னை... இப்ப என்னோட இளநிய கீறி... கீறிப்பிள்ளையாயிட்டிங்களே...!

  அதுக்குத்தானே ‘கேட்ரிங் டெக்னாலஜி...’ எடுத்துப் படிச்சதே...! எதோ ஒரு வேலை செஞ்சு பொழைச்சுக்க வேண்டிதுதானே... என்ன சொல்றீங்க...?

  த.ம. 1.

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் தியானத்திலும் ஆம் சாந்தி என்றே சொல்லிட்டா போச்சு :)

   14 பிள்ளைகளைப் பெற்ற அர்ஜுமண்ட் பானு பேகத்தின் மீதான காதல் காலம் கடந்து நிற்கிறதே :)

   ஐயோ பாவம் இப்படியா ஆக்குவது :)

   வீட்டிலும் உதவுதே ‘கேட்ரிங் டெக்னாலஜி’:)

   Delete
 2. முன்யோசனை இன்றி பார்வையாளர்களை இம்சிக்கும் தாஜ்மகால் நிர்வாகம் ஒழிக!

  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தாஜ்மகால் வாழட்டும் ,இம்சை ஒழியட்டும் :)

   Delete
 3. ஜோக்காளி, பயணக் கட்டுரை எழுத்தாளராக அவதாரம் எடுத்ததற்கு வாழ்த்துக்கள். பயணத்தை ரசித்தேன்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. எனக்கு பிடித்த அவதாரம் ,சிறுகதை எழுத்தாளர் என்ற அவதாரம்தான் ,சிரிகதை என்று எழுதியது கொஞ்சம் !ஆணிப் பிடுங்கும் வேலை நிறைய இருப்பதால் எழுத முடியவில்லை ,அதற்கும்காலம் வரும் :)

   Delete
 4. 01. இரண்டுக்கும் ஒரெழுத்துதானே மாற்றம்
  02. பயணம் தொடர்கிறேன்...
  03. பின்னே இப்படித்தான் ஆகும்
  04. பெரிய விசயம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் :)
   இன்னும் நிறைய பயணம் செய்ய எனக்கும் ஆசை:)
   ஆரம்பமே கோளாறா ஆச்சே :)
   புவ்வாதானே முக்கியம் :)

   Delete
 5. ரசித்தேன் ஜி...
  பயணக் கட்டுரை அருமை... எழுதுங்க... தொடருங்க...

  ReplyDelete
  Replies
  1. நீங்க இருக்கிற அபுதாபியையும் பார்க்கணும் போலிருக்கு :)

   Delete
 6. தாஜ்மஹால்.... முன்பெல்லாம் அங்கே காலணிகள் வைக்க ஒரு பாதுகாப்பகம் இருந்தது. நடந்து செல்ல, பளிங்குக் கற்களின் மீது கார்ப்பெட் போட்டு வைத்திருப்பார்கள்.....

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. இருந்த வசதியை ஏன் எடுத்தார்களோ :)

   Delete
 7. அனைத்தும் ரசித்தோம் தாஜ்மஹாலைத் தவிர.

  ஏனோ தெரியவில்லை ஜி எங்களுக்குத் தாஜ்மஹால் எல்லோரும் பெருமை பேசுவது போல ஈர்க்கவில்லை. காதல்சின்னமாகவும் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தாஜ் மகால்... எனக்கும் முதல் முறை பார்க்க ,பிரம்மாண்டமாய் இருந்தது ,அடுத்த முறை அவ்வளவு ஈர்ப்பில்லை :)

   Delete