18 July 2016

காட்டன் சேலைக்கு ஆசைப்பட்டால் தப்பா :)

 எடிட்டர் ,இந்நேரம் ராஜினாமா பண்ணியிருக்கணுமே :)         
             ''நம்ம வார இதழில் போடுற சிரிப்புத் துணுக்குகளை நிறுத்தி விடுவது  நல்லதா ,ஏன் ?''
             ''ஆயுள் சந்தாவைக் கூட வைத்துக் கொள்ளுங்கள் ,இனிமேல் வார இதழை அனுப்ப வேண்டாமென்று  பத்து வாசகர்கள் சொல்லி இருக்கிறார்களே !'' 
                   
எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம்தான் :)        
           ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வருதே !''
            ''அந்த மருந்துக்கு காரணமான  ஃபாஸ்ட் புட் ,ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''

 காட்டன் சேலைக்கு ஆசைப்பட்டால்  தப்பா  :)              
           ''கஞ்சிக்கே வழி இல்லாதவ  காஞ்சிபுரம் பட்டுசேலைக்கு ஆசைப் படக்கூடாதுன்னா காட்டன் புடவைக்குமா ?''
          ''கஞ்சி போடாத  காட்டன் புடவையை கட்டிக்கிட்டா நல்லா இருக்காதே !''
தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு :)
          ''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
          ''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''

இதுக்குத்தானா மலிவு விலை மருந்தகம்  :)
சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

18 comments:

 1. விக்கும் நரைக்குமோ! அனைத்தையும் ரசித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. எதில்தான் போலி இல்லை :)

   Delete
 2. ஆயுத எழுத்துங்கிறது இதுதானோ...? சும்மா அவரு ஜோக்குக்கு எழுதியிருப்பாரு... இதைப் போயி சீரியஸா எடுத்துக்காதிங்க...!

  உணவே மருந்துங்கிறது மாறி... எமன் ஃபாஸ்ட் புட்டா மாறிட்டானே...!

  ‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி... வஞ்சி வருதப்பா...!’

  விக்கிற்காக விக்கி விக்கி அழவேண்டாம்... சாயமே இது பொய்யடா... வெறும் கலர் அடித்த பையடா... நீலச் சாயம் வெளுத்துப் போச்சு...டும்...டும்...டும்...!

  சீனிவாசன்... இதுக்குப் போயி கவலைப் படலாமா...?

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. அடுத்த இதழைப் படித்து தீக்குளிக்கப் போறாராம் :)

   எமனும் வேகமா வர்ற வழி தெரிந்து கொண்டானோ :)

   வஞ்சி ,காட்டன் சேலையில் தானே வருது :)

   இந்த நிறமும் ஒரு ஃபேசன்னு சொல்லிக்க வேண்டியதுதானே :)

   உடம்பு இளைக்கப் போவுது :)

   Delete
 3. நரைத்த விக்! :)

  ரசித்தேன்.

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. இப்படியுமா ஏமாற்றுவது :)

   Delete
 4. ரசித்தேன் நண்பரே!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. காட்டன் தேவதை அழகுதானே :)

   Delete
 5. Replies
  1. நீங்க படத்தைச் சொல்லலையே :)

   Delete
 6. 01. ஹாஹாஹா அவ்வளவு மொக்கையா ?
  02. இது லேட்தான்
  03. உண்மைதான்
  04. விக்கு நரைச்சுப்போச்சா ?
  05. நியாயமான எரிச்சல்.

  ReplyDelete
  Replies
  1. என் மொக்கைப் போலத்தான் அதுவும்இருக்குமோ :)
   இந்நேரம் மேலே போய் சேர்ந்து இருக்கணுமா :)
   சேலையும் விறைப்பாயிருந்தால் அழகா :)
   வெளியே தலைக் காட்ட முடியலையாம் :)
   எரிச்சலை வெளியே காட்டக் கூடாதோ :)

   Delete
 7. Replies
  1. பாலுமகேந்திரா கேமராவில் பதிவான காட்டன் தேவதைகளைப் பார்த்தால் ,நீங்களும் மிக மிக நன்று என்று சொல்லி இருப்பீர்கள் :)

   Delete
 8. மெல்லிய நைலான் சேலைக் கட்டும் இந்த காலத்தில் பருத்தி புடவை கட்ட சொன்னால் கேட்கவா போகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. நல்லதை யார் கேட்கிறார்கள் :)

   Delete
 9. wig naraikuthaa ahhahaahahh

  anaithum rasithom ji

  ReplyDelete
  Replies
  1. விக்குக்கும் டை அடிக்க சொல்லலாமா :)

   Delete