23 July 2016

உங்க கனவு ,ஓடிப் போய் கல்யாணமா :)

தலைப்பிலுமா உல்டா :)         
             ''கபாலி ஜூரம் விடாது போலிருக்கா ,ஏன் ?''
            ''டபாலின்னு அடுத்து ஒரு படம் வரப் போவுதாமே !''
காரணம், பொது நலம் அல்ல :)       
          ''பரவாயில்லையே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரமும் சொல்றாரே  ?'',
          ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு  அப்படி சொல்றாரு !''

T V  தொடர்களில் இப்படியும் கார்டு போடலாமே !
      '' டி வி தொடர் டைட்டில் கார்டில் ,ஒரு எழுத்தைத் தப்பா எழுதியதால் ,வேலையில் இருந்து உன்னை தூக்கிட்டாங்களா ,என்ன எழுதினே ?''
       ''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''

உங்க  கனவு ,ஓடிப் போய் கல்யாணமா  :)
         ''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்குத்தான் போவாங்க ,நீங்க  வங்கிக்கு  ஏன்  வந்தீங்க ?''
          ''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு   விளம்பரம் போட்டு இருந்தீங்களே  !''

செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?
பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து தமிழன்  நீதி  சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !


24 comments:

 1. 01. அது எப்போ ?
  02. காரியவாதிதான்
  03. கஷ்டம்தான்
  04. நியாயம்தானே....
  05. ஸூப்பர் உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. கபாலி வெற்றி பெற்றால் ,சீக்கிரம் நடக்கும் :)
   இவர் ஒருவர் மட்டுமல்ல :)
   பண்படுத்துவது தானே :)
   ஆனால் உதவி கிடைக்கலியே :)
   செம்மொழிக்கே இந்த நிலையா :)

   Delete
 2. ‘பாலி’வுட்டே ‘காலி’யாம்...! அடுத்த படம் ‘போலி’...யாம்... யாரு மொதல்ல போனி போடப் போறாங்களோ...?!

  வருமானம் வருமுல்ல... மானம் போனால் போகட்டும்...!

  மீடியாவில உண்மைய சொல்லக் கூடாதின்னு இப்பவாவது தெரியுதா...? சின்னக் கோடு இல்லங்கிறதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா...?

  ஒங்க மகள் கனவு நனவாயிடுச்சுன்னு சொல்லிட்டு போலாமுன்னு வந்தேங்க மாமா...! இனி எங்க நிஜ வாழ்க்கைக்கு நீங்கதான் தெய்வம்மாதிரி வழிகாட்டனும் மாமா... ஒங்களுக்குப் பயந்து வெளியே நிக்கிறா மாமா... அவள வரச் சொல்லட்டுமா? செல்ல மாமா...!

  மாட்டுக்கு ‘அம்மா’ங்கிறத் தவிர வேற தெரியல...! தமிழனுக்கும் ‘அம்மா’ ங்கிறத் தவிர வேற தெரியல...! அன்று மணியோசை கேட்டு எழுந்த மனுநீதி சோழனுக்கு மாட்டின் குரல் கேட்டிருக்கு... இன்று மனுதர்மம் பேசுபவருக்கு தமிழனின் குரல் கேக்கிற மாதிரியா தெரியுது...? தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. கபாலி,இத்தோட காலின்னு சொல்றாங்களே :)

   அதுதானே முக்கியம் :)

   சின்ன கோடுதான் பெரிய உண்மையைச் சொல்லுதே :)

   அப்பா ,வங்கியில் மேலாளரா,கேசியரா :)

   மாடு சொல்வது சரி ,மனுஷன் சொல்வது சரியா :)

   Delete
 3. மொஹாலில கபாலி ரிலீஸ் ஆச்சாமா?

  மாமூல் கவலைகள்.

  ஹா.... ஹா.... ஹா... செம பிழை!

  உங்களது பாங்க் அல்லவா!

  அச்சச்சோ!

  ReplyDelete
  Replies
  1. ஆகாமல் போகுமா ?ஆனால் பார்க்காதான் ஆளிருக்காது :)

   அவர் வாழ்க்கை முழுவதும் மாமூல்தானா :)

   பிழை என்றாலும் உண்மை சொல்லுதே :)

   உங்கள் சேனல் என்றுகூட சொல்கிறார்கள் :)

   தமிழ்க்கு வந்த சோதனை :)

   Delete
 4. Replies
  1. என்னால் பாலாபிஷேகத்தை ரசிக்க முடியவில்லை :)

   Delete
 5. டபாலி அல்ல , கபாலி -2
  எங்கும் எதிலும் லாபம்
  உண்மை சொன்னால் வேலை காலி
  கனவை நனவாக்க வரும் விளம்பரங்கள் ஏராளம்
  தமிழ் நாட்டில் தமிழர்கள் மட்டும்தான் வாழ்கிறார்களா

  ReplyDelete
  Replies
  1. கபாலி ஒண்ணே தேறவில்லையே :)
   அப்படித்தானே யோசிக்கத்தானே மூளை பழகியிருக்கு :)
   தெரிந்தால் செய்தால் காலிதான் :)
   துட்டுதான் வேணும் :)
   தமிழகத்தில் வாழ்வோர் அனைவரும் தமிழர்களே :)

   Delete
 6. கபாலி 2 வரும் என்றே தோன்றுகிறது பகவான் ஜி...

  எழுத்துப் பிழை ஹஹஹஹ

  கனவு நனவாகும் விளம்பரம் ஹஹஹஹஹ்

  ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. கபாலி மேல் நஷ்ட ஈடு கேஸ் தான் வரும் :)
   உண்மைச் சொல்லும் பிழை :)
   வங்கி வாழ வைத்தால் சரி :)

   Delete
 7. வழக்கம்போல அனைத்தும் அருமை. கபாலி ஜுரம் உங்களையும் விடவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. என் உடம்பு தகிப்பது ஜூரத்தால் அல்ல ,இப்படி பாலாபிஷேகம் செய்யும் மடையர்களைப் பார்த்துதான் :)

   Delete
 8. //செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?//


  சோதனையும்...
  வேதனையும்

  ReplyDelete
  Replies
  1. வேதனை தீரும் நாள் என்றோ :)

   Delete
 9. ...எனது புதிய பதிவு...வருக!

  http://nizampakkam.blogspot.com/2016/07/gandhiji128.html

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவில் ,சாலி செட்டி கடையின் புரோட்டா குருமா செம டேஸ்ட்:)

   Delete
 10. ''உங்கள் கனவை நனவாக்க நாங்கள் தயார்னு விளம்பரத்த நம்பிமோசம் போகாம இருந்தா சரி...

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,வங்கிகளால் மல்லையாக்களின் கனவுதான் நனவாகிறது :)

   Delete
 11. //கபாலி,இத்தோட காலின்னு சொல்றாங்களே :)//

  தமிழ் ரசிகனின் மண்டை காலியாக இருக்கும்வரை கபாலி காலி ஆகமாட்டார்!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு விடிவே இல்லையா ?அய்யகோ என்ன செய்வேன் :)

   Delete
 12. டி.வி ஜோக் அருமை! மற்றவையு சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இதனால் யார் மனதும் புண்பட்டு இருக்காது என்றே நினைக்கிறேன் :)

   Delete