24 July 2016

காதலிக்கு இது பொருந்தாது :)

 இதுக்குமா ஆப்பரேசன் :)         
           ''உங்க மாமியாருக்கு கண் ஆப்பரேசன் பண்ணனுமா ,ஏன் ?''
          ''நான் பட்டுச் சேலைக் கட்டிகிட்டா அவங்களுக்கு கண் உறுத்துதே !''
இதுக்கு அப்புறமும் சாப்பிட மனசு வருமா :)
          ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
          ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு  நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இதுக்கு போய்  பெண்டாட்டிய உதைக்கலாமா  ?
             ''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி  உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
             ''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''

காதலிக்கு இது பொருந்தாது :)
CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !

20 comments:

 1. Replies
  1. உங்களின் அமைதிப் புரட்சிக்கு நன்றி :)

   Delete
  2. நண்பரே ஒரே மாதிரியான கருத்துரையைத் திரும்பத் திரும்ப சொல்வதை விட இது நல்லது என்று நினைத்தேன்.

   Delete
  3. அருமை ,ரசித்தேன் போன்ற , பொத்தாம் பொதுவான கருத்துரையை என்னாலும் ரசிக்க முடிவதில்லை !related கருத்தை சொல்வதே என் பழக்கம் :)

   Delete
 2. ஓ...கோ... இவர்தான் உறு(ரு)த்திரங்கண்ணனாரோ...?!

  நம்ம உசிர எடுக்கணுமுன்னே... கண்ட கண்ட நாயெல்லாம் வீட்டுக்கு வந்திடுச்சு...!

  முடியல... என்னால முடியல... உதச்சு உதச்சு காலும் வலிச்சுப் போச்சு... ஒங்கள்ளட்ட என்ன பெரிசாவா கேக்கப் போறேன் மாமா ... ஆடித் தள்ளுபடியில ஓர் ‘ஆடி’க்கார் மட்டும் வாங்கித்தாங்க... ஒங்கள்ளட்ட வேற எதுவும் கேக்க மாட்டேன்...!

  ஒரு(க்)கால்... இப்படியா ஆகனும்... மான் புலியை வேட்டையாடிடுச்சே...! ‘அந்த மான் உந்தன் சொந்த மான்... பக்கம் வந்து தான் சிந்து பாடும்...’!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. உறு(ரு)த்திரங்கண்ணன் என்பதை உறு(ரு)த்திரங்கண்ணி எனலாமோ :)

   அதுக்கு பெண்டாட்டி வேற சப்போர்ட் :)

   மாமனார் ஆடிப் போயிருப்பாரே :)

   மாயமானாய் ஆகாமல் போனால் சரி :)

   Delete
 3. முதலிரண்டு ஜோக்ஸையும் அதிகமாய் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கடைசி இரண்டை குறைவாய் ரசித்து இருந்து இருந்தாலும் நன்றி :)

   Delete
 4. //''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''//

  இந்த மாதிரி பொண்டாட்டி வாய்ச்சா நாய் படாத பாடு பட வேண்டியதுதான்!

  ReplyDelete
  Replies
  1. நாய் படும் பாடு தெரியும் ,படாத பாடு என்னவென்று தெரியவில்லையே :)

   Delete
 5. 01. ஹாஹாஹா கண் ஆப்ரேஷன் இதுக்கும் பண்ணுவாங்களா ?
  02. இனி சாப்பிட்டு என்னத்தை செய்ய ?
  03. நல்ல யோசனைதான் நிறையபேர் இதை படித்தால் ஆபத்து மாமனார்களுக்கு.
  04. உண்மைதான் நிறைய மனிதர்கள் உண்டு இப்படி.

  ReplyDelete
  Replies
  1. பட்டு சேலைக் கட்டிக்காமல் இருந்தாலே போதுமே ,எதற்கு ஆபரேசன் :)
   வேற வழி ,கொட்டிக்கிட்டு ஆகணும் :)
   உதைப்பது கழுதைகள் குணமாச்சே :)
   இப்படிப்பட்ட புலிகளைக் காப்பது நமது கடமை அல்ல :)

   Delete
 6. சிறப்பான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உதைப்பதை நிறுத்த வழி கண்டுபிடித்த மாப்பிள்ளை விவரமானவர் தானே :)

   Delete
 7. கணாப்பரேஷன் செய்தால் இன்னும் நன்றாக உறுத்தும்
  காத்துக் கொண்டு இருந்த நேரத்தில் கத்திக் கொண்டு இருந்திருந்தால் பலன் இருந்திருக்கும்
  பைக்கை உதைக்கப் பழகிக் கொள்கிறார்
  கால் செய்து விட்டு தவறு என்று தெரிந்ததும் கட் செய்பவர்களும் உண்டே

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை,கண் பார்வை போனால் நல்லது என்று நினைக்கிறாரோ:)
   வள்வள் என்று கத்த அவரால் முடியாதே :)
   உதை ரிடர்ன் ஆனால் தெரியும் :)
   தெரியாதவர்களுடன் எவ்வளவு நேரம் பேசமுடியும் :)

   Delete
 8. ஹஹஹஹஹ் ரகங்கள் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பட்டு சேலை ரகமும் சூப்பர்தானே :)

   Delete
 9. ம்ம்ம்.... நல்லது!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. எது நல்லது ,சேலையா.பசியா ,பைக்கா :)

   Delete