25 July 2016

மரணமில்லா கனவுக்கன்னிகள் :)

உயிருக்கு உயிரான நண்பர்கள் :)

      ''ஹலோ ,யாரு தினேஷா ?''

      ''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் படிச்சுக்கிட்டிருக்கான் !'' 

       ''சாரி ,ராங் நம்பர் !''


ஹீரோ முத்தக் காட்சியில் நிறைய 'டேக் 'வாங்குவாரோ ?
           ''சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ  கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
           ''நேற்று அவரோட டூப்பை போட்டு ,முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''
பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !
                 ''ஏன்யா ,பிளேடு பக்கிரி ,உன் பையனுக்கு போலீஸ் வேலைக் கிடைத்தும் ஏன் அனுப்பலே ?''
                 ''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு எப்படி போறது , நம்ம பரம்பரைக்கே அவமானமாச்சே அது !''

மரணமில்லா  கனவுக்கன்னிகள் :)
இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள் !

26 comments:

 1. 01. உண்மையான நண்பன்
  02. யாருக்கு அதிஷ்டம்
  03. நியாயம்தானே...
  04. நடிகைகளா ஜி ?

  ReplyDelete
  Replies
  1. இதுகூட புரியலைன்னா ,அது என்ன நட்பு :)
   நடிகையின் துரதிர்ஷ்டம் :)
   ஆஹா ,புல்லரிக்குது :)
   கனவுக் கன்னிகள் என்றால் நடிகைகள் மட்டும்தானா :)

   Delete
 2. ஹா.... ஹா...... ஹா... நண்பன் படிக்க மாட்டான்னு அவ்வளவு நம்பிக்கை! எஸ் வி சேகர் நாடகத்தில் வரும் போன் ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது!

  ஹா.... ஹா.... ஹா... அந்த டூப்பு லஞ்சம் கொடுத்திருப்பாரோ!

  ஹா.... ஹா.... ஹா... இது நல்ல சிந்தனை!

  .ம்ம்ம்.....

  ReplyDelete
  Replies
  1. அந்த போன் ஜோக்கையும் சொல்லுங்க ஜி :)

   இருக்கும் இருக்கும் :)

   இறங்கி வர கௌரவம் தடுக்குதே :)

   உங்க மனதிலும்தானே:)

   Delete
 3. ராங் நம்பரெல்லாம் இல்ல... இப்பல்லாம் ஆளே மாறிட்டாப்பா... நெட்ல எதை எதையோ விழுந்து விழுந்து படிக்கிறானா... பாக்கிறானான்னே தெரியலைப்பா... !

  ஒரிஜினல் நடிகையோட மீண்டும் முத்தக்காட்சிய எடுக்கனுமுன்னு ஹீரோ கண்டிப்பா சொல்லிட்டாரு... குளோஸ்அப்ல ஒரிஜினால தெரியனுமுல்ல...!

  கர்ணன் பரம்பரையில்ல... தன் மானம் இடங்கொடுக்காதில்ல...!

  கனவுக் கன்னிகள் கனவில் மட்டுமே வருகிறார்களே... நேரில் அவர்கள் வரவே மாட்டார்களோ...?!

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. பார்க்கிறானோ படிக்கிறானோ பாசானால் சரி :)

   அப்படின்னா எடுத்தது டூப்புக்கு டூப்பா :)

   எப்படி கொடுக்கும் ,கௌரவம் என்னாகிறது :)

   வந்தால் சகிச்சுக்கும் படியா இருக்காதோ :)

   Delete
 4. வழக்கம்போல் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. படம்தான் அதிகமா தித்திக்குதோ :)

   Delete
 5. //சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
  ''நேற்று அவரோட டூப்பை போட்டு ,முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''///

  ஒகே ஒகே அவரை கோச்சிக்கமா திரும்பி வர சொல்லுங்க அவருக்காக முதலிரவு காட்சியை இந்த படத்தில் சேர்த்து கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. கட்டிலும் மெத்தையும் புதுசு கிடைக்கும் ,நடிகை ????:)

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. என் வீட்டில் பறப்பது மாதிரி உங்கள் வீட்டில் பூரிக்கட்டை பறக்காது என்றால் உங்களின் நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் அந்த கனவுகன்னிகள் யார் என்று சொல்லலாமே

   Delete
  2. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல :)

   Delete
 7. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. டூப்பு செய்தது துரோகம் தானே :)

   Delete
 8. கனவுக் கன்னிகள் யார்
  நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டு இருப்பார்கள்..சொன்னால் உதவியாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. என் கனவில் வருபவர்களை வேண்டுமானால் உங்கள் கனவுக்கு அனுப்பி வைக்கிறேன் :)

   Delete
 9. பிள்ளையைக் காப்பாற்ற அம்மாக்கள் சொல்லும் பொய்தானேஇது
  டூப்பே ஹீரோவாகி இருக்கலாம்
  சரிதானே
  முற்றிலும் உண்மைதான்

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக படிக்கிறான் என்ற சொல்லுவது :)
   பாதி படத்தில் அவர்தானே நடித்து இருக்கிறார் :)
   மேல் மக்கள் மேல் மக்களே :)
   அழியாத பிறவிகளோ :)

   Delete
 10. முத்தப்படத்தில் வாயில் என்ன சர்க்கரையா.....? இனிக்க .......

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் தோன்றுகிறது ,இப்போ தேவையா இந்த சர்க்கரை :)

   Delete
 11. வணக்கம்
  ஜி

  இரசித்தேன் ஜி.உங்களின் கனவுக்கன்னி யார் ஜி.. சொல்ல வில்லை....ஹீ...ஹீ..ஹீ த.ம5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கனவுக் கன்னி ஒருவர் என்றாலும் ,பல கோடி பேருக்கு(நீங்களும் அதில் அடக்கம் ) கனவுக் கன்னியாச்சே,யாரென்று தெரியுதா:)

   Delete
 12. Replies
  1. நவீன பாரி வள்ளலைதானே :)

   Delete