26 July 2016

தேவதை மனைவி ,'தேவைதானா ' மனைவி ஆனதேன் :)

 அவரவர் நியாயம் :)   
           ''கஷ்டப் பட்டு சம்பாதிக்கிற பணம்தான் நிலைக்கும்னு உனக்குத் தெரியாதா ?''
             ''அதனால்தானே பூட்டியிருக்கிற வீட்டையும் ,பீரோவையும் கஷ்டப் பட்டு உடைச்சு சம்பாதிக்கிறேன் ?''

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் :)
         ''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கொடுக்காம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா போயிருந்தாலும்  பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய் விட்டானே !''

' தேவதை ' மனைவி 'தேவைதானா ' மனைவி ஆனதேன் :)
          ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
          ''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு :)
சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !


அதே வார்த்தை ,பெண்மணி சொன்னால் மட்டும் தப்பாகி விடுமா ?

         என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட்  ...இது ,நம் வலைப் பதிவர்களில் மூத்தவரான சென்னைப் பித்தன் அவர்களின் G+ல் வெளியானது ...அவருக்கும் ,அசோக் குமார் ஜி அவர்களுக்கும் நன்றி !
chandrasekaran narayanaswami

Shared publicly  -  Yesterday 8:34 PM
உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்
Ashok Kumar
 Yesterday 9:55 PM
கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்:-)
Bagawanjee KA
 Yesterday 11:14 PM
அசோக் குமார் ஜி ,இதை நீங்கள் சொல்வதால் ரசிக்கத் தோன்றுகிறது ,விளம்பரத்தில் வரும்பெண் சொல்கையில் அசிங்கமாய் படுகிறது !
Ashok Kumar
 Yesterday 11:23 PM
ஓ...அப்படியா...ஹா..ஹா...:-)))


14 comments:

 1. ‘கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம்தான் நிலைக்கும்’ இந்த jதவறான பழமொழிய உடைக்கனுமுன்னு நான் பாடுபடுறேன்...!

  இனிமே அவனுக்கு வைத்தியச் செலவு மிச்சம்...!

  நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டா குரைக்குது... ஒங்களக் கண்ட மட்டும் வாலாட்டுது... இதுக்குத்தான் ஆண் நாய வாங்கலாமுன்னு... சொன்னாக் கேட்டாத்தானே...!

  ஒன்பது வாய்த் தோற்பைக்கு ஒருநாளைப் போலவே
  அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! – வன் கழுக்கள்
  தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப்பிட்டுக்
  கத்திக்குத்தித் தின்னக் கண்டு.

  ‘இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
  ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
  நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
  தம்மதென்று தாமிருக்கும் தாம்.’

  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?... பட்டுச் சொன்ன பட்டினத்தார்... இதுதான் பட்டறிவோ...?!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. அதைதான் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோமே :)

   டாகடர் வேலையை நர்ஸ் செய்யகூடுமோ :)

   நாய்க்கு கூட இனம் தெரியுதா :)

   நாய் நரிகளுக்கு இப்போதைக்கு இல்லைஎன்று சொல்லி விட வேண்டியதுதான் :)

   Delete
 2. ரசித்தேன் அனைத்தையும் ஜி.

  ReplyDelete
  Replies
  1. வட போச்சேன்னு வருந்தும் டாக்டரை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 3. வணக்கம்
  ஜி

  யாரும் அருமை இரசித்தேன் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பெண்பேயின் படமும் அருமைதானே :)

   Delete
 4. கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை ரசித்தேன்! மற்றவையும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அவன் கஷ்டப் படுவதை நினைத்தால் ,நமக்கே கண்ணீர் வரும் போலிருக்கே :)

   Delete
 5. 01. நல்ல கொள்கை
  02. இது தப்புதானே..
  03. மனைவியை காலை வாரலாமா ?
  04. திருமண வாழ்க்கையும் சன்யாசம்தானோ.. ?
  05. கோணல் நல்லதுதான் ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. மற்றவர்கள் இந்த கொள்கையை கடைபிடிக்காமல் இருக்கட்டும் :)
   சாதாரண தப்பில்லை :)
   சந்தர்ப்பம் கிடைக்கும் போது விடலாமா :)
   எல்லாம் முடிந்த பின் அதுதானே :)
   நீங்க எந்த கோணலைச் சொல்றீங்க :)

   Delete
 6. Replies
  1. ஆகா,இதுவும் நல்லாயிருக்கே :)

   Delete
 7. பேய்களிலும் சில நல்ல பேய்கள் இருக்கிறது ஜி

  ReplyDelete
  Replies
  1. நல்ல பேய் மட்டுமா ,அழகான பேய்களையும் பார்க்கிறேன் ,சினிமாவில் :)

   Delete