6 July 2016

காதலிக்கு புளிப்பா திங்கணும்னு ஆசை வந்தால் :)

இதுக்குமா கைது பண்ணுவாங்க :)            
         '' என் பையனை எதுக்கு கண் டாக்டரிடம் காட்டச் சொல்றீங்க ?''
          ''ஹெராயினுடன்  வந்த ஹீரோ கைதுங்கிறதை ,ஹீரோயினுடன் வந்த ஹீரோ கைதுன்னு வாசிக்கிறானே !''

காதலிக்கு புளிப்பா திங்கணும்னு ஆசை வந்தால்  :)
               ''சீக்கிரம் காதலி கழுத்துலே தாலியைக் கட்டினா நல்லதுன்னு ஏன் சொல்றீங்க ?''
               ''சுண்டல்லே இருக்கிற மாங்காயை மட்டும் தின்னுட்டு ,புளிப்பே இல்லைன்னு சொல்றாளே ,உன் காதலி !''

வட இந்திய டூர் - பாகம் 4
     டெல்லியில் இருந்து கிளம்பி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலஹாபாத் போகலாம் என்றார்கள் .அங்கே சென்று நாங்கள் தங்கிய இடம் இதுதான் ... 
                                                 
                சத்திரம் என்று பெயரே தவிர நவீன வசதிகளுடன் அறைகள் இருந்தன ,நம்ம ஊர் இட்லி ,வடை ,பொங்கல் ,சாப்பாட்டையும் செய்து தந்து அசத்தினார்கள் ...போர்டை உற்று பாருங்கள் ,இது ஆரம்பித்த ஆண்டு 1891,நூறாண்டைக்கடந்தும் அங்கே நல்ல சேவை செய்துவரும் நகரத்தார் வாழ்க இன்னும் பல நூறாண்டு !
            அலஹாபாத்தில் ,மூன்று நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமம் ,அவசியம் பார்க்க வேண்டிய இடம் என்றார்கள் !புறப் பட்டோம் ...
இதோ தூரத்தில் தீவு போல் தெரிகிறதே,அதுக்கு பக்கத்தில் தான் ஆறுகள் வந்து சேர்ந்து  திரிவேணி சங்கமம்  ஆகிறது ...

படகில் ஏறித்தான் அங்கே செல்ல வேண்டியுள்ளது .அங்கே ..
இரண்டு பக்கம் இருந்து இரு நதிகள்ஓடிவந்து கலப்பது தெரிந்தது ,இன்னொரு நதியைக் காணலியே என்றேன் ...கங்கா ,யமுனா ஆகிய இரு நதிகள் கலப்பதுதான் கண்ணுக்கு தெரியும் ,அடியில் இருந்து சரஸ்வதி நதி  வந்து கலப்பதாக ஐதீகம் என்றார்கள் .இம்மூன்று நதிகள் கலக்கும் புனிதமான இடத்தில் நீராடினால் ...செய்த பாவம் எல்லாம் நதி நீரில் கலந்து ஓடிவிடும் என்றும் சொன்னார்கள் ...
நான் நீராட முடியாது என்றேன் .ஏன் என்று ஒருமித்த குரலில் கேட்டார்கள் .நான்தான் இதுவரையிலும் ஒரு பாவமும் செய்யவில்லையே என்றேன்!பரவாயில்லை ,நீராடி உடல் அழுக்கையாவது போக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் .இது எனக்கு நியாயமாகப் பட்டது !
இந்த இடத்தில் ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும் !நாங்கள் அங்கே சென்ற நேரம் உச்சபட்ச வெயில் காலம் ,காலை எட்டு மணிக்கே ஆற்றோர மணலில் கால் வைக்க  முடிய வில்லை  ,அவ்வளவு கொதித்தது !
வைரமுத்து ஒரு பாடலில்,தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது என்று எழுதி இருப்பார்(அவர் எழுதி இருப்பது வேறொரு உணர்ச்சியை உணர்த்த )..அந்த வரிகளின் நேரடி அர்த்தத்தை அங்கேதான் உணர்ந்தேன் ...வெயில் கொடுமையை தாங்க முடியாமல் கசகசவென்று வியர்த்திருந்ததால் ஆசை தீர நீராடி ...கண்ணுக்கு தெரியாத  நதி கலக்கும் இடத்தில் ,கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் கரைத்துவிட்டு.. கரையேறி வந்திருக்கிறேன்  ..இப்போ.. நான் ஒரு பாவமும் அறியாதவன் என்பதை  நீங்க தெரிஞ்சிக்கிட்டா சரி !
      அடுத்து ,அந்த ஊரில் நாங்கள் சென்ற இடம் இதோ இதுதான் ....
         இதுதான் ஆனந்த பவன் , இது வசந்த பவன்போல் ஹோட்டல் கிடையாது  ...நமது முன்னாள் பிரதமர்கள் நேரு ,இந்திராகாந்தி பிறந்து வளர்ந்த வீடுதான் இது !தற்போது அருங்காட்சியகம் ஆக்கப் பட்டு,பச்சைப் பசேல் புல்வெளியுடன் அருமையாக பராமரிக்கப் பட்டு வருகிறது ,இந்த வளாகத்தில்ஒரு பிளானடோரியமும் உள்ளது !
அரண்மனைப் போன்ற வீட்டில் பிறந்த நம்ம நேரு மாமா ,நாட்டுச் சுதந்திரத்திற்காக  பாடுபட்டு ஒன்பதாண்டு காலம் சிறையில் இருந்தார் ,பரம்பரை சொத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார் ,,இன்றைய அரசியல்வாதிகளும் சிறைக்கு செல்கிறார்கள் ..வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு கூறப் பட்டு !
       

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?
        ''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
        ''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''

பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !
 ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !


24 comments:

 1. 01. இவன் அரசியல்வாதியாக வரும் சாத்தியம் இருக்கு
  02. சம்திங் ராங்க
  03. நகரத்தாரின் இந்த போர்டில் இன்னொரு விடயம் இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே வண்ணத்தில், இதே மாதிரித்தான் எழுதி இருக்கும்
  04. கொள்கை முக்கியம்
  05. உண்மைதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. நிறையவே இருக்கு :)
   உடனே டாக்டரைப் பார்ப்பது நல்லது :)
   உங்களுக்கு தேவகோட்டை சொந்த ஊர் என்பதால் ,நீங்க சொல்றது சரியாக்காதான் இருக்கும் :)
   உயிரே போனாலும் விடக்கூடாது :)
   கொடுமைக்கார வியாபாரிகள் :)

   Delete
 2. வட இந்திய டூர்
  அருமை
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு பதிவை மட்டும் போடலாம் ,சீசன் 2 போடா நேரம் கிடைக்கணும் :)

   Delete
 3. வயசுக் கோளாறோ!

  புளியமரத்தில் ஏற்றி விட்டு விடவும்!

  ம்ம்ம்...

  குட் பாலிஸி!

  கரெக்ட்!

  தம இன்னும் சப்மிட் ஆகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதான் ,கண்ணுலே தெரியுறா :)
   டெலிவரிக்கு இறங்கினால் போதுமா :)
   ஏற்கனவே படிச்சாச்சோ :)
   பிரிமியம் தொடரட்டுமா :)
   பூச்சு கெடுதல் இல்லையா :)

   Delete
 4. ரசித்தேன் நண்பரே
  தம சப்மிட்ஆக வில்லையே

  ReplyDelete
  Replies
  1. எந்த நேரம் போகும் , எந்த நேரம் வருமென்று தெரியவில்லை ,அதுக்கு பெயர்தான் தமிழ்மணம் என்றாகி விட்டது:)

   Delete
 5. Replies
  1. நான் சென்ற இடங்களை எல்லாம் ,நீங்கள் நேரிலேயே சென்று ரசித்து இருப்பீர்கள் ,அப்படித்தானே :)

   Delete
 6. ஹீரோ பையனுக்கு ஹெராயின்தான் ஹீரோயினியோ என்னவோ...?

  ‘மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்’ன்னு சொல்றாளோ என்னமோ...?

  நம்ம மாமாவும் மாமா மகளும் வாழ்ந்த வீடு... அவர்களின் தியாகத்தை எண்ண... தற்பொழுது நம்ம எல்லாம் கண்டு களிக்கும் வீடாக ஆகிவிட்டதே...!

  புது செருப்பு கடிக்கும்... பாலிசி மேட்டர்கிறதுனால யாரும் தலையிட முடியாது... !

  அழகே...! உன் மெழுகுக் கன்னங்கள்... கழுகுக் கண்கள்... இப்படி வர்ணிக்க வேண்டியதுதானே...!

  த.ம. 4


  ReplyDelete
  Replies
  1. நினப்புதான் பிழைப்பைக் கெடுக்கும்னு அவனிடம் சொல்லி வைக்கணும் :)
   ஆபத்தான கட்டத்தில் இருக்கிறாளே :)
   ஆனாலும்காலம் பூரா அதில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே :)
   கொள்கை முடிவுன்னா லேசா :)
   கழுகுப் பார்வை கன்னிக்கு பொருந்துமா :)

   Delete
 7. புளிப்பா திண்டால்...அது தான் என்ற அய்தீகம் உண்டோ...!!!!

  ReplyDelete
  Replies
  1. இது பொம்பளைங்க சமாச்சாரம் ,அவங்கதான் சொல்லணும் :)

   Delete
 8. எங்களுடைய வட இந்தியப்பயணத்தில் இங்குதான் தங்கினோம். ஆனந்தபவன் உள்ளிட்ட பல இடங்களைப்பார்த்தோம். உங்கள் பதிவு எங்களது பயணத்தை நினைவுபடுத்தியது.

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தில் இருந்து செல்வோரை வரவேற்கும் நகரத்தார் சத்திரத்தைக் கூட மறக்க முடியாது :)

   Delete
 9. துணுக்குகளை ரசித்தேன் நானும் திரிவேணி சங்கமக் குளியல் பற்றி எழுதி இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. சுகமான குளியல்தானே அது :)

   Delete
 10. ஹெராயின்-ஹீரோயின் அஹஹஹ

  ஆப்பிள் கன்னம் ஹும் இப்படியாகிப் போனதே...

  செருப்புக்கு டோக்கன் கொடுக்கற கல்யாண மகால் ஹஹஹ்ஹஹ் ரசித்தோம் அனைத்தும் ஜி

  ReplyDelete
  Replies
  1. வெயிலில் போனால் கன்னம் உருகிவிடும் போலிருக்கே :)

   Delete
 11. ஆப்பிள் மீது வர்ணப்பூச்சு ... செமை

  ReplyDelete
  Replies
  1. உன் கண் உன்னை ஏமாற்றும் என்பது சரிதான் :)

   Delete
 12. வட இந்திய சுற்றுலாபற்றி இன்னும் எழுதுங்க நீங்க பாவம் செய்வில்லை அதனால்தான் புண்ணியநதியில் நீராடி இருக்கின்றீர்கள்))))

  ReplyDelete
  Replies
  1. பாவத்தை வாங்கிக் கொள்ளும் நதிக்குப் பெயர் புண்ணிய நதியா :)

   Delete