29 July 2016

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டிருக்கிறவர், இப்படியா பேசுவது :)

பேப்பர் பேனா பென்சிலுக்கு செலவே  செய்யாதவரோ :)          
             ''ஓய்வு வாழ்க்கை கஷ்டமா இருக்கா ,ஏன் ?''
             ''குண்டூசியைக் கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கே!''

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டிருக்கிறவர் ,இப்படியா  பேசுவது :)
          '' அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன தப்பா பேசிட்டார் ,இப்படி கல்லைக் கொண்டு எறியுறாங்க ?''
           ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைதானேன்னு உளறிட்டாராம்!'' 

போலி டாக்டரா இருப்பாரோ ?
          ''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புச்சத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
          ''நீங்கதானே பிறக்கிற குழந்தை 'துரு துரு'ன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''

 பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !
           ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !
பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

20 comments:

 1. துருதுரு ஜோக்கை ரொம்ப ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. படத்திலுள்ள பையனும் துருதுருதானே :)

   Delete
 2. அதானே... சாப்பிட அரிசிகூட ஓசியா கிடைக்கிது... எதையும் காசு கொடுத்து வாங்கின சரித்திரம் இல்ல... குண்டு ஊசிக்குக் காசா...?!

  ‘நான்’ என்றால் உதடுகள்கூட ஒட்டாதுன்னு தெரியல... ‘நாம்’ என்று சொல்லி அடித்திருந்தால் கல் அடி அவருக்கு(ம்) மட்டும் கிடைத்திருக்காதோ...?!

  ஓ... கோ... டாக்டர்... நீங்க ஏன் திரு திருன்னு முழிக்கிறீங்க...!

  நல்லாப் பாருங்க... பொண்டாட்டி கையை இவரோட கையோட சேத்துக் கெட்டியாக் கட்டியிருக்காரு...!

  ‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்... இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்...’ எங்கே போனாலும் டிக்கெட் எடுக்காம போகக் கூடாதில்ல... அது முறையில்லல்ல...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. இலவசமா கிடைக்கிற அரிசியை தின்னுபுட்டு ,பீரை காசுபோட்டு வாங்குறானே :)

   அடக் கண்றாவியே ,செத்தவரும் அவர் கூட்டாளிதானா :)

   திரு திருன்னு முழிச்சா போலி டாக்டரா :)

   அப்படின்னா ,நடந்து கொண்டே தூங்கிறது யார் ?தூங்கிக் கொண்டே நடப்பது யார் :)

   ஆகா ,நேர்மைன்னா இதுவல்லவா நேர்மை :)

   Delete
 3. Replies
  1. தூக்கத்தில் நடப்பதை ரசிக்க முடியுதா :)

   Delete
 4. துரு துரு குழந்தை சூப்பர்!!!

  தூக்கத்திலும் சேர்ந்து நடக்கும் ஜோடி...ஆஹா என்ன பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம் ஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. இப்படி நடந்தால் ,சம்சாரக் கப்பல் போகுமா நேரே :)

   Delete
 5. 01. இதுதானே உண்மை
  02. போதை மன்னரோ...
  03. போலி டாக்டரோ..
  04. சுடுகாட்டுக்கும் போயிடாம....
  05. ஸூப்பர் உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. பணியில் இருந்தவரை பேப்பர் ,பேனாவுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததே :)
   நல்ல வேளை ,அஞ்சலிக்கு மிக்க நன்றின்னு சொல்லாம போனாரே :)
   ரோ இல்லை ரே :)
   ஏன் பேயெல்லாம் பயந்து ஓடிடுமா :)
   பஸ் நொடியில் ஏறி இறங்கினால் ,நொடியில் மரணம் வரும் வாய்ப்பிருக்கே :)

   Delete
 6. தமிழ்மணம் ஏன் வேலை செய்யவில்லை எங்கள் ஓட்டு விழுந்ததா என்று தெரியவில்லை....அழுத்தினால் அந்த பெட்டி வருகிறது எங்கள் கடவுச் சொல்லைப் போட்டபிறகு ஒன்றுமே வரவில்லை....

  ReplyDelete
  Replies
  1. கவலையை விடுங்கள் ,எல்லாம் வல்ல கூகுள் ஆண்டவர் அருளால் உங்க வோட்டு விழுந்து விட்டது:)

   Delete
 7. தூக்கத்தில் சேர்ந்து நடப்பதால் நல்லது தான்,, தனியா நடக்காமல்,

  அனைத்தும் அருமை ஜி,,

  ReplyDelete
  Replies
  1. சேர்ந்து நடப்பதால் இப்படி ஒரு பாதுகாப்பும் இருக்கிறதா :)

   Delete
 8. Replies
  1. நன்றி,ஏழாவது வோட்டுக்கு !எட்டாவது என் வோட்டைப் போட்ட பின்பும் ,எண் மட்டும் மாற மறுக்கிறதே :)

   Delete
 9. துரு துரு.... :))))

  படியில் பயணம் நொடியில் மரணம்!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. துருதுருன்னு இருக்கிற குழந்தை காந்தமாய் எல்லோரையும் இழுக்குமே:)   Delete
 10. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் எனும்போது..உளறிட்டார்ன்னு எப்படிச் சொல்வது..........

  ReplyDelete
  Replies
  1. நம்ம நாட்டோட சாபக்கேடு,இப்படிப்பட்டவர்கள் தலைவராவது :)

   Delete