7 July 2016

நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது :)


வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
                 ''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,கண்டிஷன் போடுறா !''
                 ''என்னான்னு ?''
                 ''வீடு  முழுவதும் ஏர் கண்டிஷன்  ஆக்கணுமாம் !''

இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
            ''ஃபிரிட்ஜ்  வாங்கப் போன இடத்திலே உன் புருஷன்  மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
           ''ஃபிரிஜ்ஜை  எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,மூடினா அணையிற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !
            ''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா இருக்கீயா ,எப்படி ?''
           ''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''

இரத்தம் தேவைப்படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?
இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !

16 comments:

 1. 01. ஆமா வெயில் ஓவருதான்
  02. மானக்கேடுதான்
  03. மூணாவது ஒண்ணு பண்ணினால் அந்த நேரத்துல தனியாக போயிடலாமே...
  04. உண்மைதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. அபுதாபி வெயிலை சொல்லவா வேண்டும் :)
   இவரை உள்ளேயே வைத்து பூட்டி விட வேண்டியதுதான் :)
   அப்படியும் செய்யலாம் :)
   தர மாட்டேன் என்றாலும் கொசு விடமாட்டேன் என்கிறதே :)

   Delete
 2. குளிர்பதனப் பெட்டி நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. அவரோட மனைவி நிலைமைதான் பாவம் இல்லையா :)

   Delete
 3. Replies
  1. நிம்மதி கிடைக்குமா :)

   Delete
 4. அவ சொல்றது எதுவா இருந்தாலும் செஞ்சு கொடுக்க வேண்டியதுதான்... அப்பத்தானே நாம எல்லாம் ஜில்லுன்னு இருக்க முடியும்... எல்லாம் நல்லதுக்குத்தான்...!

  நீ வேற ‘லைட்ட அணைக்காதிங்க... லைட்டா அணைக்காதிங்க’ன்னு பாட்டுப் பாடுறாய்...!

  ‘வாடி சக்காளத்தி...! ஒனக்கு இன்னொரு புருஷன் கேக்குதாடி...? எங்க அந்த எடுபட்ட பய...?!’

  டங்கு...டங்குன்னு போனா ‘டெங்கு... டெங்கு’ன்னு வருது...! வருது... வருது... விலகு விலகு... கொசு வெளியே வருது...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. மின்சார பில் வரும்போது தெரியும் ,நல்லதுக்கு தானா என்று :)

   டீயாரின் தீவிர ரசிகையோ :)

   ஏற்கனவே புருஷன் வேற இருக்காறா:)

   கொசுவுக்கு மரியாதை ,சந்தனத்துக்கு பதிலா பினாயிலைத் தெளியுங்க :)

   Delete
 5. அனைத்தும் ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. கண்டிஷன் அப்பிளை என்பது இதுதானா :)

   Delete
 6. மதுரையில் இப்போது வெயில் அதிகமாமே 39 டிகிரி.c
  அவரை உள்ளே வைத்துப் பார்க்கச் சொல்ல வேண்டும்
  மூன்றாவது மனைவியும் இருந்தால் ஒருவேளை சந்தோஷமும் கிடைக்கலாம்
  கொசுக்கள்தான் உறிஞ்சிய ரத்தத்தைத் தானம் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆமான்னு சொன்னா ,ac இருக்கான்னு கேட்க மாட்டீங்களே :)

   நல்ல ஐடியா ,உள்ளே தள்ளிடுவோம் :)

   அப்படின்னா ,இப்ப இல்லைன்னு முடிவு பண்ணீட்டீங்களா :)

   அந்த காலமும் வரும் :)

   Delete
 7. Replies
  1. கணவன் பேசாமலே இருந்து தொலைக்கலாம் என்பதையும்தானே :)

   Delete
 8. அட. மன் நிம்மதி அடையவதற்கு சாராயக்கடையைவிட இப்படி ஒரு குறுக்கு சந்து இருக்கா..... ஆச்ச...ச்சரியம்தான்..

  ReplyDelete
  Replies
  1. இது குறுக்கு சந்து இல்லை முட்டுச் சந்து :)

   Delete