10 August 2016

நடிகைகளின் பிறப்புரிமையாச்சே அது :)

ரயிலில் இருந்த பல கோடி கொள்ளையாமே :)              
              ''கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும் என்பதை  ரயில் கொள்ளைக் காரங்க  நம்பவில்லை போலிருக்கா  ,ஏன் ?''
             ''அவர்களே , ரயிலின் மேற்கூரையைப் பிரித்துக் கொள்ளை அடித்திருக்கிறார்களே !''
குடிகாரன் பேச்சு காலில் விழுந்தாலே போச்சு :)                     
               ''இனிமேல் குடிக்க மாட்டேன்னு உன் கால்லே விழுந்து சொன்ன , புருஷனை மன்னிக்க முடியாதுன்னு ஏன் சொல்றே ?''
               ''என் கொலுசைக் காணாமே!''
இலவச சினிமா இந்த தியேட்டரில் ?
          '' அடப் பாவி ,உனக்கு  மயக்க மருந்து கொடுத்து  ஒரு மணி நேரமாச்சே,  மயக்கம் வரலையா ?''
            ''நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?''

நடிகைகளின்  பிறப்புரிமையாச்சே அது :)
          ''அட பரவாயில்லையே,புருஷன் டைவர்ஸ் கேட்டாலும் அந்த நடிகை கொடுக்க முடியாது  சொல்றாங்களாமே ?''
           ''டைவர்ஸ் நீங்க என்ன கேட்கிறது ,நான்தான் பண்ணுவேன்னு சொல்றாங்களாம் !''

கரெண்ட் பில் எப்படி குறையும் !
  உடனே குப்பையில் எறியவேண்டியதை
  நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
  நமக்குத் தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!  

14 comments:

 1. கூரையைய்ப் பிச்சு எடுத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க போல! கொலுசு ஜோக் வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் ஒரு விறல் கிருஷ்ணாராவ் ஜோக்கை நினைவு படுத்துகிறது! இந்த மயக்கம் தனி வகை போலிருக்கு! டைவர்ஸ் ஈகோ!! குப்பைத் தொட்டிக்கு மின்சார செலவு வேற...!

  ReplyDelete
  Replies
  1. ஆக்கப்பூர்வமான முடிவுதானே இது :)
   மறக்க முடியுமா ஓ வி கி ஜோக்கை :)
   மாலை நேரத்து மயக்கமோ :)
   ஈகோ இருக்கத்தானே செய்யும் :)
   இந்த குப்பைத் தொட்டி இல்லாத வீடுமில்லை :)

   Delete
 2. ”கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம போவானா?” யாரும் கேட்டிடக் கூடாதில்ல...!

  இதுக்குத்தான் சிலம்ப அணியனும் சொல்றது...! ஒன்னு போனா மற்றொன்றும் போகும்...!

  ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா...?’ இல்லை தெய்வமே... நா வீட்டுக்குப் போறேன்... நா வீட்டுக்குப் போறேன்...!

  ஒன்ன மாதிரி பத்து பேரைப் பாத்திட்டேன்... புது அப்ளிகேசனப் பாத்து அதுல ஒன்ன செலக்ட் பண்ணிட்டு ஒன்ன கலட்டி விடுறேன்... கவலப்படாதே...!

  'பிரிட்ஜ் 'க்குள்ள ஏதாவது இருக்கனுமுல்ல... அப்பத்தானே அதுக்கு ஒரு மரியாதை இருக்கும்...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. வைகுண்டம் போறாங்களா ,சிறைக்கூடம் போறாங்களா ?கொஞ்ச நல்லில் தெரிந்து விடும் :)
   மாணிக்கப் பரல் வாய்த்த சிலம்பையா :)
   நோயாளிக்கு மூடு வந்திருச்சா :)
   கழட்டி விடுற நேரம் வராமலா போயிடும்,அவசரப் பட்டா எப்படி:)
   நிறைஞ்சு இருந்தா கரென்ட் கம்மியா செலவாகும் ,இது விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு :)

   Delete
 3. //''நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?''//

  அறுவை செய்யும் நேரத்தில் இப்படியா? அடக் கடவுளே!

  ReplyDelete
  Replies
  1. மயக்க மருந்து ஓவர் டோஸ் கொடுத்து சாகடிக்கப் போறாங்க ,ஜாக்கிரதை :)

   Delete
 4. சுடச்சிட செய்தி!
  காலில் விழுந்தது மன்னிப்பு கோரியா கொலுசு வேண்டியா
  டாக்டர் என்றால் நர்சிடம் சில்மிஷம் செய்பவரா என்ன
  படுத்துக் கொண்டு போர்த்தவா போர்த்திக் கொண்டு படுக்கவா ரிசல்ட் ஒன்றுதானே
  தொப்பையில் போட வேண்டியதை என்று இருந்திருக்க வேண்டுமோ

  ReplyDelete
  Replies
  1. இப்படியொரு கொள்ளைச் சம்பவத்தை சினிமாவில் மட்டுமே நடக்கும்னு நினைத்திருந்தேன் :)
   காரியம் இல்லாமல் காலில் விழுவாரா :)
   சில கருப்பாடுகள் எல்லாத் தொழிலிலும் உண்டே :)
   படுக்கையே முள் ஆன பிறகு எப்படி படுக்க முடியும் :)
   தொப்பையிலும் எவ்வளவுதான் போடமுடியும் :)

   Delete
 5. Replies
  1. இன்னும் நீங்க வீடு திரும்பவில்லை போலிருக்கே :)

   Delete
 6. டைவர்ஸ் என்பது நடிகையின் பிறப்புரிமை..உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. நடிகையின் கணவர் டைவர்ஸ் செய்தார் என்று செய்தி பரவினால் ,நடிகையின் இமேஜ் என்னாகும் :)

   Delete
 7. Replies
  1. நீங்கள் வாக்களிக்கும் சூட்சுமத்தை அறிந்து நானும் ரசித்தேன் :)

   Delete