2 August 2016

ஒருவனுக்கு ஒருத்தி ,போதும் /போதாது /அதுவும் எதுக்கு :)

வரதட்சணை  தராவிட்டால் இப்படியுமா :)            
               ''உங்க மனைவியை ஏன் உண்மையான 'தர்ம 'பத்தினின்னு சொல்றீங்க ?''
                ''அவங்கப்பா ,பொண்ணைத் தவிர வேறெதையும் தர மாட்டேன்னு கையை விரிச்சிட்டாரே !'' 

கறக்கத்  தெரிந்தவனே  கெட்டிக்காரன் :) 
              ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலைக் கூட 'கறந்து 'வாங்க முடியலேன்னு ,பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
              ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
              ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''

நாய் ,காலைக் கடிக்காமல் விடுமா ?
          ''நான் எந்த தொழிலைச் செய்தாலும் கையைக் கடிக்கிறது,அடுத்து என்ன செய்றதுன்னு புரியலே !''
           ''நாய் வியாபாரம் பண்ணிப் பாருங்க !''

மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டிருக்கானே !
          ''இந்த காசை அமிலத்தில் போட்டா ,கரைஞ்சிரும்னு எப்படி சரியா கண்டுபிடிச்சே ?''
         '' செல்லாத நாலணாவைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் ,மேடம் !''

ஒருவனுக்கு ஒருத்தி ..போதும் /போதாது /அதுவும் எதுக்கு :)
           கிருஷ்ணர் பாமா ,ருக்மணியை மணந்திருந்தாலும் ...
           ஒருவனுக்கு ஒருத்தி 'நமது பண்பாடு என்பதால் 
           கிருஷ்ணாயில் ,பாமாயில் என்று மட்டுமே 
           பெயர் வைத்துப் போற்றுகிறார்கள் !

22 comments:

 1. காலம் மாறுகிறது ஜி.. இப்போதெல்லாம் வரதட்சணை ஆண்கள்தான் தரவேண்டும்! கிருஷ்ணாயில் பாமாயில் - ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. நல்ல காலம் பொறந்து விட்டது போலிருக்கே (யாரோ ,எல்லாம்கலிகாலம் என்று முணுமுணுக்கிற மாதிரி இருக்கே :)

   Delete
 2. Replies
  1. பயபிள்ள போட்ட கணக்கு சரிதானே :)

   Delete
 3. “அம்மா... தர்மம் செய்யுங்கம்மா...!” தர்மம் செய்யாத பத்தினின்னு சொல்றீங்க... கொலையும் செய்வாள் பத்தினி...!

  ஆடிக் கறக்கிற மாட்ட ஆடி கறக்கனும்... பாடிக் கறக்கிற மாட்டை பாடிக்கறனும்... இராமராஜன் நண்பர்தான்... வெளிநாடெல்லாம் போயிட மாட்டேன்... நம்பிக் கடன் கொடுங்க... அப்புறம் பாருங்களேன்...!

  நாய் படாத பொழப்புங்கிறது இதுதானோ...?!

  எல்லாம் செல்லாக் காசுன்னு சொல்லாம புரிய வச்சிட்டீங்க... தேங்யுமிஸ்...!

  பாமா, ருக்மணி... அவுங்க கிட்டதானே நம்ம ஆயுள் இருக்கு...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. கௌரவக் கொலை போல் இது தர்மக் கொலையா :)

   மாட்டு லோனுக்குமா வெளி நாட்டுக்கு தப்பி ஓடணும்:)

   நாயை விற்பதில் உள்ள லாபம் உங்களுக்குத் தெரியும்தானே :)

   இதிலுமா வாழ்க்கைத் தத்துவம் :)

   குறைந்தபட்ச ஆயுள்தானே :)

   Delete
 4. பொண்டாட்டி ரெண்டு ..வைப்பாட்டி எத்னையோ ஆ.....!!!!!

  ReplyDelete
  Replies
  1. தசரதனுக்கு அறுபதாயிரம் பெண்டாட்டிகள் என்று சொல்லப் படுதே:)

   Delete
 5. இவர் சரியாக விலை போகலையோ
  பாங்கில் வேலைசெய்ய பால் கறக்கத் தெரிந்திருக்க வேண்டும் போல் இருக்கிறதே
  நாய் வியாபாரம் செய்தால் எங்கு கடிபடவேண்டுமோ
  செல்லாத நாலணா கரையுமா
  அதானே ஏன் ருக்காயில் இல்லை

  ReplyDelete
  Replies
  1. விலை போக ஆடா ,மாடா :)
   பாலை மட்டுமா :)
   கையைக் கடிக்காமல் போனால் சரி :)
   கரைய செல்லுபடியாகணுமா:)
   குக்காயில் இருக்கு ருக்காயில் ?:)

   Delete
 6. ரசித்தேன்!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. ஒருவனுக்கு ஒருத்தி..மூணு ஆப்சன்ல நீங்கள் எதை டிக் செய்வீர்கள் :)

   Delete
 7. 01. பெண்ணைக் கொடுத்தவரு.. பொன்னைத் தரவில்லையோ.... ?
  02. நியாயமான கேள்வி
  03. செருப்பு வியாபாரம் செய்யலாம்
  04. விஞ்ஞானிதான்.
  05. ஆஹா ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. பொன்னை வைக்கும் இடத்தில் பூவை விட்டார் :)
   கறவை மாட்டு விசயத்தில் அய்யா கெட்டிக்காரர் :)
   நல்லா வருவானா:)
   கிருஷ்ணாயில்னு ஏன் சொல்றாங்க ஜி :)

   Delete
 8. அட்டகாசமான ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பாமாயில் என்பது சரிதானா :)

   Delete
 9. அருமையான நகைச்சுவைகள்...
  ரசித்தேன் ஜி....

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி !

   #தமிழ்மணம் வாக்களிப்பதில் இங்கு ஏதோ பிரச்சினை... வாக்கு அளிக்கப்படவில்லை... மன்னிக்கவும்.#இது கரந்தையார் அவர்களின் வலைப்பூவில் நீங்கள் போட்டிருந்த கருத்து !ஜோக்காளிக்கு வாக்களிப்பதில் என்ன பிரச்சினை ?சொல்லுங்க ஜி :)

   Delete
 10. கிருஷ்னாயில் பாமாயில் அஹஹ்ஹஹ் ரசித்தோம்...
  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. கிருஷ்னாயில் பாமாயில் ,நம் தமிழ் மொழிக்கே உண்டான சிறப்பு :)

   Delete
 11. Replies
  1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் த ம வாக்களிக்க முடியவில்லை போலிருக்கே :)

   Delete