20 August 2016

புருஷன் பிரௌசிங் செய்தால் பெண்டாட்டி ஏன் பத்ரகாளி ஆகணும் :)

இவனுக்கு எதுக்கு செல்போன் ?
              ''செல்போன் காணவில்லை ,கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுன்னு  தினசரியில் விளம்பரம் பண்ணியுமா கிடைக்கலே ?''
             ''தகவல் தர வேண்டிய எண் என்று அந்த நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே! ''


புருஷன் பிரௌசிங் செய்தால் பெண்டாட்டி ஏன் பத்ரகாளி ஆகணும் :)
           ''நான் 'நெட்'டைப் பார்க்கிறப்போ 'போர்ன்விட்டா '  தர  வேண்டியதுதானே  ?''
           ''பார்க்கிறது போர்ன்சைட் ,போர்ன்விட்டா  கேட்குதா உங்களுக்கு ?''
ஜூஸிலும் ரெண்டு வகையா ?
        ''சாத்துக் குடி ஜூஸ் கேட்டா ,தண்ணிச்சாற்றை கொண்டுவர்றீயே,நியாயமா ?''
        ' 'தனிச் சாறு  வேணும்னா நூறு ரூபாயாகும் ,கொண்டுவரவா ?''

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !
             ''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா உங்க உடம்பிலே என்ன நோய் இருக்குன்னு கண்டுபிடிக்க  முடியலே ?''
             ''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''

டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !
       லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
       சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
       அவரவர் கையிலேதான் இருக்கிறது !

24 comments:

 1. அசத்தல் கடிகள் அருமை ஜி

  வாழ்க நலம்

  ReplyDelete
  Replies
  1. கடி தாங்க முடியலைன்னா , சாத்துக் குடி ஜூஸ் குடிங்க :)

   Delete
 2. ஒரு காசா ரெண்டு காசா...பரிசு... அய்யோ... அய்யோ...! இந்த டப்பா செல் போன ஆட்டயப் போட்டதைக் கொடுத்து பணம் பண்ணலாமுன்னு பாத்தா நெம்பர்...?

  பால்... பால்... தமிழ்ப்பால்... இது இன்பத்துப்பால்...! சரி... போர்ன்விட்டால்லாம் வேண்டாம்... தண்ணி கலக்காம... பாலாவது கொடு...!

  ‘கண்ணதாசன் காரைக்குடி... பேரச்சொல்லி ஊத்திக்குடி’க்க வேண்டியதுதான்...... நூறு ரூபா கொடுத்த தனிச் சரக்கே கிடைக்கும்... ரொம்ப தேங்க்ஸ்...வரட்டா... வந்து பேசிக்கிறேன்...!

  ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி...’ நாடி வைத்தியரே... நாடி பிடிச்சு சொல்லுங்க... ஒங்கள நாடி வந்திருக்கேன்...!

  ‘சீமான்களும்... சீமாட்டிகளும் இருப்பாகள் என்று வந்தேன்... எல்லாம் லேபர்ஸ் கூட்டம்...!’

  த.ம. 1


  ReplyDelete
  Replies
  1. இப்பவும் கேட்டுப் போகலே .போன் புக்கில் இருக்கும் நம்பரைக் கூப்பிட்டு காசைக் கறக்க வழியைப் பாருங்க :)

   பாலா ?கழுவி கழுவி ஊத்துவாங்க குடிங்க ,அறிவு வரும் :)

   சாத்துகுடிக்குப் போருந்துறது ,சாராயத்துக்குமா:)

   நாடியே மட்டும் பிடிங்க ,அப்புறமா வேற நோய் வந்துறப் போவுது :)

   எம்மார் ராதா நினைவுக்கு வந்துட்டாரா :)

   Delete
 3. ரசித்தேன் நண்பரே
  தம சுற்றிக்கொண்டே இருக்கிறது
  மீண்டும்வந்து முயற்சி செய்கிறேன்

  ReplyDelete
  Replies

  1. உங்க கடமையை செய்தாச்சு ,சுற்றிக்கொண்டே இருந்தாலும் அதுவும் தன் கடமையைச் செய்யும் :)

   Delete
 4. ஹா.. ஹா.... ஹா... சூப்பர் போங்க!

  டிட்டோ!

  ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வச்சிருக்காய்ங்க இல்லே...?

  அடடே.... இது சுபலமா ச்சே... சுலபமா இருக்கே!

  தத்துவம்!

  தம சுற்றுதே.... சுற்றுதே... வாக்கு மெல்ல விழுந்து விடும்!

  ReplyDelete
  Replies
  1. செலவு செய்தும் புண்ணியமில்லே :)

   பிடிக்காத காரியம் செய்தா இதான் பரிசு :)

   அநியாய விலையை வச்சிருக்காங்களே :)

   எதை சொல்வது ,எதை விடுவது அவ்வளவும் கோளாறு :)

   பொறந்ததும் தத்துவம் :)

   விழுந்தே விட்டது :)

   Delete
 5. ரசித்தேன்....

  த.ம. ”சுத்திச் சுத்தி வந்தேங்க!” என்று பாடுகிறது த.ம. வாக்கு!

  ReplyDelete
  Replies
  1. கடமையை செய் ,கம்முன்னு இரு ,தமிழ் மண வாக்கு விழுந்துடும் என்று உபதேசம் செய்கிறது தமிழ் மணம் :)

   Delete
 6. ''பார்க்கிறது போர்ன்சைட் ,போர்ன்விட்டா கேட்குதா உங்களுக்கு ?''//

  நல்லவேளை, கேட்டுட்டு விட்டுட்டாங்க. கடிச்சி ரத்தம் குடிக்கல. பத்ரகாளியாச்சே!!

  ReplyDelete
  Replies
  1. பத்ரகாளியை சாந்தப் படுத்த வெண்ணெய் சாற்றியிருப்பாரோ:)

   Delete
 7. ஓவ்வொன்றும் சுவை...
  ரசித்தென் ஜி...

  வாக்கும் அழுத்திட்டேன்... த,ம. அழுதுகிட்டு இருக்கு...
  ஒண்ணு பிளஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்... :)

  ReplyDelete
  Replies
  1. உங்க நம்பிக்கை பொய்க்கவில்லை ,த ம .வாக்கு விழுந்துடிச்சு :)

   Delete
 8. Replies
  1. ஏழாவது வாக்கு ஏழரை வாக்கு ஆகாமல் விழுந்திருக்கிறது ,நன்றி :)

   Delete
 9. தொலைந்த செல்போன் எப்படிக்கிடைக்கும் .?
  பிரௌசிங் செய்யவும் ஒரு விடா தேவைபடுது
  அதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே
  என்ன நோய் இல்லைன்னு தெரிய பரிசோதனையா. டாக்டர்களும் பிழைக்க வேண்டாமா

  ReplyDelete
  Replies
  1. imei (இண்டர்நேஷனல் மொபைல் எக்யுப்மெண்ட் ஐடெண்டிடி ) நம்பர் இருந்தால் கண்டு பிடிக்கலாம் :)
   இல்லைன்னா அவர் பார்க்க மாட்டாரா :)
   சொன்னால் வியாபாரம் ஆகாதே :)
   அதானே .பல லட்சம் செலவழித்து டாக்டராக வேண்டியிருக்கே :)

   Delete
 10. பத்ரகாளியாக ஆவதைப்பற்றி தெரிந்து கொண்டேன..

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டியை இவர்தான் பத்ரகாளி ஆக்குகிறார் ,திருந்துவாரா :)

   Delete
 11. ஹஹஹஹஹஹ்...

  அதானே! போர்னுக்கு எதுக்கு போர்ன்விட்டா

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. போர்ன்(எலும்பு )முறிவு என்றால் கூட போர்ன்விட்டா தரலாமோ :)

   Delete
 12. அட்டகாசமான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்து ,எனக்கு போர்ன்விட்டா சாப்பிட்ட தெம்பைத்தருது ,நன்றி :)

   Delete