24 August 2016

ரதியை எதிர்பார்த்து ஏமாந்த மன்மதன் :)

             ''இவ்வளவு அசிங்கமா ஒரு பொண்ணை  வச்சுகிட்டு ,எங்களை எதுக்கு பெண் பார்க்க  வரச் சொன்னீங்க ?''
             ''அழகான மணப்பெண் தேவைன்னு விளம்பரம் கொடுத்த மன்மதன் யார்னு  பார்க்கத்தான்  !'' 
இவர்  மனோதத்துவ டாக்டர்  ஆச்சே :)             
     ''நர்ஸிங் படிக்காத அழகான பெண் வேலைக்கு தேவைன்னு எதுக்கு டாக்டர் கேட்கிறீங்க ?''
     ''பீஸ் வசூலிக்கத்தான்....நான் கேட்டா , நூறு ரூபாய் தரவும்  அழுவுறாங்களே!''

டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ ?
       ''காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திக்கிட்டியே ...இப்போ விட்டுட்டு போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
      ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''

இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா ?
'        'என்  புருஷனை மாதிரி ஒரு அல்பத்தை பார்த்ததே இல்லை...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
         ''ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''
        ''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,நியாயம்தானே ?
      வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
      ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
      காரணம் என்னவென்றால் ...
      தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
      மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT ! 

20 comments:

 1. தமிழ் மணம் முதலாம் வாக்கு!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பதிவு வெளியாகும் நேரத்தை காலை ஐந்து மணிக்கு மாற்றலாமான்னு யோசித்துக் கொண்டிருந்தேன் ,மாற்றாததுகூட நல்லதாகப் போய்விட்டது !சரியாக 02:22:00 am க்கு விழித்து இருந்து முதலாம் வாக்கு போட்டுள்ளீர்கள்!நன்றி ஜி :)

   Delete
 2. ஈடில்லா காட்டுராஜா இதை நீங்க பாருங்க... அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்...!

  டாக்டருக்கு படிக்காத நான் அப்படித்தானே கேக்கனும்.... அதானுங்களே முறை...!

  இதுக்குத்தான் பச்சை பச்சையா பேசாதேன்னு...!

  கல்யாணத்திலதான் நல்ல ஜோடி செருப்பா பாத்துப் பாத்து எடுக்க முடியும்... இந்தத் தடவை ஸ்பேர்ல நாலு சேத்தே எடுத்து வச்சுக்கனும்... சும்மா சும்மா அலையமுடியல...!

  வேலை செய்றவனுக்கு வேலையக் கொடு... வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்த கொடு...!

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. இப்படி பெண்ணைத்தான் அவங்களும் எதிர்பார்த்து வந்தாக ,ஆனா :)

   அது சரி ,அசலும் போலியா :)

   பேசறதை நீங்களுமா ஒட்டு கேட்டீங்க :)

   அது சரி கல்யாண சீசன் வேற முடியுது :)

   வேர்வை காயுமுன் கூலியைக் கொடு :)

   Delete
 3. பொண்ணு கிடைக்கறதே கஷ்டமா இருக்கற இந்த நாளில், அழகாவது, அசிங்கமாவது! ஃபீஸ் வாங்க நூறு வழிகள்னு அவரை ஒரு புத்தகம் படக் சொல்லுங்க.. அதிலும் பணம் வரும்!! பச்சை குத்திகிட்ட பாவத்துக்கு இதான் செய்யணும்!!! இதுக்குத்தான் முன்னாடியே அட்வான்ஸா சில கல்யாணங்கள்லேருந்து செருப்பு அடிச்சு வச்சிருக்கணும்கறது!!!! Correct!!!!!

  ReplyDelete
  Replies
  1. பொண்ணுக்கு வரதட்சனைக் கொடுக்கும் நாள் எப்போ வருதோ ,அப்போதான் பெண் கிடைக்க வில்லை என்று அர்த்தம் :)
   அந்த புத்தகத்தில் அட்டைப் படத்திலும் அழகான பெண் படத்தைப் போடுவாரோ :)
   பொண்ணு பார்த்து விட்டு போன மறுநாளே சொல்லி விடலாம் ,பொண்ணு உங்க பெயரை , பச்சைக் குத்திகிட்டு ,உங்களைத்தான் கட்டிக்குவேன்னு ஒத்த கால்லே நிற்கிறான்னு அடிச்சு விடலாம் :)
   நல்ல ஐடியா ,அவங்ககிட்டே சொல்லிடுறேன் :)
   மூளைக்கு வேலை எல்லோராலும் தர முடியாதுதானே :)

   Delete
 4. Replies
  1. காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திக்கிட்டதை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. இன்னார்க்கு இன்னார் என்று தெரியாதா
  இப்போதெல்லாம் டாக்டர் ஃபீஸ் அதிகம்
  எல்லாம் ப்ளான்படி நடக்கிறதோ
  விலையைப் பற்றிக் கவலைப் படவேண்டாமே
  இருந்தாலும் வித்தியாசம் மிக அதிகம்

  ReplyDelete
  Replies
  1. தெரிந்திருந்தால் ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்ளப் போகிறார்கள் :)
   பேரம் பேச முடியாதே :)
   வடிவேலு சொன்னமாதிரி பிளான் பண்ணிச் செய்யணும் என்பதைக் கடைப் பிடிக்கிறார்கள் :)
   மொய் வைக்கக்கூட காசு வேண்டாம் :)
   அது ,திறமைக்கு மரியாதை :)

   Delete
 6. ''அழகான மணப்பெண் தேவைன்னு விளம்பரம் கொடுத்த மன்மதன் யார்னு பார்க்கத்தான் !'' // Atumai......
  நர்ஸிங் படிக்காத அழகான பெண் வேலைக்கு // SUUUper..
  அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''// AAhaaa enna puththisaaly...!
  இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !'' Ada ...kadavule...!!..piramaatham...piramaatham....!!!!
  மூளை வேலைக்கு சிலபேர்கள்தான் FIT ! //// satithaan... atumai sakothara....  ReplyDelete
  Replies
  1. பெண்ணைப் பார்த்து சொல்லட்டுமே ,அழகி பற்றி :)
   காசு வசூல் பண்ண அழகான கேஷியர் :)
   எவனும் சிக்குவானா :)
   இது செருப்போடு நிற்குமா :)
   மூளைக்கு வேலைக் கொடுத்தால் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறதே :)

   Delete
 7. ஹாஹாஹா! அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. மணப்பெண் என்றாலே... அழகுஊட்டிய பெண்தானே.... குரங்கு கையில் பூமாலை என்றால் குரங்கும் ஒருவகையில் மன்மதன்தானே....???????

  ReplyDelete
  Replies
  1. குரங்கு,கையில் கரும்பு வில்லை வைத்திருக்கிறதா :)

   Delete
 9. tha.ma.7 - ஜீ .. அழகுள்ள பெண் , அழகில்லாத பெண் என்பது ரசிப்பவரின் மனதைப் பொறுத்தது.

  ReplyDelete
  Replies
  1. மலர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ,அப்படித்தானே :)

   Delete
 10. பெண் அவ்வளவு எளிதாக கிடைக்கிறார்களா ஜி??! அழகு என்பது மனதில்தானே இருக்கிறது இல்லையா ஜி! தனிமரம்தான் சினேகா படம் போடுவார் என்றால் ஜோக்காளியும்!!! ஹஹஹஹ் படம் சூப்பர்...

  அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. பெண் கிடைக்காமல் இல்லை ,பையன் வீட்டார் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு வரதட்சனையுடன் பெண் கிடைக்கவில்லை என்பதே உண்மை :)

   சினேகா படம் போட்டதுக்கு தனிமரம் கோபித்துக் கொள்ள மாட்டார் ,சினேகாவைக் கட்டிக் கொண்ட பிரசன்னா கோபித்துக் கொள்ளாமல் இருக்கணும் :)

   Delete