25 August 2016

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா :)

             ''என்னங்க , தூங்குறப்போ எதுக்கு கண்ணாடியை  போட்டுக்கிறீங்க  ?''
            ''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''
நல்ல வேளை,தமிழில் மொழிபெயர்க்கலே :)
         '' நம்ம சென்னை ஏர்போர்ட்டில்,மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுதுன்னு சொல்றாங்க,நீங்களும் எதுக்கு இடிந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க ?'' 
         ''எல்லாம் இந்த போர்டைப் படித்துதான் !''
இது பாசமில்லே ,பயம் !
          ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
          ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''

ராதா எப்பவுமே ராதாதான் !
           ''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
            ''அதெல்லாம் இல்லை சார் !''
            ''என்னாஅதெல்லாம் இல்லே ?''
             ''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு சொல்லமாட்டேன் சார் !''

சினிமா மோகம் படுத்தும் பாடு :)
       சாத்தானின் சமையல் அறையை  ...
       கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
       ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
        ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 
---------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின்  சமையல் அறை ,சரிதானே ?

22 comments:

 1. Replies
  1. சாத்தானின் சமையல் அறையையுமா :)

   Delete
 2. கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ... நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ... நிம்மதியை தாரீரோ...! மயக்கமா கலக்கமா...?

  ‘வணக்கம் சென்னை...’ கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும்... இது சொர்க்கத்தின் திறப்பு விழா...!

  இதுதான் ஜென்மப் பாவமோ...? பாவம்...!

  ராதா காதல் வராதா...? நவனீதன் கீதம் போதை தராதா...? ராஜா லீலை தொடராதா...?

  சாத்தான்தான் கையைக் காலை முறிச்சிப்போட்டதோ...? அபிராமி வருவாளா...?

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. நிரந்தர கோமாவுக்கு செல்லும் வரை கனவு துரத்தத் தானே செய்யும் :)

   விமான ஊழியர்கள் செல்லும் பாதையிலேயே நாமும் செல்ல வேண்டும் ,ஏனென்றால் ,அவர்களுக்கு கூரை விழாத பாதை தெரிந்து இருக்கும் :)

   அதான், இந்த ஜென்மத்தோடு முடியட்டும்னு நினைக்கிறாரோ :)

   இன்று கோகுலாஷ்டமி நல்ல நாலாம் ,ராசலீலை தொடங்கட்டும் :)

   அப்பிராணியா இருக்கீங்களே ,அபிராமி எங்கே வரப் போறா :)

   Delete
 3. நல்ல நகைசுவை. 'ஈட்டிங் கார்பெட்' வயிறு வலிக்கச் செய்தது.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. விமான நிலையத்திலேயே இப்படி என்றால் ,படிக்கின்ற வெளிநாட்டவர்வர்கள் என்ன நினைப்பார்கள் :)

   Delete
 4. கண்ணாடி போட்டும் கலங்கலா தெரிந்தா...????

  ReplyDelete
  Replies
  1. கண்ணாடி போட்ட பிறகு மேலேயுள்ள படத்தைப் போல் தெளிவாக தெரிகிறதாம் :)

   Delete
 5. கண்ணே தெரியாதவர் கனவுகள் எப்படி இருக்கும்
  ஈட்டிங் கார்ப்பெட் ரசிக்க வைக்கிறது இப்படி ரசிக்க வைக்கும் பதாகைகளடிக்கடி பார்ப்பது உண்டு
  இந்த ஜன்மத்தோட இவள் தொல்லை நிற்கட்டும்
  ராதாவையும் தாராவையும் கன்ஃஃபியூஸ் செய்வதில்லை
  குணா படம் வரும் முன் கோடைக்கானல் சென்றதுண்டு

  ReplyDelete
  Replies
  1. கனவு வராதுன்னு நினைக்கிறேன் ,எதுக்கும் நம்ம திருப்பதி மகேஷ் அவர்களிடம் விளக்கம் கேட்டு விடலாமா !
   விமான நிலையத்தில் இப்படியா,இந்தியர்கள் இதையும் சாப்பிடுவார்கள் போலிருக்குன்னு வெளி நாட்டவர்கள் நினைத்து விட மாட்டார்களா :)
   ராதா ராதாதான் ,தாரா தாராதான் :)
   அப்படின்னா ,குணா குகை உங்களுக்கு தெரியாதோ:)


   Delete
 6. கலக்கலான சங்கதியெல்லாம் கனவுல கலங்கலாத் தெரிந்தா விட்டுற முடியுமா?!

  ReplyDelete
  Replies
  1. பக்கத்துலே பைனாகுலர் எதுக்கு இருக்கு ,விடுவோமா :)

   Delete
 7. வணக்கம் பகவானே !

  ஒரு சந்தேகம் தாங்களும் மனைவி கேட்டதெல்லாம்
  வாங்கிக் கொடுப்பீங்களா அவ்வ்வ்வவ்வ்வ்வ் !

  குணா குகையை நான் ஒருதடவை சென்று பார்த்திருக்கிறேன்
  ஆனால் அதுக்கு சாத்தானின் குகை என்று பெயர் இருப்பதை இன்று அறிந்தேன் நன்றி !
  அத்தனையும் கலக்கல்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நான் எதுக்கு வாங்கித் தரப் போகிறேன் (என்னிடம் கேட்டு விட்டு எதையும் வாங்கும் பழக்கம் இல்லை என் இல்லாளிடம் என்பது வேறு விஷயம் :)

   குகை இல்லை சமையலறை...நான் போயிருந்தப்போ எந்த சாத்தானும் கண்ணில் படவில்லை ,ஒரு வேளை சாப்பிட டைனிங் ஹாலுக்கு போயிருந்திருக்கும் ,அது எங்கோ இருக்கோ :)

   Delete
 8. Replies
  1. சினிமா மோகம் படுத்தும் பாடு சரியில்லைதானே :)

   Delete
 9. ஈட்டிங்க் கார்பெட் அஹ்ஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்ஜி

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடச் சொல்ல வேறெதுவும் கிடைக்கலைப் போலிருக்கு :)

   Delete
 10. அந்தப் போர்டு... ஹா... ஹா...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. நம்ம நாட்டு ஏர் போர்ட்டில் தவிர வேறெந்த நாட்டிலாவது இப்படி ஒரு போர்டைப் பார்க்க முடியுமா :)

   Delete
 11. Replies
  1. சாத்தானின் சமையல் அறையை நீங்கள் பார்த்ததுண்டா :)

   Delete