29 August 2016

'இது 'க்கும் டாட் 'காமா ' வந்திருக்கு:)

பாலை கறப்பதே பாவம் தானே :)             
             ''சத்தியமா  சொல்றேன் , பாலில் தண்ணீர் கலப்பது பாவம்னு நினைக்கிறவன்  நான் ,என்னை நம்புங்க !''
              ''ஒரு நிமிஷம்  பால் குடிக்கட்டும்னு , தாய்ப் பசுகிட்டே  கன்றுக் குட்டியை  விடாத உன்னை எப்படி நம்புறது ?''

தோசை விலை நாற்பது ,வெங்காய தோசை விலை .......:)                       
             ''உங்க ஹோட்டலில் நுழைந்ததும் வயிற்றைக் கலக்குதே !''
             ''உங்களை யார் வெங்காய தோசை விலையை பார்க்கச் சொன்னது ?''

காரணம் கதையில்லே ,காசுதானே :)
              ''உங்க பட ஹீரோயின்  கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன் என்று சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''ரெண்டு மடங்கு  சம்பளம் வாங்கிக்காம  இப்படிச் சொல்லியிருந்தால்  நம்பலாம் !''

'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு :)
             ''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
             ''ஆமா ...ஒரு இ மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் :)
               அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும்  ....
               தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
               எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
               அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

18 comments:

 1. கடைசியில் நீங்க சொல்லி இருப்பது துணுக்கு அல்ல "நறுக்" .. குட்

  ReplyDelete
  Replies
  1. காக்கைகளின் சார்பில் நன்றி :)

   Delete
 2. வெங்காயம் கிலோ பத்து ரூபாய்க்கும் அஞ்சு ரூபாய்க்கும் கிடைத்தாலும் வெங்காய தோசை விலை குறையாது!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. அது மாதிரியே ...தக்காளி கிலோ மூன்று ரூபாய்க்கு சீரழிந்தாலும் ,தக்காளி சாதம் விலையும் குறையவே குறையாது :)

   Delete
 3. கன்றுக் குட்டிக்கும்... பாலில் தண்ணீர் கலப்பது பாவம்னு நினைக்கிறவன்...! என்னை நம்புங்க பாஸ்...! பால் தமிழ்ப்பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் சிரிப்பால் சுவை அறிந்தேன்...!

  காயமே இது பொய்யடா... வெங்காயமே!

  கதைக்கு அந்தக் காட்சி அவசியம்...! டைரக்டர் என்ன கேக்கிறாரோ அதைக் கொடுக்க நான் தயார்...! மொதல்ல அவர திருப்தி படுத்தினாத்தான் படம் நல்ல வரும்...!

  ஆமாம்... அவன் வந்து இத நாய்கூட திங்காதுன்ட்டு... ஸ்கிராச் மெஷினைக்காட்டி... ஒங்க ஏ.டி.எம். கார்டை போட்டு இதுல பணம் போடச் சொல்றானே...!

  எச்சில் கையால் அன்று மட்டும் முன்னோர்களுக்கு... ஓசியில கிடைத்த ரேஷன் கடை அரிசியில படையல் வைக்கிறான்...! இத காக்கைகூட திங்கமாட்டேங்கிது...!

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. கன்றுக்குட்டி இருந்தால் ,ஒரு வேளை பாலை சப்பிரும்னு வைக்கோல் கன்றுக் குட்டியைக் காட்டி ஏமாற்றிப் பாலைக் கறக்குறவரா பாவம்னு நினைப்பார் :)

   பொய்தான்,தாறுமாறா விலை போகுதே :)

   நல்ல எதிர்காலம் அவங்களுக்கு உண்டு போலிருக்கே :)

   நகைஎதுவும் வேண்டமாமா :)

   தலைப்பாகட்டி பிரியாணியை தினசரி சாப்பிட்டு பழக்கம் ஆயிருக்கும் :)   Delete
 4. //அமாவாசை வந்தாலே //
  கருப்பு மனதுக்காரர்களை அடையாளம் காட்டும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. பிறகென்ன ,கருப்பு சட்டைக் காரரா சோறு வைக்கப் போறார் :)

   Delete
 5. Replies
  1. இன்றைய ok யில் எனக்கு சம்மதமில்லை :)

   Delete
 6. ஹோட்டலில் வெங்காய தோசை விலை குறையப் போவதில்லை ஜி....ஆனால் இங்கு கேரளா பரவாயில்லை...விலை கொஞ்சம் குறைவுதான்.

  டாட் காம் ரசித்தோம் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறிடிச்சு...வெரி குட் வெரிகுட்

  இறுதி அருமை...

  ReplyDelete
  Replies
  1. இதுவும் திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சியா இருக்குமோ :)

   குப்பை டாட் காம் இப்போதே இருக்கே :)

   Delete
 7. Replies
  1. உங்கள் பாணிதான் என் பாணியும் அய்யா :)

   Delete
 8. வெங்காய விலை ஏறி விட்டது என்று வெங்காய தோசை விலையை ஏற்றும் ஓட்டல் முதலாளிகள், வெங்காயவிலை குறைந்ததும், விலை குறைப்பு செய்வதில்லை. அடுத்த உயர்வுக்கு காத்து இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதை தட்டிக் கேட்க வேண்டும் ,எங்கே கேட்கிறார்கள் ? கேட்காமலே பையில் வந்து விழுவதைப் பதுக்கிக் கொள்கிறார்கள் :)

   Delete
 9. வெங்காயத் தோசை விலை.... எப்பவும் கூடுதல்தானே ஜி...
  டாட் காம்... சூப்பர் ஜி....
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. இப்போ ,ரொம்ப ரொம்ப கூடுதல் :)
   நீங்க இருக்கிற நாட்டில் இந்த டாட் காம் தேவையில்லை ,பிச்சைக்காரர்களே இல்லைதானே :)

   Delete