30 August 2016

உங்கள் கணவர் எப்படிப் பட்டவர் :)

                      ''திடீர்னு வந்து ,நீ மனுசனா ,பெரிய மனுசனா ,ஞானியா ,வாழும் கடவுளான்னு  ஏண்டா கேட்கிறே ?''
                     ''இதோ ,இதைப் படிச்சு பாரேன் !''
மேற்படி  தத்துவத்துக்கு  சொந்தக் காரரான  g + நண்பர் ராஜ் குமாருக்கு நன்றி !

கனவிலே இவர் வரணும்னு சொல்லாமல் போனாரே :)
           ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
           ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
          ''ஒன்லி ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... :)
        ''ஆறு கண்மாய்களில்  தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
        ''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''

கறி  ஃசாப்டா  இருக்கும் காரணம் :)
        ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
        ''My crow soft பிரியாணி கடைதான் !''

இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !
          அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
         அர்த்தம் இருக்கணும் ...
         'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
         'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
          எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

24 comments:

 1. பிரியாணி கடி அருமை ஜீ!

  ReplyDelete
  Replies
  1. பாஸ்மதி அரிசியில் ஸ்பெஷல் கறி போட்டு செய்த பிரியாணியாச்சே ,ருசிக்கத் தானே செய்யும் :)

   Delete
 2. Replies
  1. உங்கள் சிரிப்பின் பின்னால் மர்மம் ஏதுமில்லையே :)

   Delete
 3. Replies
  1. நீங்கள் ஞானியா ,வாழும் கடவுளா :)

   Delete
 4. ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... என்று உணர்த்திய தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே...! துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்...’ மனைவி சொல் மிக்க தலையணை மந்திரமில்லை...!

  ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்...’ மொதல்ல இதக் கேளுங்க...!

  ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுங்கிறாங்களே...!’ இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட...!

  கொன்றால் பாவம் சாப்டாப் போச்சு...!

  தர்மம் பண்ணுனீங்கன்னா தலை தப்பும்... சொல்லிப்புட்டேன்...! புத்தியத் தீட்டு... இல்ல கத்தியத் தீட்ட வேண்டி வரும்...!

  த.ம. 3  ReplyDelete
  Replies
  1. கணவன் மனிதனாய் இருப்பதும் ,கடவுளாவதும் மனைவி கையில்தானா :)

   வேண்டிகிட்டா கனவு காண்கிறோம் ,வருதே :)

   எறும்பு ஊற கல்லும் கரையும்ன்னு கூட சொல்றாங்க :)

   கொல்றவன் எவனோ ,சாப்பிடுறவன் எவனோ ?பாவம் எங்கே போகும் :)

   இந்த டெக்னிக் மட்டும்தான் பாக்கி :)

   Delete
 5. Replies
  1. நாலு வகை கணவர்களை ரசிக்க முடியுதா :)

   Delete
 6. அனைத்தும் அருமை. முதல் நகைச்சுவையை வேறெங்கோ படித்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. நானே குறிப்பிட்டுள்ளேனே,நண்பர் ராஜ்குமாரின் எழுத்தோவியம் இது :)

   Delete
 7. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மீண்டும் வசவு நின்றால் மனிதனாகலாம்
  கனவுகளைக் கட்டுப்படுத்தவும் டாக்டரா
  பரவாயில்லையே கடல் இல்லாத இடத்தில் இருந்தால் பார்செல்தான்
  விவேக் நடித்தஒரு படம் நினைவுக்கு வருகிறது
  மனைவி அமைவதெல்லாம்.....

  ReplyDelete
  Replies
  1. சிறிய திருத்தம் .மனிதன் என்பவன் அல்ல ..கணவன் என்பவன் :)
   டாக்டரே ஐந்து மாடி கட்டும் கனவில் இருக்கிறாரே :)
   எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)
   ஆமாம், பார்த்ததை மறக்க முடியாதுதான் :)
   மாமனார் ,மாமியார் வளர்த்த விதம் என்றும் சொல்லலாமே :)

   Delete
 8. Replies
  1. ஒன்லி ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ண முடியுமா ஜி :)

   Delete
 9. வாழும் கடவுள்தான் இன்றைக்கு பிரசித்தி...

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும் ,உங்க கண்ணுக்கு அந்த கடவுள்கள் தானே தெரியுறாங்க :)

   Delete
 10. காக்கா பிரியாணி விவேக் நினைவுக்கு வருகிறார்...

  அனைத்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. விவேக் பிரியாணி வாங்கியது தள்ளுவண்டி கடையிலாச்சே :)

   Delete
 11. மனைவியின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன், மகா ஞானி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,ஞானிக்குத்தான் மந்திரத்தின் முழு அர்த்தமும் புரியும் :)

   Delete
 12. ரசித்தேன் ஜி.
  மனைவி கத்த ஆரம்பித்ததும் தத்துவம் கொஞ்சநாளா பல பேரில் முகநூலில் சுத்திக்கிட்டு இருக்கு... ;)

  ReplyDelete
  Replies
  1. சுத்திகிட்டேதானே இருக்கும் ,அப்படித்தானே கணவன்மார்களை மனைவிமார்கள் சுற்ற விடுகிறார்கள் :)

   Delete