4 August 2016

ஜொள்ளு விடவுமா ரயிலை நிறுத்துவது :)


எழுத்தாளனை  இப்படியா அவமானப் படுத்துவது :)
             ''மனைவியுடன்  பாத்திரக் கடைக்கு  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுகிறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி என்ன   பிரயோசனம்னு  குத்திக் காட்டுறாளே !''

நீதி தேவதை சிலை சொல்லும் நீதி :)
               ''ரெண்டு பக்க நியாயத்தையும் ஆராய்ந்து தீர்ப்பு  சொல்லணும்னு  நீதிதேவதையின் வலது கை  தராசு சொல்லுது சரி  , இடது கையிலே   இருக்கிற கூர் வாள் என்ன  சொல்லுது ?''
               ''நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா குத்திகிட்டு செத்துப் போயிடணும்னுதான் !''

ஜொள்ளு விடவுமா ரயிலை நிறுத்துவது :)
         ''இந்த ஆற்றுப் பாலம் மேல் புதுசா ரயில் விட்டாங்க சரி ,கீழே ஆத்துலே பொம்பளைங்க குளிக்கத்  தடையாமே , ஏன்?''
        ''ரயில் இங்கே வரும் போது,ஜொள்ளுப் பார்ட்டிங்க  அடிக்கடி செயினை இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''

படித்த டாக்டர்களே சூது செய்யலாமா :)
        பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு 
       முன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !
       ஒருசிலர்தான் டாக்டர்களைப்போல் 
       முகமூடி ,கையுறை அணிந்து கொள்ளை அடிக்கிறார்கள் !

16 comments:

 1. ஹா.... ஹா.... ஹா... இது கேள்வி! அவர் என்ன பேப்பரிலா ஒரு எழுத்தை எழுதுகிறார்!

  அடடே.. இந்தக் கையை இதுவரை யோசித்ததே இல்லையே!

  அடடே.. இப்படி ஒரு அ(உ)பாயமா!

  அய்யய்யோ.. டாக்டர்கள் கொள்ளைக்காரர்கள் என்கிறீர்களா!

  தம - இன்னும் வாக்குப்பட்டை வரவில்லை!


  ReplyDelete
  Replies
  1. எழுத்தினால் சம்பாதிக்கணும் ...மனைவி நோக்கம் அப்படி :)

   மாத்தி நான்தான் யோசித்தேனா:)

   செயின் இழுத்தவனை அந்த ஆற்றிலேயே தள்ளி விடலாமா :)

   சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள் :)

   வந்தும் கூட சோதிக்கிறதே ,த ம பட்டை :)

   Delete
 2. பாத்திரத்திலே பெயரை வெட்டுகிறவரும் குத்திக் காட்டுறார்... மனைவியும் குத்திக் குத்திக் காட்டுகிறாள்... என்னை வெட்டிவிடாம இருந்தா சரி...!

  கணக்கெல்லாம் சரியாப் போட்டு சரியான தீர்ப்பு சொல்லலைன்னா... கத்தி இருக்கிறது ஜாக்கிரதைன்னு கத்தாம சொல்லுதோ...?!

  செயின் இல்லாம... குளிக்கச் சொல்ல வேண்டியதுதானே...!

  கொள்ளைக்காரர்கள் இனி இதை... கவனத்தில் கொள்வார்கள்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. வெட்டி விடவில்லை என்றாலும் எப்பவோ தலை முழுகிட்டாங்களே :)

   அது சொல்றது சில மை லார்டுகளுக்கு புரியவில்லையே :)

   குளிக்கலாம் ,ரயிலில் செயின் இல்லாமல் போகாதே :)

   வர்ற வருமானத்தில் என்னைக் கவனித்துக் கொள்வார்களா :)

   Delete
 3. 1. ஹஹஹஹஹ் பாவம் எழுத்தாளர்...

  2. அட! ஆமாம்ல....

  3. அடப் பாவிங்களா...இப்படியுமா...

  அனைத்தையும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. எழத்தாளர் என்றாலே தமிழ் மணமும் வாக்களிக்க விடமால் சதி செய்கிறதே :)

   யாரும் குத்திக்கிட்ட மாதிரி தெரியலியே :)

   இதுக்கு செயின் திருடர்களே தேவலையா :)

   Delete
 4. ரசித்தேன் நண்பரே
  தம ஓட்டுப் போட இயலவில்லை
  சர்வர் எரர் என்று வருகிறது
  மீண்டும் வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. அடிக்கடி மக்கர் செய்கிறதே தமிழ் மக்கர் ..தப்பு தப்பு ..மணம் :)

   Delete
 5. அய்யோ..பாவம்..ஜொள்ளு விட...வேறு இடம் கிடைக்கவில்லை..அவர்களுக்கு...

  ReplyDelete
  Replies
  1. இதுக்குமா இடம் பொருள் ஏவல் இருக்கு :)

   Delete
 6. எழுத்தாளன் ஒரு எழுத்துக்கு இவ்வளவு காசு என்று சம்பாதிக்கும் நாள் வருமோ அந்தநாளுக்காக மனைவி
  நீதி தேவதையின் கண்கட்டப் பட்டிருப்பது ஏன் என்று சொல்லலியே
  பெண்கள் குளிக்காத நேரத்தில் ரயில் விடலாமே
  எல்லா டாக்டர்களும் கையுறை முகமூடி அணிந்து கொள்ளை அடிப்பதில்லையே

  ReplyDelete
  Replies
  1. சுஜாதாவின் சலவைக் கணக்கை கூட எழுதிக் கேட்டதாக கேள்வி :)
   எந்த பக்கமும் பார்க்காமல் முள்ளைத் தொட்டுப் பார்த்தே நீதி வழங்க வேண்டும் என்பதால் ஆகியிருக்குமோ :)
   நல்ல வேளை ரயிலையை அந்த தடத்தில் விடவே வேண்டாமே என்று சொல்லாமல் விட்டீர்களே :)
   அது சரி எப்படியும் கொள்ளை அடிக்கிறார்கள் :)

   Delete
 7. 01. இதுவும் உண்மைதான்
  02. நீதிபதியா ?
  03. ஜொள்ளு விட்டால் ஆற்று நீர் வற்றாது இருக்கும்.
  04. படித்தவர்களாக இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் எழுத்துக்கு மரியாதை அவ்வளவுதானா :)
   வேற யார் :)
   கருமம் அதிலா குளிப்பது :)
   படித்தவன் சூது பண்ணினா ......:)

   Delete
 8. Replies
  1. நீதி தேவதையின் நீதி சரிதானே :)

   Delete