8 August 2016

சர்க்கரை நோய் கெடுதல் ,அதிலும் ஒரு நல்லதா :)

சர்க்கரை நோய் கெடுதல் ,அதிலும் ஒரு நல்லதா  :)              
            ''நெஞ்சு வலியால் யாராவது துடிப்பதைப் பார்த்தால்  கஷ்டமாயிருக்கு ...நல்ல வேளை,எனக்கு நெஞ்சு வலி தெரிய வாய்ப்பே இல்லை ''
              ''ஏன் ?''
              ''நாட்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நெஞ்சு வலியே தெரியாதாமே !''

போதையில் கூட நல்ல காரியம் :)
               ''மதுவுக்கு எதிரான போராட்டம் செய்ய ,அனுமதி தரணும்னு .டாஸ்மாக் மேனேஜர் நீங்களே ஏன் சொல்றீங்க ?''
               ''கூட்டம் சேர்ந்தாலே  சரக்கு ரெண்டு மடங்கு விற்குதே  !''

பூஜை நேரத்தில் நடிகை பெயர் சொல்லலாமா :)
           '' புதுமுக கவர்ச்சி நடிகை தன்னோடபேரை மாற்றிக்கணும்னு அர்ச்சகர்கள் போராட்டம் பண்றாங்களே ,ஏன் ?''
            ''சமர்ப்பியாமி ..ங்கிறது அவங்களோட பெயராச்சே !''

தலைவர் 'வண்டு முருகனின் 'வாரிசா ?
           ''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்கி விடுவார் போலிருக்கா  ,எப்படி ?''
        '' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை  போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்யணும்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''

வேகம் விவேகமல்ல ,அதுக்காக இப்படியா ?
முயலையும்  வெல்லலாம் ஆமை ...
ஆனால் ...அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் !

20 comments:

 1. நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த சர்க்கரை நோயாளியை நினைத்தால்...!

  ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்...’ ஆடிப் பாடிக் கரக்க வேண்டியதுதானே...!

  ‘சாமர்த்தியாமி...’ன்னு மாத்திக்க வேண்டியதுதானே...!

  ‘போப் பாண்டவரின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...!’ தலைவரு... பாப் பாடகரா இருப்பாரோ...?

  ‘முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
  இன்மை புகுத்தி விடும்.’ ஆமைக்குத் தெரியுது... இந்த ஆள்வினை உடைமைக்குத் தெரியலையே... கோப்பியத்தியத்தில் போட வேண்டியதுதான்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. சர்க்கரை உடையோர் பேறு பெற்றோர் ,ஆறு வேளை சாப்பிடணுமாமே:)

   பாலைத் தான் கூவி விற்கணும் :)

   சாமர்த்தியம் தான் இதுவும் :)

   பாப் இசை பாடல்களும் அருமைதானே :)

   காசு கிடைக்கும் என்றால் , கோப்பியம்கூட காப்பி குடிக்கும் நேரத்தில் காரியமாகி விடும் :)

   Delete
 2. முதலாவது ஜோக்கா, தகவலா?

  நல்ல வியாபார உத்தி!

  இப்படி எல்லாம் பெயரா!

  ஹா ஹா ஹா

  அது என்னவோ உண்மை!


  ReplyDelete
  Replies
  1. துளசி ஜி சொன்ன மாதிரி கடைசியில் வர வேண்டியதோ :)

   நாலு பேர் கூடினாலே வியாபாரம் அமோகம்தானே:)

   இன்னும் இருக்கு :)

   கௌரவர்கள் என்ன செய்வார்களோ :)

   நாடு வல்லரசு ஆவதும் இந்த வேகத்தில்தான் :)

   Delete
 3. Replies
  1. நமக்கு போப்''பாண்டவர் ' கிடைப்பாரா :)

   Delete
 4. மதுவியாபாரம் இப்படியுமா..

  நடிகையின் பெயர் வித்தியாசமாக

  ஜி முதலாவதை நீங்கள் வழக்கம் போல் இறுதியில் விழிப்புணர்வாக, தகவலாகப் போடுவது போல் போட்டிருக்கலாமோ??!!!!

  ReplyDelete
  Replies
  1. குடித்து விட்டு கோஷம் போட்டால் ,அதன் சக்தி அதிகமாமே :)

   இதுவும் வரக்கூடும்தானே :)

   ஆலோசனை சரிதான் :)

   Delete
 5. அறியத்தந்தமைக்கு நன்றி
  நல்ல வியாபார உத்தி
  ஆண்டவனிடம் அவளையே சமர்ப்பிக்கிறார் அர்ச்சகர்களுக்கென்ன
  வண்டு முருகன் யார்
  ந்ஃஅல்ல அனுபவப் பகிர்வோ

  ReplyDelete
  Replies
  1. வலி தெரியாது என்பதற்காக எச்சரிக்கை இல்லாமல் இருக்கக் கூடாது :)

   வியாபாரிக்கு சொல்லவா வேணும் :)

   அர்ச்சகர்களுக்கு பொறாமையா இருக்குமோ :)

   வடிவேலு காமெடியை பாருங்கள் :)

   அரசு அலுவலக வேகம் மஅனைவருக்கும் தெரிந்ததுதானே :)

   Delete
 6. 01. இதென்ன புதுசா இருக்கு.
  02. பிழைக்கத் தெரிந்தவர்
  03. இவங்களே அந்த நடிகைக்கு மார்க்கெட்டை ஏற்றி விட்ருவாங்களோ...
  04. இத்தாலிக்காரனுக்கு தெரியாமல் பார்த்துக்கிறணும்
  05. உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. புதுசா நமக்கு தெரியுது ,ஆனால் இது உண்மை ஜி,சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் இதய இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுமாம்,இதனால் இதய வலி தெரியாதாம்:)
   மேனேஜர் அவர் திறமையைக் காட்டுகிறார் :)
   எதிர்மறை விளம்பரமா இது :)
   ஆமாம் ,ஏற்கனவே இங்கே கன்னி மேரி பிரச்சினை வந்ததே :)
   அங்கே ,அபுதாபியிலும் அப்படித்தானா :)

   Delete
 7. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. போதையில் கூட நல்ல காரியம் செய்வதை ரசிக்க முடியுதா :)

   Delete
 8. இதைத்தான் கல்லுக்குள் ஈஈரம் என்றார்களோ...??????

  ReplyDelete
  Replies
  1. ஈரம் நல்லது ,வலி உணர்ச்சி இல்லை என்றால் முதலுதவி கூட செய்ய முடியாதே :)

   Delete
 9. ரசித்தேன் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. ஆமை ,அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் என்பது உண்மைதானே ஜி :)

   Delete
 10. Replies
  1. 'வண்டு 'முருகனோட வாரிசின் கருத்தும் தேன் போல இனிக்குதா :)

   Delete