11 September 2016

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ :)

இதுகூட தெரியாம ஏன்  திருடணும் :)        
             ''திருட்டுப் பசங்க ,பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சுன்னு வருத்தப் படுறாங்களா,ஏன் ?''
            ''ATM மெசின்னு நினைச்சு அவங்க பெயர்த்தெடுத்தது பாஸ் புக் பிரிண்ட் பண்ற மெசினாம்!''
இதைக் கேட்ட மனைவிக்கு எப்படியிருக்கும் :)               
           ''என்னங்க ,இந்த லேகியத்தை எப்படி சாப்பிடுறீங்க ,பயங்கரமா கசக்குதே  !''
           ''கல்யாணம் ஆனதில் இருந்து ,கசப்பும் எனக்கு பழகிப் போச்சே !''

பாரி முனையும் ,பாரிஸும் ஒன்றா ?            
               ''ஹலோ ,நான் இப்போ விமானத்திலே இருக்கேன் ,அதனாலே  நீ பேசுறது சரியா எனக்கு கேட்க மாட்டேங்குது !''
             ''அட  நாதாரிப் பயலே ,எதிர்த்த  பிளாட்பாரத்தை  பார்த்து பேசுடா   ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''

பொண்ணு பார்க்கையில் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !
           ''புது பெண்டாட்டிகிட்டே , டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சா , ஏண்டா ?''
           ''நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் வாங்கினவ ...என்னை  அடிச்சா.. இன்று 'திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும்னு  சொல்றாளே !''

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?
        ஒரு சில கோவில்களில் ...
       'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
        இதற்குப் பதிலாக ...
        வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
       'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
        எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !

20 comments:

 1. பாஸ்புக் பிரிண்ட் போடும் மிஷினை அடிச்ச மேதாவிகளை என்ன சொல்வது?

  ரசித்தேன் ஜி.

  உண்மைதான் பிற மதத்தினர் நுழைவதால் சாமிக்கு தீட்டாகுமா என்ன?
  கொள்ளை அடித்தவனும் கொலை செய்தவனும் கருவறை வரை போகிறான்...

  ReplyDelete
  Replies
  1. பாவம் ,இதுகூடத் தெரியாத அப்பாவித் திருடங்க :)

   கருவறையை படுக்கை அறையாய் ஆக்கிக்கிறவனும் இருக்கானே :)

   Delete
 2. எட்டம் வகுப்பு வரை நம்மல படிக்காமலே பாஸ் போட்ட வாத்தியாரைச் சொல்லனும்... ம்...ம்... அவரும் பாவம் என்னதான் செய்வாரு... பாஸ் போட்டாகனுமே... சரி... பாஸ் புக் பிரிண்ட்டிங் மெஷினை எடைக்குப் போடலாமா...?!

  ஒன்ன பாத்தா இதெல்லாம் ஒரு கசப்பா...? நான் பசப்பு வார்த்தை பேசுறேன்னு நினைக்காதே... உண்மைதான்... நீதான் கசந்த வசந்தம்...!

  ஆகாய விமானமுன்னு நினைச்சியா... ஆக கக கா... என்னோட மனம் ரெக்கை கட்டி ஆகாயத்தில பறந்துகிட்டு இருக்கின்னு சொல்ல வந்தேன்... எதையும் தப்பாவே புரிஞ்சிக்கிறா... அய்யோ... அய்யோ...!

  நா கூடத்தான் பெரிய ப்ளாக் பெல்ட்ட... கடையில வாங்கி இடுப்புல மாட்டியிருக்கேன்... எல்லாம் சேப்டிக்குத்தான்... கடுப்புல அடிச்சா... அப்புறம் எங்களுக்கும் கோபம் வருமுல்ல... வராது... ஆனா வரும்... வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...!

  ‘காசேதான் கடவுளப்பா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா...!’ சாமியே கையூட்டுக் கொடுத்து ‘‘என்ன யாராவது பார்க்க வாங்க’’ன்னு அழைக்க வேண்டியிருக்குமே...!

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. //எட்டம் வகுப்பு வரை நம்மல படிக்காமலே பாஸ் போட்ட வாத்தியாரைச் சொல்லனும்... // சார் தன்னம்பிக்கை வேண்டும். மனம் தளர வேண்டாம் உங்களாலும் தெளிவாக பிழையின்றி எழுத முடியும்

   Delete
  2. எடைக்கு போட்டா என்ன தேறும் ,இனிமேல் சரியா செய்யணும் ,இதுவும் ஒரு அனுபவம்தானே :)

   வாழ்க்கையில் சுகந்த வசந்தமே அவருக்கு இல்லையா:)

   அண்ணாமலை சைக்கிள் கூட இறக்கைக் கட்டி பறக்குமே :)

   தருவதும் பெறுவதும் நமக்கினி சரிபாதி :)

   நிலைமையைப் பார்த்தா அப்படித்தான் தோன்றுகிறது !

   Delete
  3. SUREஷ் ஜி ,
   தெளிவாக பிழையின்றி எழுத முடியும்னு SUREரா சொல்றீங்களா :)

   Delete
 3. முதல் ஜோக் நானும் படித்தேன். அனைத்தையும் ரசித்தேன். கடைசிச் செய்தி நச்.

  ReplyDelete
  Replies
  1. இதை அமுல் செய்தால் ,கோவிலுக்குள், நூற்றுக்கு தொண்ணூறு நுழைய முடியாத நிலைமை வரும் போலிருக்கே :)

   Delete
 4. அனைத்தும் ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. 'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் ' என்பது சரிதானே :)

   Delete
 5. Replies
  1. 'திருப்பு முனை ஆன நாள்' வராமலே போகட்டுமா :)

   Delete
 6. பாஸ்புக் ப்ரிண்ட் பண்ணும் மெஷினைத் திருடும்போது மாட்டிக்கிட்டாங்களா
  என்ன லேகியம் அது மனைவியை விடக் கசப்பாக
  பாரிமுனை விமானம் ரசித்தேன்
  பெண்டாட்டியை அடிச்சதை டைரியில் எழுதலாமா
  அப்போது யார்தான் கோவிலுக்குப் போவது

  ReplyDelete
  Replies
  1. தெரியாம திருடி தெரியாம மாட்டிக்கிட்டாங்க :)
   நீங்க அஎர்வேதம் போகலை போலிருக்கே :)
   ஊர்லே பலபேர் இப்படித்தான் பாவ்லா பண்ணிக்கிட்டு இருக்காங்க :)
   வேறை எதைத்தான் எழுதுவது :)
   அதானே .தட்டுலே காசு விழுந்தால் தானே ,கடவுளுக்கே ஆராதனை :)

   Delete
 7. வாங்கிய லஞ்சப்பணத்தில் கோயில் உண்டியலில் சிறிது காணிக்கையாக செலுத்தப்படுகிறதே..ஜி...

  ReplyDelete
  Replies
  1. அதிலே அவர்களுக்கு அற்ப சந்தோசம் ,கடவுளும் நம்ம பக்கம்னு :)

   Delete
 8. ஒவ்வொன்றும் ஒருவித நல்லதொரு நகைச்சுவை பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. ஒரே விதமா இருந்தால் போரடிக்குமே :)

   Delete
 9. கசப்பு பழகிப் போச்சி! அருமை!

  ReplyDelete
  Replies
  1. பாலும் கசக்கும்னு சொல்ற மாதிரியா இது :)

   Delete