18 September 2016

கணவன் பல் வலின்னா ,லேடி டென்டிஸ்ட்டைப் பார்க்கணுமாம் :)

படத்தைப் பார் சிரின்னு சொல்லலாமோ :)            
            ''உங்க பையன் இன்னும் ஸ்கூலுக்கே போகலியே ,இப்பவே பிற்போக்குவாதி ஆயிட்டானா ?''
             ''அட நீங்க வேற ,நான் சொன்ன அர்த்தத்தை (படத்தை )நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க !''
படம் தந்து மொக்கை போட உதவிய சகோ .பரிதி முத்து ராஜன் ஜி அவர்களுக்கு நன்றி !
மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)
         ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
          ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

கணவன்  பல் வலின்னா  ,லேடி  டென்டிஸ்ட்டைப் பார்க்கணுமாம் :)
           ''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு   ஏன் சொல்றே ?''
            '' பொண்ணுன்னா  பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !
            ''டாக்டர் ,நாளைக்கு என்  அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் , பண்ணவிருந்த ஆபரேசனை ஏன் தள்ளி வச்சிட்டீங்க ?''
           ''நல்லநாளும் அதுவுமா ...உங்க  சொந்த பந்தங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?
பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

30 comments:

 1. tha.ma.1 - தமிழகத்தில், பெங்களூர் ஐயங்கார் பேக்கரின்னாதான் கேக் வியாபாரமே நடக்குது. எங்கள் ஏரியா பக்கம் உள்ள ஒரு பேக்கரி கடையின் பெயர் ‘ஜெர்ஸி ஐயங்கார் பேக்கரி’

  ReplyDelete
  Replies
  1. அதானே ,பேக்கரிக்கும் ஐயங்காருக்கும் என்ன சம்பந்தம் ?பேக்கரி வகைகளில் முட்டையைச் சேர்ப்பார்கள் ,ஐயங்காருக்கு முட்டை என்றாலே ஆகாதே :)
   ஜெர்ஸி?கிறிஸ்தவரோ ?ஐயங்கார் எப்படி கிறிஸ்தவர் ஆவார் :)

   Delete
 2. முதலில் முற்போக்குவாதியாகி பிறகு பிற்போக்குவாதியானவன்... ‘யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ன்னு இதைத்தான் சொல்றாங்களோ...?!

  ‘அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை புடிச்சி கை வெளக்கி ஒலக்கையத்தான் கைய மாத்தி குத்தும்போது வலிக்கவில்லையா...?’ன்னு பரிதாபத்துடன் பார்க்கிறதுகூடத் தப்பா...?!

  ‘பொம்பள சிரிச்சாப் போச்சு’ ஆம்பிள பல்லக் காட்டினா தப்பில்லை...!

  அறுபதாவது பிறந்த நாளைக் கண்டு விட்டுப் போங்கள் என்ற நல்ல எண்ணம்தான்...!

  எப்பொழுதும் தமிழனுக்கு ‘ஆரிய’ உணவுதான் பிடிக்கும்...! அதனால்தான் சூடு சுரணை இல்லாமல் இருக்கிறானோ...?!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. எனக்கொரு சந்தேகம் ...கழுதைக் கழுத்துலே மணியைக் கட்டினால் மணியோசை முன்னே வராதா :)

   இவ்வளவு பரிதாபப் படுபவர் ஓலக்கையை வாங்கிக்கிட்டு குத்த வேண்டியதுதானே :)

   இதிலும் பெண்ணடிமைத் தனம்தானா :)

   இவர் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்தாலே அறுபது என்ன ,ஆயிரம் பிறை கண்டு அவர் வாழுவாரோ:)

   சினிமாவில் ,ஆரிய உதடும் பிடிக்கும் போலிருக்கே :)

   Delete
 3. ரசித்தேன். நல்ல நாள் அதுவுமா நகைச்சுவையை அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. புத்த சிலை ஆராய்ச்சிக்காக எத்தனை ஊருக்கு போயிருப்பீங்க ,எங்காவது திராவிட உணவகம் பார்த்ததுண்டா :)

   Delete
 4. Replies
  1. பல் வலின்னு கூட கணவன் சொல்ல முடியாததை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. //பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு சொன்ன மகராசி யாருங்க ?

  எங்க வீட்டம்மாவிடம் பல் வலின்னு சொன்னா டாக்டரை பார்க்க சொல்ல மாட்டாங்க எந்த பல்வலிக்குதுன்னு கேட்டு அந்த பல்லை பூரிக்கட்டையால் அடித்து உடைத்துவிடுவார்கள்..ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லிட்டீங்க ,நாங்க சொல்லிக்ககூட முடியலே :)

   Delete
  2. பல் டாக்டர் பீஸ் மிச்சம் மதுரைத் தமிழனுக்கு

   Delete
  3. அப்புறம் கட்டிக்க வேண்டாமா ,நான் பல்லைச் சொன்னேன் :)

   Delete
 6. ஹோசூரிலிருந்து வாக்களித்து, அனைத்தையும் ரசித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. அங்கேயே இருங்க, பார்டரைத் தாண்டி போகாதீங்க:)

   Delete
 7. பல் வலியின் போது பல்லைக்காட்டி நிற்கமுடியுமா...?

  ReplyDelete
  Replies
  1. வேற எதைக் காட்டுவது :)

   Delete
 8. தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !//

  உண்மை பேசும் டாக்டர்களும் உண்டுதானே?!

  ReplyDelete
  Replies
  1. மருத்துவ உலகின் வில்லங்கம் எல்லாம் வெளியே வருதுன்னா ,மனசாட்சி உள்ள டாக்டர்களும் இருப்பதால் தானே :)

   Delete
 9. அண்மையில் ஒரு செய்தி படித்தேன் தன்னுடைய குழந்தை வயது போட்டோக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக ஒரு பெண் தன் தாய் மேல் வழக்கு தொடர்ந்திருக்கிறாரம் பௌட்டியில் படம் அதை நினைவு படுத்தியது
  குத்துக் கல்லும் சிலைசெய்ய உதவும்
  பாம்பேயில் என் பல் பிடுங்க வந்த லேடி டாக்டரைப் பார்த்து நான் வழிந்தது நினைவில் வருகிறது
  டாக்டரோடு சொந்தங்களுக்கென்ன பேஷியன்டின் சொந்தங்களுக்கல்லவா குறை இருக்கும்
  உங்களூக்கு ஏனிந்த ஆரியப் பகை

  ReplyDelete
  Replies
  1. பெற்ற தாய்க்கு இந்த உரிமைகூட இல்லையா :)
   உதவினாலும் , கொப்பும்குலையுமா அது இருக்காதே :)
   ஆகா , இன்னும் அதைப்பற்றி பதிவு போடவில்லையே :)
   அன்பானவர்கள் என்றால் குறை இருக்கும் :)
   ஆமாம் ,ஆயிரங்காலத்து பகை :)

   Delete
 10. ஆஹா எப்பவும் போல இன்றும் இரசித்தேன் ஐயா.நன்றி

  ReplyDelete
  Replies
  1. அதிலும் அந்த பாப்பா படம் அருமைதானே :)

   Delete
  2. இன்றைய பதிவுக்கு வரலாமே :)

   Delete
 11. Replies
  1. ரசிப்பதோடு முடித்துக் கொள்கிறீர்களே ,நியாயமா ஜி :)

   Delete
 12. எல்லாம் வியாபாரம் ஆகணும்ன்னா ஜெர்ஸி-ன்னு வைக்கிறதுக்கு பதிலா ஐயங்கார் பேக்கரி வெச்சுடுறாங்க

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா , அங்கே மட்டன்,சிக்கன் பப்ஸ் எப்படி போடுகிறார்கள் :)

   Delete
 13. Replies
  1. பையன் முகத்தில் தெரியும் எக்ஸ்பிரஷன் அருமைதானே :)

   Delete