22 September 2016

மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)

எழுத்தை மட்டும் ஆளத் தெரிந்தால் போதுமா :)
           ''அவர் எழுதின 'தம்பதிகளின் ரொமான்ஸ் ரகசியங்கள் ' புத்தகம் செம சேல்ஸ் ஆகுதே ,ஆனாலும்  ஏன்  சோகமா இருக்கார் ?''
           ''அவர் மனைவியிடம் இருந்து டைவர்ஸ் நோட்டீஸ்  வந்திருக்காமே !''
நுணல் மட்டுமா வாயால் கெடும் :)                
       ''அந்த டாக்டர் போர்டு எழுதி வைத்ததால் மாட்டிக்கிட்டாரா ,என்ன எழுதி இருந்தார் ?''
      ''இங்கு தேர்தல் ஜுரத்துக்கு ஊசி போடப்படும்னுதான் !'' 

50/50 தான் தேறும் போலிருக்கு !            
           ''நர்ஸ் ,நோயாளிங்களை படுக்கவைக்க CCU வார்டில் இடமிருக்கா ,இன்னிக்கு நாலு மேஜர் ஆப்பரேசன் இருக்கே !''
            ''தேவையான அளவுக்கு ரெண்டு பெட் இருக்கு டாக்டர் ''
            ''மீதி ரெண்டு பேருக்கு ?''
            ''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''

'ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே :)
        ''ஷக்க லக்க பேபின்னு பாடி, ஒரு பிகரை லவ் பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''
        ''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு ,என் அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''

மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)
மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

28 comments:

 1. 'கட்டிப்புடி... கட்டிப்புடிடா...' பாட்டை மட்டும் அவர் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருந்தாப் போதுமா...? அதான் விவாகம் ரத்து...!

  ‘வருது வருது... தேர்தல் வருது...’ ஜோசியரே...! இந்தத் தேர்தல்ல எவ்வளவு வரவு வருமுன்னு கொஞ்சம் கையப் பாத்துச் சொல்லுங்க...!

  பரவாயில்லையே... அப்ப... நாலுக்கு இரண்டு பழுதில்லைன்னு சொல்லுங்க...!

  தப்புத் தாளங்கள் வழி தவறிய பாதங்களா ‘வானமே எல்லை’யா ஆகிடக் கூடாதில்ல...!

  ‘நெருப்புடா... நெருங்குடா... முடியுமா...?’ என்னை சீதை என்றா நினைத்தாய்... கண்ணகிடா...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,செயல்பாடுதானே முக்கியம் :)

   வர்றது ஆயிரம்னா போறது பலஆயிரம் :)

   தேறிய வரைக்கும் லாபம்தான் :)

   திசை மாறிய பறவைகள் ஆகலாமா :)

   எரிந்து போவேன்னு நினைச்சியா ? ஊரையும் சேர்த்து எரிப்பேன்டா:)

   Delete
 2. டாக்டர் ஜோக்குக்குப் புன்னகைத்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. இப்பவே உள்ளாட்சித் தேர்தல் ஜூரம் ஆரம்பித்து விட்டதே :)

   Delete
 3. Replies
  1. புத்தகத்தின் நடுப் பக்கத்தையும்தானே :)

   Delete
 4. 1) என்ன தான் புத்தகம் வெளியிட்டாலும் எழுத்துப் பிழை நிறைய இருந்தது.. அதனால் தான்!..
  2) என்ன ஊசி..ன்னு சொல்லியிருக்கலாம்!..
  3) மார்ச்சுவரி காலியா இருந்தா - சிறப்பு டாக்டரா?.. சிரிப்பு டாக்டரா?..
  4) இங்கேயுமா?... கொடுமை!..
  5) போற வழிக்குப் புண்ணியம்!..

  ReplyDelete
  Replies
  1. எழுத்துப் பிழை அச்சு கோர்ப்பவர் செய்து இருக்கலாம் ,இவரிடம் வேறு ஏதோ 'பிழை 'இருக்கும் போலிருக்கே :)
   வைட்டமின் ப ஊசிதான் :)
   உண்மையில் அவர் டாக்டரா ?கருப்பு டாக்டரா :)
   டேய் தகப்பா ,கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்ணியிருக்கே :)
   இருந்தாலும் எரிந்தாலும் உன்னோடுதான் :)

   Delete
 5. கவனமா இருங்க.சார்..மனைவி கிட்ட....

  ReplyDelete
  Replies
  1. நான் கொடுமை பண்றதெல்லாம் நம் வலையுலக உறவுகளிடம்தான் ! தினசரி நான் செய்ற கொடுமைக்கு , இவ்வளவு பார்வைகள் ஜோக்காளி மேல் விழுகிறது என்றால் நீங்களெல்லாம் எவ்வளவு பொறுமைசாலிகள் :)

   Delete
 6. தேர்தல் ஜுரம் ஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. டெங்கு காய்ச்சலுக்கு இது பரவாயில்லையா :)

   Delete
 7. சொந்த ரகசியங்கள் புத்தகத்தில் வந்துவிட்டதோ
  தேர்தல் ஜுரத்துக்கு ஊசியா பணம் அல்லவா கொடுக்க வேண்டும்
  டாக்டரை நன்கு அறிந்த நர்ஸ்
  அப்போ சகோதரி ஆகவேண்டுமா
  உன்னையும் சேர்த்து எரிப்பேண்டா என்கிறாளோ

  ReplyDelete
  Replies
  1. சொல்லிக்க ரகசியமா ஏதும் இல்லை போலிருக்கே :)
   இது ஒரு கொள்ளை ஜூரம் ,பணத்தை அள்ளிக் குடித்து விடும் :)
   இல்லையென்றால் தேவையான அளவுக்கு என்ற வார்த்தை வருமா :)
   உதறிட்டுப் போறதுக்கு இதுவும் ஒரு சாக்கு :)
   சொல்லவில்லை ,செய்கிறாள் :)

   Delete
 8. ரொமான்ஸ் ரகசியம் எழுதினவருக்கு ரொமான்ஸ் பண்ணத் தெரியலை போலிருக்கே! ரசித்தேன்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இவர் பாட்சா எல்லாம் பேப்பரில் மட்டும்தானோ :)

   Delete
 9. ஆஹா அருமை ஐயா.மருத்துவர் முதல் மனைவி வரை அனைத்தும் அருமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. எழுத்தாளரை,நீங்களும் ஏன் அம்போன்னு விட்டுட்டீங்க :)

   Delete
 10. மனைவியிடம் இருந்து டைவர்ஸ் நோட்டீஸா?
  எழுத்தை மட்டும் ஆளத் தெரிந்தால் போதுமா :)
  மனைவிக்கும் காட்டி எழுதி இருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. பிறகென்ன. டைவர்ஸ் நோட்டீஸ் சின்ன வீட தர முடியும் :)
   போதாதுன்னு கண்கூடாத் தெரியுதே :)
   புத்தகமே வெளியே வந்திருக்காதே :)

   Delete
 11. கட்டிபிடி வைத்தியம் இதுதானோ....!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. கட்டிஅழு அதிர்ச்சி வைத்தியமும் ஆகியிருக்கலாம் :)

   Delete
 12. நெருப்புடா... விடுவேனாடான்னு மனைவிமார் செய்வதும் நியாயத்தான் இருக்கு...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. நியாயம் தெரிஞ்சு நடந்து கிட்டா சரிதான் :)

   Delete
 13. ரொமான்ஸ் எழுதியவருக்கே டைவர்ஸா ?

  ReplyDelete
  Replies
  1. கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் என்பது ரொமான்சுக்கும் பொருந்துமோ :)

   Delete
 14. டாக்டர் ஜோக் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அசைவம் எப்புவுமே உங்களுக்கு ஆகாது .அதான் முதல் 'அசைவ 'ஜோக்கை ரசிக்க முடியவில்லையோ :)

   Delete