24 September 2016

பிறக்கப் போறது என்னா, ஆணா,பெண்ணா :)

 இருந்தாலும் இவ்வளவு செல்லமா :)         
           ''சம்பந்தியம்மா ,என் மக ரொம்ப செல்லமா வளர்ந்தவ......''
           ''நீங்க சொல்லவே வேண்டாம் ,பால் பாக்கெட்டின்  எந்த மூலையை கட் பண்ணனும்னு , உங்க மக கேட்டப்பவே நான் புரிஞ்சுகிட்டேன் !''

மனைவிக்கு வந்த சந்தேகம் !           
       ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
       ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
               ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
                ''மதயானைக் கூட்டம், படத்திற்கும்  கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறாரே !''

பிறக்கப் போறது என்னா, ஆணா,பெண்ணா :)
கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று 
அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல 
,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் 
ஆச்சரியம் ஒன்றுமில்லை ...ஆனால் ,இப்படி 
பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று 
ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு 
அறிவுறுத்தியுள்ளது ...கர்ப்பிணிப் பெண் முகம் 
பளபளப்பாக ஆனாலும் ...இனிப்பை சாப்பிட 
ஆர்வம் அதிகமானாலும் ...வாந்தி,மயக்கம் 
இல்லாமல் போனாலும் ...சிசுவின் இதயத் 
துடிப்பு 140ஆக இருந்தால் ...பெண் குழந்தை 
பிறக்குமென்றும் ...
வலது கையை ஊன்றி எழுந்தாலும் ...வலது புற நாசி 
வழியாக சுவாசம் இருந்தாலும் ...ஆண் குழந்தை பிறக்குமென்றும் 
நம்பப் படுகிறது ...

நமக்கு மிகவும் அறிமுகமான 
...அமெரிக்காவில் மருத்துவ சேவை 
செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது 
அனுபவத்தின் மூலம் ...கருவில் வளர்வது 
ஆணா ,பெண்ணா என்பதை அறியத் தந்த  
விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!
அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!
ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.
நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியதால் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கையின் ஆணி வேர்!
 நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!

14 comments:

 1. பால் பாக்கெட்டில் எந்த மூலையைக் கட் பண்ணனும்னு...!!!! ஹா.... ஹா.... ஹா...

  ரசித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. மருமகள் பேசிக்கில் இருந்தே கற்றுக்கணும் போலிருக்கே :)

   Delete
 2. விளையும் பயிர் முளையிலே தெரியுமுன்னு சொல்லுவாங்க...! பால் பாக்கெட்டின் எந்த மூலையைக் கட் பண்ணனும்னு கேட்டதுக்காக... மூலைகீழே இருக்கான்னு கேட்டுட்டு... சனி மூலையில ஏன் உட்காந்து பொலம்புறீங்களே...!

  ‘கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு’ நண்பன் கேட்டது உன்னோட காதுக்குக் கேட்டிடுச்சா... நண்பேன்டா...! வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே... ஏய் வச்சுக்கவா... ஏய் வச்சுக்கவா... இனி வச்சுக்க முடியாதுன்னா... கட்டிக்க வேண்டியதுதான்...!

  நீங்க பக்கத்தில இருக்கிறப்ப... ஏன் அவரு யானையைக் கண்டு பயப்படுறாருன்னு தெரியலையே...!

  ‘மேலும் கீழும் கோடுகள் போடு... அதுதான் ஓவியம்... நீ வரைந்தால் காவியம்...’ “நல்ல நேரம்... நான் பிழைத்துக் கொண்டேன்...!”

  த.ம. 3  ReplyDelete
  Replies
  1. மருமக் கையாலே ஒரு டம்ளர் பால் குடிக்க நினைச்சா ,பாலை ஊற்றி அணைத்து விடுவா போலிருக்கே :)

   வச்சுக்கிறது சின்ன வீடா இருந்தாலும் கட்டுறது பெரிய வீடா இருக்கட்டும் :)

   அதானே ,இது கும்கி யானையாச்சே :)

   காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் ஆகாமல் போனால் சரிதான் :)

   Delete
 3. Replies
  1. மனைவிக்கு வந்த சந்தேகம் வந்தது ,நியாயம்தானே :)

   Delete
 4. பால்பாக்கெட் மூலை ஹஹஹஹஹஹ்ஹஹ்ஹ்

  ReplyDelete
  Replies
  1. அடிப்படையிலேயே கோளாறா இருக்கே :)

   Delete
 5. இப்படியும் சொல்லி இருக்கிறார்கள்.. கர்ப்பமான பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும் சிறிதாக இருந்தால் ஆண் குழந்தை என்று....

  ReplyDelete
  Replies
  1. அவரவர் அனுபவத்தில் சொன்னது எல்லாமே பொய்த்தும் விடுகிறதே :)

   Delete
 6. Replies
  1. ரசித்துப் போட்ட வாக்குக்கும் நன்றி :)

   Delete
 7. செல்லமோ செல்லம் சந்தேகச் செல்லம்
  வாங்கிப் போட்டிருக்கும் ப்லாட்டில் கட்டப் போவது சின்ன வீட்டுக்கா என்று கேட்டிருப்பாரோ
  பாரதியின் சாவு பற்றி முன்பே படித்த நினைவு
  அனுபவத்தின் மூலம்கற்றது எத்தனை குழந்தைகளுக்குப் பிறகு

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம் என்று கூடச் சொல்லப்படாது ,அறியாமை :)
   நீங்க வேறு புதுக் குழப்பத்தை உண்டு பண்ணி விடுவீர்கள் போலிருக்கே :)
   பாரதி செத்து பல காலமாச்சே ,படித்திருக்கலாம் :)
   நூறு அனுபவம்னா நூறு பிள்ளைப் பெக்க முடியுமா :)

   Delete