27 September 2016

பொண்ணுங்க ' டூ வீலரில்' எழுதக்கூடாதது :)

இவரை  மேய்க்கிறது கஷ்டம்தான் :)          
            ''உங்க கணவருக்கு  படிப்பே ஏற மாட்டேங்குது  ,மாடு மேய்க்கத்தான் அவர் லாயக்கு !''
            ''அப்படி சொல்லாதீங்க ஸார்,மாடு  மேய்க்கக் கூட  தெரியலைன்னுதான் அவரை  முதியோர்  ஸ்கூலுக்கே அனுப்பியிருக்கேன்  !''

பொண்ணுங்க ' டூ வீலரில்' எழுதக்கூடாதது :)
          ''ஏண்டா ராஸ்கல் ,என்  பின்னாலேயே வர்றே ?''
           ''தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு உங்க வண்டியிலே எழுதியிருக்கீங்களே !''
செவ்வாய் தோஷத்தால்  திருமணம் தள்ளிப் போகுமா :)               
          ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
         ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா :)
           ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
           ''இதெல்லாம் என்னங்க பிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பாரத்தா அசந்துடுவீங்க !''

குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடியதா :)
பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் 
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதை  உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை  இப்போது   MP!

34 comments:

 1. வணக்கம் ஜி !

  ஆமா முதல் இரவு வீடியோவா ?????????? அவ்வவ்
  கலக்கல் நகைச்சுவைகள் ஜி தொடர வாழ்த்துகள்
  தம முதல் வாக்கு

  ReplyDelete
  Replies
  1. சினிமா ஆசையுள்ளவர் போலிருக்கு ,திருமணத்தை எடுக்கச் சொன்னால் ,திரைப் படம் போல் எடுத்து இருக்கிறார் :)

   Delete
 2. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கலவி கற்க வந்து என்ன செய்யப் போகிறார்!

  முதல் இரவையும் வீடியோவா! யாருங்க அது!

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் மன்னிக்கவும், கல்வி என்று படிக்கவும்.

   Delete
  2. கல்வி ,கலவி ...நான் நேற்று விட்ட அம்பு எனக்கேவா :)

   Delete
  3. கல்விக்கும் கலவிக்கும் ஏற்ற வயது இது இல்லையா :)

   Delete
 3. படி ஏற மாட்டேங்கிறாரே...! ‘படி தாண்டா பத்தன்’ என்ற பட்டம் கொடுக்க வேண்டியதுதான்...!

  வா...வா...வா... கண்ணா வா... தொடு வானம்... தொட்டுவிடும் தூரம்தான்...! தொட்டால் பூ மலரும்...!

  ’காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்... காதலிக்க சொல்லும் வண்ணங்கள்...’ கூடா வரன் கூடி வரும்...!

  ‘பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!’ முதல் இரவைத் திரைப்படத்திலேயே காட்டி விடுகிறார்களே...! ஓ... அது நிழல் நிஜமாகிறது... இது நிஜம் நிழலானதோ...?!

  மக்களிடம் எப்படி நடிக்க வேண்டும் என்ற முன் அனுபவம் உள்ளவரைத் தேர்வு செய்வதுதானே முறை...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. படி ஏறமுடியாது ,படிப்பும் ஏறாது ..வயது அப்படி :)

   தொட்டால் பூவும் மலரலாம் ,செருப்பால் முதல் மரியாதையும் கிடைக்கக்கூடும் :)

   காதலிக்க தோஷம் தடை செய்யாதே :)

   நிழலைப் பார்க்கலாம் நிஜத்தைப் பார்க்கலாமோ :)

   நல்ல முறைதான் ,நடிப்புச் செம்மல் என்று பட்டமே தரலாம் :)


   Delete
 4. Replies
  1. எட்டைத் தொட உதவிய உங்களின் நான்குக்கு நன்றி :)

   Delete
 5. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜோக்குகள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. என் பதிவும் 'தொடர்ந்து வா'ன்னு சொல்லுதா ,இல்லையா :)

   Delete
 6. மேய்க்க ஸ்கூல்....ஹிஹிஹிஹி
  எதுடா சக்குன்னு இருக்கானுங்க பயபுள்ளைங்க....
  கல்யாணத்தை முழுசா எடுங்கன்னு பேசினதை...இப்படியா பண்ணுறது....
  ஹஹஹா...
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அவரை... மேய்க்கவே அந்த அம்மாவுக்கு நேரம்சரியாக இருக்கும் போலிருக்கு :)
   வழியுறதுக்கு காரணமா வேணும் :)
   நல்ல வேளை, லைவ் ரிலே செய்யாமல் விட்டார்கள் :)

   Delete
 7. Replies
  1. ஸ்கூட்டரா ,அந்த பொண்ணா :)

   Delete
 8. எம்பி எம்பி ஆடினால் M.P யா ?

  ReplyDelete
  Replies
  1. குனிஞ்சு குனிஞ்சு கும்பிட்டு மந்திரி ஆகலையா :)

   Delete
 9. மாடு மேய்க்கறது அவ்வளு ஈசி இல்ல

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ?எனக்கு அனுபவம் இல்லையே ஜி :)

   Delete
 10. Replies
  1. ரசித்து விட்டு ,என் வாக்கு என் உரிமைன்னு சொல்றீங்க ,அப்படித்தானே :)

   Delete
 11. 'தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு--இதையாவது டம்ளர் பாய்ஸ்கள் ஒழுங்கா செய்தாலே..டிராபிக் பிரச்சினை இருக்காதுன்னு நிணைக்கிறென்.

  ReplyDelete
  Replies
  1. தொட்டு விடாதே பதில் முத்தமிடாதே என்று போட்டிருந்தால் பிரச்சினை வந்திருக்குமா :)

   Delete
 12. 'தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு--இதையாவது டம்ளர் பாய்ஸ்கள் ஒழுங்கா செய்தாலே..டிராபிக் பிரச்சினை இருக்காதுன்னு நிணைக்கிறென்.

  ReplyDelete
  Replies
  1. டம்ளர் பாய்ஸ்கள்....அதான் டீ சர்ட்டுக்கு பின்னால் அலைகிறார்களோ :)

   Delete
 13. ஜி மாடு மேய்க்கறதும் கஷ்டம்தான் ஜி...பாவம் தான் அவரு

  அனித்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. அவரை மேய்ப்பதும் கஷ்டம்தான் :)

   Delete
 14. இதை நான் மிஸ் செய்து விட்டேனே

  ReplyDelete
  Replies
  1. இதுக்காக 'முருகா 'என்று மனம் வருந்த வேண்டாம் (உங்க முருக புராணத்தைப் படித்ததால் இந்த வேண்டுகோள் :)

   Delete
 15. தொடர்ந்து வா தொட்டு விடாதே நல்ல நகைச்சுவை

  ReplyDelete
  Replies
  1. பய பிள்ளைங்க பின்னால் வருவதில் எந்தத் தவறும் இல்லைதானே :)

   Delete
 16. முதலிரவு வீடியோவா?
  சொல்ல முடியாது சாவையெல்லாம் வீடியோவா எடுத்து முகநூலில் போடுறானுங்க...
  முதலிரவையும் போட்டாலும் போடுவானுங்க ஜி.

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு பிரச்சினை என்றால் இந்த முதலிரவு காட்சி,சாட்சி சொல்லுமே :)

   Delete