28 September 2016

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக் கூடாதுதானே :)

வில்லனுக்கு வில்லனா இருக்காங்களே :)            
               ''டிரைவர்,  சிகரெட் பிடிக்கிறவரை இறக்கி விடணும்னு  விசில் அடித்தால்   வண்டியை  ஏன் நிறுத்த மாட்டேங்கிறீங்க ?''
               ''ஸ்டாப் இல்லாத  இடத்தில்  இறங்கணும்னு  , இப்படி  செய்வது  அந்த  பயணியின் வழக்கமாச்சே  !''

வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''

 புரியுது ,ஆனா புரியலே :)              
           ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
           ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''
இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா :)
           ''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
          ''அழகான  பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக்  கூடாதுதானே :)
இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

22 comments:

 1. சிகரெட் பிடிக்கிற சீக்ரெட்... ஸ்டாப்பா இருக்கிற டிரைவருக்குத் தெரிஞ்சு போச்சா... அப்ப ஸ்டாப்புல நிக்காது...!

  பருப்புடா... பொசுக்குடா... முடியுமா...? பயமா ஹா ஹா... பருப்புடா... ரேஷன் பருப்புடா... பொசுக்குடா பாப்போம்... பொசுக்குனா பொசுங்காத கூட்டம்... பருப்புடா...! முடியுமா நடக்குமா இன்னும்...?

  எதையுமே லேட்டாத்தான் சொல்றதே உன்னோட வேலையாப் போச்சு... இதுவரைக்கும் இத நீ சொல்லவே இல்லையே... அப்ப என்னோட கை ஒ மேல இனி படாதுன்னு நினைக்கிறேன்...!

  நித்திசாமிக்கு வந்தது ஆசை... இரஞ்சிக்கு வந்தது பேராசை... நித்திய கண்டம் பூர்ண ஆயுசு...! ஓ... சாமியோ...!

  ‘கொலையும் செய்வாள் பத்தினி...’ தெரிஞ்சுக்கங்க...! சனியன் தொலைந்து, புதிய ஞாயிற்றின் ஒளி பிறந்து இனியாவது நிம்மதியாக வாழட்டும்...!

  த.ம. 1
  ReplyDelete
  Replies
  1. சீக்ரெட்டா பிடித்தாலும் நெடி காண்பித்து விட்டதே :)

   பொங்காத கூட்டம் கூட வேகாத பருப்பு போலத்தான் :)

   ரொம்பத்தான் விளையாடி விட்டார் போலிருக்கு ,அதான் இந்த கண்டிஷன்:)

   ஒளிந்து இருந்து படம் பிடித்தவருக்கு எந்த வித ஆசையோ:)

   தாலி இறங்கினாலும் பரவாயில்லை, தொலைந்தால் சரிதான் :)

   Delete
 2. ஹா.....ஹா.....ஹா.....

  என்ன ஒரு ஐடியா அந்தப் பயணிக்கு!

  துயரம்பருப்பு! பொருத்தம்தான்!

  ஹா.....ஹா.....ஹா.....

  பேராசை! ஹா.....ஹா.....ஹா.....

  அதுசரி.

  ReplyDelete
  Replies
  1. புகைப் பிடித்தால் உடனே இறக்கி விடப் படுவீர்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் :)

   வேகாத பருப்புக்கு இப்படியும் ஒரு பொருத்தம் :)

   பெயரை ரீப்பேராக்கும் பேராசை :)

   சந்தோசம் தரும் சாவும் இருக்கத்தான் செய்கிறது :)

   Delete
 3. ஹஹஹஹ்..

  ஜி துவரம் பருப்பு ரேஷனில் சமீபத்தில் நன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்ட நினைவு...

  அனைத்தும் ரகித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இல்லாதவங்களுக்கு எல்லா பருப்பும் நல்ல பருப்பே :)

   Delete
 4. ரசித்தேன்.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. துயரம் பருப்பின் சுவை பிடித்ததா :)

   Delete
 5. பயணியின் வழக்கம் ட்ரைவருக்குத் தெரிந்திருக்கிறது கண்டக்டருக்குத் தெரியவில்லையே
  ரேஷன் கடையில் பருப்பு வாங்கி நாட்களாகி விட்டது நீங்கள் சொன்னால் துயரம் பருப்பாகத்தான் இருக்கும்
  யார் சொன்னது
  ஆன்மீக குரு ஆண்மைமிகு குருவானால் பதில் சரி
  இப்படியுமா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. கண்டக்டர் வேலைக்கும் புதுசு ,அந்த லைனுக்கும் புதுசு :)
   இது ஜஸ்ட் ஃபன் ,நல்ல பருப்பும் கிடைப்பதாக தில்லையார் சொல்றாரே :)
   சுகம் கண்ட பூனை சொல்லியிருக்கும் :)
   இல்லறக்காரனுக்கு ஒரு பெண்டாட்டிதான் என்று சொல்லாமல் சொல்கிறாரோ :)
   டாஸ்மாக் அடிமைகளின் குடும்பத்தில் இப்படித்தான் இருக்கும் :)

   Delete
 6. 01. புதுமை மனிதர்
  02. உண்மைதானே
  03. தெளிவாக சொன்னால் புரியும்
  04. நல்ல ஸ்குரு
  05. சிலரது வாழ்க்கையில் உண்மையே

  ReplyDelete
  Replies
  1. அவருக்கே வில்லனா இருக்காரே ஓட்டுனர் :)
   வேகாத பருப்பு வெந்தால் அதிக ருசியாமே :)
   புரியும் ,அனால் சேட்டைத் தொடரும் :)
   அதான்நல்லா ஏற்றி விடுகிறாரே :)
   அந்த சிலர் ,மொடாக் குடியர்கள் :)

   Delete
 7. குடியால் கணவன் சனியாகிவிட்டால் இப்படித்தான் தோன்றும் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. இந்த சனியனைப் பிடிக்க ,எமன் வேகமா யமகாவில் வருகிறானோ :)

   Delete
 8. குடியால் கணவன் சனியாகிவிட்டால் இப்படித்தான் தோன்றும் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. அழுத்தந்திருத்தமா இன்னொரு முறையும் சொல்லுங்க ,திருந்த வேண்டியவர்கள் திருந்தட்டும் :)

   Delete
 9. நல்ல ஐடியாவா இருக்கே அந்தப் பயணியோடது!.....

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,இந்த ஐடியா எப்போதும் பலிக்காதே:)

   Delete
 10. Replies
  1. யார் நானா ,அந்த பயணியா:)

   Delete
 11. விதவையின் மகிழ்ச்சி உண்மையாக இருக்கலாம்...
  அருமை ஜி.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் உங்களுக்கு சந்தேகம் போகலையே :)

   Delete