29 September 2016

பூவின் மணம் பூவையருக்கும் உண்டு என்பது உண்மையா :)

நேற்றைய  இரவில் நடந்த தமிழ்மண  அதிசயம் >>>
                 
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
 வாசகர் பரிந்துரை 


அதிசயம் காணச் செய்த வலையுலக உறவுகளுக்கு நன்றி !

பிரபுதேவா  பிறந்ததும் ,காவிரி  பிறந்த ஊரில் தானாம் :)           
           ''தமன்னாவை ஃபாரீனர் என்றே  நினைத்திருந்தாராமே , பிரபுதேவா ?''
          ''பிரபுதேவாவைக்  கூட  நம்ம தமிழன்தான்னு  நினைச்சிருந்தோம்  ,காவிரி பிரச்சினையால் அவர் வீட்டுக்கு போலீஸ் காவல் போட்ட பிறகுதானே உண்மை  தெரியுது !''
இது கபாலிக்கு புகுந்த வீடு :)
            ''போலீஸ்  ஸ்டேசன் பக்கம் வரவே பயம்மா இருக்கு ,உனக்கு எப்படி கபாலி ?''
           ''உங்களுக்குத்தான் அவங்க Pol'ice' ,எனக்கு அவங்க வெறும் ICE தான் !''

சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
            ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''

டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?
            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேட்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''
            ''விடுங்க டாக்டர் ,எழுதி இருந்தாலும் என்ன மருந்தை எழுதுவீங்க எங்களுக்குத் தெரியாதா ?''

பூவின் மணம் பூவையருக்கும் உண்டு என்பது உண்மையா :) 
உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

24 comments:

 1. முதல் தகவலுக்கு வாழ்த்துகள். சமீப காலங்களில் 'எங்களு'க்கு 7 அல்லது 8 வாக்குகளைத் தாண்டுவது இல்லை!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி!


  ReplyDelete
  Replies
  1. பதிவர்கள் குறைந்து வருகிறார்கள் ,இருக்கிற பதிவர்கள் எழுதுவதும் குறைந்து வருகிறது ,அதிலும் வாக்களிப்பது இன்னும் குறைந்து வருகிறது !
   இன்றைய உங்கள் பதிவு ,தமிழ்மண மகுடம் சூடும் போலிருக்கே ,வாழ்த்துகள் :)

   Delete
  2. எங்கே ஜி? தம வாக்குகள் குறைவாகவே விழுகின்றன!!!

   Delete
  3. ஒரு பதிவர் வோட்டு போடாமல் ,போட்டாலும் இரண்டு நாளுக்கு பிறகு செல்லாத வோட்டு போட்டு டிமிக்கி தந்துக் கொண்டிருக்கிறார் :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் என்பது உண்மைதானே அய்யா :)

   Delete
 3. வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வரவுதான், தமிழ்மண அதிசயத்துக்கு காரணம் !நன்றி :)

   Delete
 4. தம்ன்னா... பிரபுதேவாதான்... நன்றாகத் தம்கட்டி ஆடுகிறாரே...! தமன்னாவோடு ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? காவிரித் தாயின் இளையமகன்... காதல் பெண்களின் நய(ன்)மானப் பெருந் தலைவன்...!

  போலிஸ் என் பக்கம் வரவே பயப்படுது...! குச்சி ஐஸ்...! கபாலியை ஐஸ் வைத்துத்தான் போலிஸ் ஹவலா கொள்ளையடித்துக் காலம் தள்ள முடியும்...!

  பாழும் கிணறுங்கிறாய்... அவருக்குத் தண்ணி மட்டும் எப்படிம்மா... ‘புல்’லா கிடைக்கிதுன்னு சொல்றீயேம்மா...!

  விடுங்க டாக்டர்... எப்படியும் சாகத்தானே போறான்...! எதுவும் சட்டுப் புட்டுன்னு காலாகாலத்தில நடக்கட்டும்...!

  ‘இதழோடு இதழ் சேரும் நேரம்...! இன்பங்கள் ஆறாக ஊறும்...!’ பூவையருக்கும் பூவையாருக்கும் வியர்க்காத பகுதி...உதடுதான்னு சொன்னா ஒத்துக்கவா போறீங்க...!

  த.ம. 4  ReplyDelete
  Replies
  1. குடும்பத்தில் புயல் வீசவும் அடங்கிட்டாரே :)

   சீருடை தாங்கிய கொள்ளைக் காரங்களோ :)

   ஏது கிடைக்காட்டியும் டாஸ்மாக்கில் சரக்கு குறைவதே இல்லையே :)

   அவன் தலைஎழுத்து செத்தான் :)

   வியர்க்காத பகுதிதான், வியக்க வைக்குதே :)

   Delete
 5. 1) வீட்டுக் காவலா.. வீட்டுக்குக் காவலா!?..
  2) குச்சி Ice?..
  3) தண்டச் செலவாப் போச்சு!..
  4)
  நர்ஸ் சுபா: ஏய்.. டாக்டர் ஏன் கடுப்பா மேஜையில குத்திக்கிட்டு இருக்கார்?..
  நர்ஸ் சுதா: அந்த பேஷண்ட்.. இன்னிக்கு தப்பிச்சு போய்ட்டார்..ல்ல அதுக்காகத் தான்!..

  5) உண்மைதான்!..

  ReplyDelete
  Replies
  1. வீட்டுக்காவல் வைக்கும் அளவுக்கு தப்பு எதுவும் செய்யலையே :)
   குல்பி ஐஸா கூட சாப்பிட்டு போகட்டுமே :)
   கிணத்துத் தண்ணியில் மனுஷன் விழ்ந்தால் கூட தப்பிச்சிடலாம் ,செல் தப்பிக்காதே:)
   நல்ல வேளை ,அவர் பிழைத்துக் கொண்டார் :)
   உள்ளூர சந்தோசத் திரவம் ஊறுவது,உழைப்பாலா :)

   Delete
 6. பிரபுதேவாவும் தமன்னாவும் இந்தியர்கள் தானே தமன்னா படத்தில் அழகாக இருக்கிறார் .....!
  கபாலியின் துண தேவையோ போலிஸ் ஸ்டேஷனுக்கு வர
  ரசிக்க வைக்கும் நகைச் சுவை. கூடவே சந்தேகம் கிணற்றுக் குள்ளும் செல் ஃபோனா
  டாக்டர் கையெழுத்து பற்றி நிறையவே ஜோக்குகள் வந்து விட்டது
  உழைக்காமலேயே சிலருக்கு வியர்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. தண்ணி தர மறுப்பவர்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இருக்கிறமாதிரி தெரியவில்லையே :) தமன்னா நேரிலும் அப்படியிருக்ககூடும் ,அதான் ,பிரபுதேவா அப்படி சொல்லியிருக்கிறார் :)
   கபாலிக்கு அங்கே இருக்கிற மரியாதையே வேற :)
   பெண்டாட்டி தன்னை மறந்து செல்லில் பேசும் போதுகிணற்றில் தள்ளி விட்டிருப்பானோ புருஷன் :)
   அதனால்தான்மூன்றாவது வரியில் என் பஞ்ச்:)
   அப்படி வியர்த்தால்,அது உடல் நலத்துக்கு அனர்த்தம் :)

   Delete
 7. வாழ்த்துகள் ஜி

  01. எல்லா நடிகருக்கும் போட்டால் போலீஸ் பத்தாது ஜி
  02. போலி-ஐஸ்-தான்
  03. மகள் பொருத்தமாகத்தான் பேசுது
  04. கடைக்காரர்கள் தருவதுதானே மருந்து
  05. நன்று

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மண மகுடத்தில் பதிவு வரும் அளவுக்கு, வாக்கு போடுவதில் சிலருக்கு சுணக்கம் இருப்பது வருத்தத்தைத் தருதே ஜி :)

   போட்டால் தெரிந்து விடும் ,மண்ணின் மைந்தர்கள் யாரென்று :)
   அப்படித்தான் காவல் துறையில் கறுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன :)
   கிணற்றிலே விழுந்தாலும் கவிதைத் தனமா பேசுதா :)
   சில நேரங்களில் ,கடைக் காரரே டாக்டருமாகி விடுகிறார் :)
   நாட்டுக்கு தேவையான் நாற்றம்தானே இது :)

   Delete
 8. வாழ்த்துக்கள் அதிசியத்துக்கு.......

  ReplyDelete
  Replies
  1. தினசரி ஒரு பதிவு , மகுடம் சூடிக் கொண்டால் அல்லவா அழகு :)

   Delete
 9. பூவின் மணம்
  நாருக்கும் உண்டே!

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம், நாரோட சேர்ந்த பூவும் நாற ஆரம்பித்து விடுகிறது :)

   Delete
 10. Replies
  1. ஆமாண்ணா,தமன்னா படம் அருமைதானே :)

   Delete
 11. Replies
  1. போட்டோஜெனிக் ஃ பேஷ் தமன்னாவுக்கு மிகவும் பொருந்தும்தானே :)

   Delete