4 September 2016

நடிகையின் அன்றைய அழகு ,மீண்டும் வருமா :)

உங்களுக்கு அந்த 'ஞானி 'ஞாபகம் வர்றாரா :)           
              '' நீங்களுமா , கலிகாலம்  நடக்குதுன்னு  சொல்றீங்க ?''
               ''ஆமா , 'வார்த்தை ஜாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் , ஞானி என்று கலிகாலத்தில் அழைக்கப் படுவார் 'னு பாகவதத்தில் சொல்லியிருப்பது சரியாத்தானே  இருக்கு !''

நடிகையின் அன்றைய அழகு ,மீண்டும் வருமா :)            
         ''அந்த  குண்டு நடிகை கஷ்டப் பட்டு 18 கிலோ எடையைக் குறைச்சிட்டாங்களாமே  ?''
       ''வயசுலேயும் 18 வருசம் குறைஞ்சா நல்லாயிருக்கும் !''
மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !
            '' எதுக்குமே சிக்காத எலி ,அந்த ஹோட்டல் மசால் வடைக்கு மட்டும் மாட்டும்னு எப்படி உறுதியாய் சொல்றே ?''
              ''காதலிக்கையில்  அந்த ஹோட்டல் மசால் வடையைத் தின்னுட்டு ,இப்போ நானே  உங்ககிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே !''

'வீடியோ காலில் 'தெரிந்த அழகு முகத்தை ...!
              ''செல்லுலே பார்க்கும் போது அம்சமா இருக்கீங்கன்னு சொன்னேன் ,அதுக்கு  தலைவர் 'வைடா போனை 'ன்னு கோபமா கத்துறாரே,ஏன்  ?''
              ''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுருப்பார் !''

கணவனிடம் இவ்வளவு முன் ஜாக்கிரதை தேவையா ?
    நான் கைக்குத்தல் அரிசியை தின்று வளர்ந்தவன் என்பதை ...
    ஒரு பேச்சுக்குக்கூட சொல்லமுடியவில்லை என்னவளிடம் ...
   'அதுக்காக உங்க கை நீட்டலையும் ,குத்தல்பேச்சையும் சகிச்சுக்க    மாட்டேன் 'என்கிறாள் !

20 comments:

 1. அது கலிகாலம்... இது க(பா)லியான காலம்...!

  நடிகை கஷ்டப் பட்டு 18 கிலோ எடையைக் குறைச்சிட்டாங்க... சைக்ளோட்ரா(ள்)ன்... படத்திற்கு பேரு வச்சாச்சு... ‘18 கிலோவாலே...’ இங்க வாலே... என்ன பாக்கே...?!

  எலி வலைன்னாலும்... இது வடா வலைதான்...!

  ‘செல்’லும் இடமெல்லாம் தனக்கு நிகரில்லை என்று வெற்றி முரசு கொட்டி வரும் தலைவரே...! - இப்படிச் சொன்னா கோபம் வரதா...?

  ‘காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா...?’-ன்னு ஆத்துல கேட்டதுக்கா... படத்துக்குக் கூட்டிண்டு போகாம... பாட்டு என்ன நோக்கு வேண்டிக் கிடக்கிதுன்னு... இந்த குத்து குத்துறாள்...?

  த.ம.1  ReplyDelete
  Replies
  1. அவங்க 'நெருப்புடா'ன்னு சொன்னால் நமக்கு வெறுப்புடா என்றல்லவா சொல்லத் தோன்றுகிறது :)

   போஸ்டரில் 18 + ன்னு போட்டிருக்கான்னு பாக்கேன் :)

   படா வலைதான்:)

   ஜெயில்லேயும் செல்லும் கையுமாத்தான் இருந்தார் ,ஏன் கோபம் வருதோ தெரியலே :)

   இதுக்கு ,குத்து ரம்யாவே பரவாயில்லை போலிருக்கே :)


   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. வார்த்தை ஜாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் , ஞானி என்று கலிகாலத்தில் அழைக்கப் படுவார்..இது இன்றைய சூழலுக்கு சரியா இருக்கிறதுதானே :)

   Delete
 3. Replies
  1. வாலிபத்தின் வயதைக் கொள்ளை கொள்ளவே வந்த அழகையும் ரசீத்தீர்களா :)

   Delete
 4. Replies
  1. மசால் வடையில் மாட்டிகிட்ட எலியை ரசித்தீர்களா :)

   Delete
 5. எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது
  அழகு என்பது வயதில் மட்டும்தானா
  எலி மாதிரி சிக்கிக் கொண்டார்களா
  செல் என்றதும் ஜெயில் செல் நினைவுதானா
  கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் மனைவியைக் குத்த முடியுமா

  ReplyDelete
  Replies
  1. நான் ஞானியா ,அறிஞனா :)
   அந்த வயது என்றும் வராதுதான் :)
   சோதனை எலின்னு இப்போதானே புரியுது :)
   ஜெயிலுக்கு போனது பெரிய சாதனை இல்லையா :)
   அவ்வளவு பலம் உடம்பில் இருக்கும் ,மனதில் ?

   Delete
 6. த.ம.8 - நண்பரே தமிழ் மணத்தில் ஓட்டு போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஒரே முயற்சியில் வாக்கு விழவில்லை என்றாலும் கூட அடுத்த முயற்சியில் வாக்கு போடமுடிகிறது ,சில நேரங்களில் ஒரே நொடியில் விழுந்து விடுகிறது .. வர வர தமிழ்மணம் ,தமிழ்மர்மம் ஆகி வருகிறது :)

   Delete
 7. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கணவனிடம் முன் ஜாக்கிரதை இவ்வளவு தேவைன்னு நீங்க நினைக்கிறீங்களா :)

   Delete
 8. எந்த நடிகைதான் உள்ளது உள்ளபடி வயச சொல்லி இருக்காங்க.....

  ReplyDelete
  Replies
  1. அட வயச விடுங்க ,கண்ணுக்கு அழகா தெரியுற வரைக்கும் பார்த்துட்டு போவோமே :)

   Delete
 9. காலம் மாறினாலும்
  அழகு மாறலாம்
  ஆனால்,
  மனிதக் குணம்
  மாறாதே!

  ReplyDelete
  Replies
  1. மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது :)

   Delete
 10. அனைத்தையும் ரசித்தோம் மசால்வடையின் சுவையும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. மறக்க முடியாத மசால் வடைதானே :)

   Delete