8 September 2016

ஒரு குடிகாரனின் தத்துவம் :)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....                                         
           நேற்றைய தினம் கணணி தொடர்பு அறுந்து போனதால்  பதிவைப் போட முடியவில்லை ! அது அறுந்து போனது என்பதால் ,தினசரி பதிவின் தொடர்ச்சி அறுந்து போகட்டும் என்று விட்டு விட முடியுமா ?அதான் ,இந்த மீள்பதிவு !
 நன்றி !

நாட்டிலே சோம்பேறிகள் பெருகிவிட்டார்களோ :)
               '' புது வருசத்துக்கு வரப்போற புதுமைக் காலண்டர்  செம சேல்ஸ் ஆகப் போவுதா ,ஏன் ?''
               '' எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் ,வாரம் ஒரு முறை கிழிக்கிற வீக்லி காலண்டர் வரப் போவுதே !''

ஒரு குடிகாரனின் தத்துவம் !
       ''மச்சி ,நமக்கு பிராந்தி ,பீர் ,ரம் பிடிக்குது .ஒயின் பிடிக்க மாட்டேங்குதே ?''
     ''ஓயின்னு  சொல்லிப் பாரு ,உதடுகள் கூட ஒட்ட மாட்டேங்குதே !''

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?
           '' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
           ''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !
       143ன்னு  சொன்னா ...
      வாலிப அகராதியில் வேண்டுமானால் 
   i love you என்றிருக்கலாம் !
      ஆன்மீக அகராதியில்,
      அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
       உயரத்தைக் குறிக்கும் !

35 comments:

 1. இப்போது சரியாகி விட்டதா? என் இணையாய்த் தொடர்பும் இன்று(ம்) தொல்லை தந்தது.

  ReplyDelete
  Replies
  1. நேற்று முன்தினம் இணையத் தொடர்பு அறுந்தது ,புகாரை பதிவு செய்து , நேற்றைய தினம் முழுவதும் காத்துக் கிடந்தும் சரி செய்ய யாரும் வரவில்லை !உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் செய்தால் ,மீண்டும் மீண்டும் தொலைப்பேசி எண்ணைத்தான் வாங்கிக் கொண்டார்களே தவிர காரியம் ஆகவில்லை !
   ஒரு வழியாக சரி செய்யும் லைன்மேன் நம்பரைப் பிடித்தேன் ...
   சிறிது நேரத்தில் 'உண்மை உழைப்பு உயர்வு' என்று ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் வந்தார் .தெருவோர அவர்கள் பெட்டியில் நொண்டி சரி செய்து விட்டார் !உ உ உ க்கு நூறு ரூபாய் மொய்யைப் பெற்றுக் கொண்டு 'எப்போ வேண்டுமானாலும் கூப்பிடுங்க வர்றேன் 'என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் !கூகுள் ஆண்டவர் அருள் இருந்தால் , அவரை அழைக்க வேண்டியிருக்காது என்று நம்புகிறேன் :)

   Delete
  2. #இணையத் #
   தவறைக் கூட சரிசெய்ய விட மாட்டேங்குதா ?
   நீங்களும் மொய் எழுதி விட வேண்டியதுதானே ? நான் இதை சொல்லவே வேண்டாம் !பல வருடம் முன்பே நீங்கள் , ஓட்டுனர் ,நடத்துனர்களுக்கு மொய் வைத்த விபரத்தை இப்போ தான் படித்தேன் :)

   Delete
 2. Replies
  1. இன்றுதான் ஓ கே ஜி ,இணையத் தொடர்பும் :)

   Delete
 3. உங்களின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாள் கணினித் தொடர்பு ..இல்லை இல்லை ..வலையுலக உறவுகளின் தொடர்பின்றி இருக்க முடிய வில்லையே :)

   Delete
 4. ''ஓயின்னு சொல்லிப் பாரு..."

  நல்லதொரு கண்டுபிடிப்புத்தான்!

  ReplyDelete
  Replies
  1. தமிழுக்கே சிறப்பான ழ கூட இவன் வாயில் நுழைந்து விடும் ,ஒயின் நுழையாதாமா:)

   Delete
 5. B.S.N.L என்று நினைக்கிறேன்.அரசு ஊழியர்களிடம் அவ்வளவு சுலபமா வேலை வாங்க முடியுமா என்ன!

  ReplyDelete
  Replies
  1. சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் !
   வந்தவர் பாவம் ,தற்காலிக ஊழியர் ,பிழைத்துப் போகட்டும் !
   BSNL யை இழுத்து மூடி விட்டு தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,நாமும் அதற்கு துணை போய்விடக் கூடாது என்பதற்காக BSNL ல் நீடித்துக் கொண்டிருக்கிறேன் !தொலைதொடர்பு முழுவதும் தனியார் கையில் சென்று விட்டால் ,அவர்களின் அகோரப் பசிக்கு மக்களால் சோறு போட முடியாது :)

   Delete
 6. வணக்கம் தோழர்,
  தொடர்பறுந்தாலும் தொய்விலாது தொடரட்டும் பணி
  தம +

  ReplyDelete
  Replies
  1. அது அறுந்தாலும் நான் விடுவதாக இல்லை இது ஆயுட்கால பந்தமாச்சே :)

   Delete
 7. வீக்லி காலண்டர்... ரொம்ப வீக்தான்...!

  ‘டாஸ்மாக் ஒயின்’ சொல்லிப்பாருங்க...!

  ‘ஒ கல்யாணத்துக்கு... முதல் நாள்... முதல் ஆசிர்வாதம்... நான்தான் பண்ணுவேன்னு சொல்லித்தான்...பூஜைக்கு வந்த மலரே வான்னு... பூஜையே போட்டிங்க... மறந்திட்டீங்களா...?’

  110ன்னு சொன்னா... 111ன்னு ஏன் தப்பா அர்த்தம் பண்ணிக்கிறீங்க...?!

  த.ம. 6  ReplyDelete
  Replies
  1. 52 நடிகைகள் போட்டோ போட்டால் பெஸ்ட் ஆயிடுமில்லே :)

   மா என்று சொல்லும் போது சேருதே ,குடிக்கலாமா :)

   ஏற்கனவே ,ராத்திரி நேரத்து பூஜையில் ..பாட்டைப் பாடியாச்சா :)

   பட்டை நாமம்னு தெரியாமத்தான் :)

   Delete
 8. ஆனாலும் உடல் ஆரோக்கியத்துக்கு ஒயின் நல்லது என்பது பிரெஞ்சுமக்களின் எண்ணம் ஜீ)))

  ReplyDelete
  Replies
  1. தம்பி நேசன்!
   அல்ககோல் கலக்காத
   எந்தப் பானமும்
   உடலுக்கு நல்லம் தான்!
   ஆனால்,
   வைன் உம் தீங்கு தான்!

   Delete
  2. ROUTINE UTILITY MEDICINE என்றுகூட ரம்முக்கு விரிவாக்கம் சொல்வார்கள் !குடிப்பதற்கு ஏதாவது சாக்கு போக்கு வேண்டுமல்லவா :)

   Delete
 9. குடிகாரங்களுக்கும் தத்துவம் இருக்கென்று
  படிக்கிறேன் இன்று - ஆனால்
  குடிகாதவங்களுக்கும் தத்துவம் இருக்காதா?

  ReplyDelete
  Replies
  1. குடிக்காதவங்களுக்கு தத்துவம் எதற்கு ?அவங்க வாழ்க்கையே மகத்துவம் தானே :)

   Delete
 10. Replies
  1. வார காலண்டர் விற்குமா ?காலை வாரி விடுமா :)

   Delete
 11. எனக்கும் அவ்வப்போது உணையத் தொடர்பு வம்பு செய்யும் . ஆனால் இங்கு பி எஸ் என் எல் ஊழியர்கள் விரைவிலேயே சரி செய்கிறார்கள் நான் மொய் எழுதுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லையே ,பதிவரா வாழ்ந்தால் பெங்களூரில்தான் வாழணும் :)

   Delete
 12. Replies
  1. ஒரு குடிகாரனின் தத்துவம் கூடவா :)

   Delete
 13. 143-க்கு இப்படி ஒரு விளக்கமான நகைச்சுவையா ? நன்று

  ReplyDelete
  Replies
  1. இந்த விளக்கத்தைச் சொன்னது நானல்ல ,வாலிபக் கூட்டம்தான் :)

   Delete
 14. இணையத் தொடர்பு ம்மப்படித்தான் பரவாயில்லை ஏதேனும் ரெயில்வே ஸ்டேஷன் கிட்ட வீடு பார்த்தா போச்சு என்ன சொல்லுறீங்க ஜி??!! வைஃபை ஃப்ரீனு வாடகையும் அதிகமாகலாம்....வீட்டின் விலையும் அதிகமாகலாம் ஜி...

  எல்லாம் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. ரயில்வே வைஃபை ஒருவருக்கு அரை மணி நேரம்தான் கிடைக்குமாமே :)

   Delete
 15. குடிகாரனே தத்துவம் பேசும்போது..நாம் சும்மா இருக்க முடியுமா...? வயர் அறுந்தாலும் விடாது BSNLயை தொடருவோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அரசுத் துறையை நாம் இழந்தால் ,நமக்குத் தானே கஷ்டம் :)

   Delete
 16. ரசித்தேன்... கடமை தவறாத நகைச்சுவை எழுத்தாளர் ஜி நீங்க....

  ReplyDelete
  Replies
  1. நீங்க மட்டும் என்னவாம் ,இந்த நேரத்திலும் உட்கார்ந்து கருத்து சொல்லி இருக்கீங்களே :)

   Delete