1 October 2016

தோழியிடம் பீற்றிக் கொண்டால் இப்படித்தான் :)

                ' 'உன் வயசுதான் எனக்கும் ,என் சருமம் எவ்வளவு பளபளப்பா இருக்கு ,பார்த்தீயா ?''
                 ''ரொம்பவும் அலட்டிக்காதே !சர்க்கரை நோயா  இருக்கும், போய் 'செக் அப் 'பண்ணிக்கோ !''
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் :)

        ''அந்த ஆள் ஒரு வரி பாடினதைக் கேட்டே ...அவனொரு குடிகாரன்னு எப்படி சரியா கண்டுபிடீச்சீங்க ?'' 

        ''துன்பம் வரும் வேளையிலே குடிங்கன்னு பாடினாரே !''


இயக்குனரிடம் ஏமாறாத நடிகை :)          

        ''அந்தப் படத்திலே உங்களுக்கு வெயிட்டான ரோல் தானே ,ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ?''

        ''ஒரே ஒரு சீன்லே வர்ற கர்ப்பிணி வேஷம் யாருக்கு வேணும் ?''


கணவனை கைக்குள் போட்டுக்க விரும்பாத பெண்ணும்  உண்டா ?

          ''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?''

          ''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு  சொல்லித்தான் !''


Thir'teen'ஐ  லக்கி நம்பர் ஆக்குவது  'teen' ager கையில்தான் :)

டீனேஜ் என்பது ... 

கனாக்காணும் காலம் மட்டுமல்ல ,

வினாக்காணும் காலமும் கூட !

தேர்வு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய பருவத்தில் ...

வேறு உணர்ச்சிக்கு விடை தேடிக் கொண்டிருந்தால்...

வாழ்க்கை முழுதும் கேள்விக் குறிதான் எஞ்சி நிற்கும் !

26 comments:

 1. 01. இப்படியும் இருக்கோ ?
  02. உளவியல் நிபுணரோ ?
  03. கர்ப்பிணி வெயிட்தானே ?
  04. உண்மையை ஜொள்''ளிட்டாரோ ?
  05. உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. நல்ல தோழி என்றால் ,இதை முதலில் சொல்லியிருக்க வேண்டுமல்லவா :)
   உளரும் வாய் நிபுணர் :)
   சந்தேகமே இல்லாமல் :)
   ஜொள்ளுவதுகூட புரிஞ்சிக்காம ஏமாறலாமா :)
   புவனாக்கள் கேள்விக்குறியாகலாமா :)

   Delete
 2. பொறாமை! முதல் ஜோக் அப்படித்தான் நினைக்க வைக்கிறது! அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. பெண்ணுக்கு பெண்ணே பொறாமைக் கொள்ளும் பளபளப்பு தேகத்தவளோ :)

   Delete
 3. கண்ணாடியில போயி நல்லாப் பாரு... ஜிகினாவா ஒட்டிக்கிடக்கு...!

  ‘குடிமகனே..பெருங்குடிமகனே.. நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...!’ மதுவிலக்கை விலக்கு...!

  கர்ப்பிணி வேஷம் போடப்பிடிக்கல... உண்மையா என்ன அதுமாதிரியாக்கி நீங்களே ஒங்களோட வச்சுக்க வேண்டியதுதானே... ஒங்க வருமானம் முழுக்க எனக்குத்தானே... நா ஏன் நடிக்கனும்...?!

  குறி வைச்சு ஏமாத்துவது இதுதானா...?! அப்ப வச்சகுறி தப்பாதுன்னு சொல்லுங்க...!

  பூ ஆணா ஒரு கேள்விக்குறி...?

  த.ம. + 1 ?  ReplyDelete
  Replies
  1. ஜிகினா வந்தது எப்படின்னு தெரியலையே :)
   கொடுத்த பிறகு எடுப்பதற்க்கு வாய்ப்பே இல்லை :)
   நிழல் ஒன்று நிஜமாகிறதோ :)
   மன்மதன் அம்பு குறி தவறுமா :)
   பெயிலானால் தான் கேள்விக் குறி :)

   Delete
 4. Replies
  1. தலையணை மந்திரம் புரிந்ததா :)

   Delete
 5. 'தலையணை மந்திரம்' சொல்லுவோர்
  பேச்சைக் கேட்ட பலர்
  தூக்குப் போட்டுத் தொங்கியும் உள்ளனரே!

  ReplyDelete
  Replies
  1. மந்திரம் இப்படி மாயமும் செய்யுமா :)

   Delete
 6. ஒப்பிடல்தான் இதற்குக் காரணம்
  பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்
  படம் முழுவதும் கர்ப்பிணியாக வர ஆட்சேபணையில்லை
  ஒருவேளை முந்தானையில் முடிக்கக் கற்றுக் கொடுத்தால்
  நல்ல தத்துவம்

  ReplyDelete
  Replies
  1. நீறு பூத்த நெருப்பு கனன்று விட்டதோ :)
   இதை எப்படி அறிந்தார்கள் என்று தெரியவில்லை :)
   டெலிவரி என்றால் பயமா :)
   முடிச்சு ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்காது :)
   தத்துவமா தத்துபித்துவமா :)

   Delete
 7. இரசித்தேன் அருமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வினாக்காணும் காலம் என்பதையும் தானே :)

   Delete
 8. ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்படி புகழ்வார்கள். அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. பொறாமை இல்லாத இல்லாத தோழியை காண்பது அரிதிலும் அரிதோ :)

   Delete
 9. Replies
  1. எதை எடுத்தாலும் ஏன் எதற்கு எப்படி என்ற தேடல் இருப்பது அந்த பருவத்தில் தானே :)

   Delete
 10. பளபளன்னு இருந்தா சர்க்கரை நோயா...? அடி ஆத்தி...
  பளபளப்பைப் பார்த்து ஏமாறக்கூடாது போல...
  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று இதற்குத்தான் சொன்னார்களோ :)

   Delete
 11. அப்போ....தோழியிடமும் பீத்தக்கூடாதா.....?????ஃ

  ReplyDelete
  Replies
  1. தோழிகள் சிலர் ,உடன் இருந்தே கொல்லும் வியாதிகள் போலத்தானே :)

   Delete
 12. துன்பம் வரும் வேளையிலே குடிங்க.... இன்பமாக இருந்தாலும் அதைத் தானே செய்கிறார்கள் பலரும்! :)

  ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. துன்பமே இன்பம் போலாகி விடுவதுதான் போதையின் பாதை :)

   Delete
 13. Replies
  1. Thir'teen'ஐ லக்கி நம்பர் ஆக்குவது,'teen' ager கையில்தானே,அய்யா :)

   Delete