12 October 2016

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...:)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....
மீண்டும்  மூன்று நாள் வெளியூர் வாசம் !
மன்னித்து அருள்க , மீள் பதிவுக்காகவும் ,தாமதமாகப் போகும் என் மறு மொழிக்காகவும் :)

புருஷன் நளன்னா  மனைவிக்கு ஏன் பிடிக்காது :)
          ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் 'தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
         ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''
ஓசியில் திங்க அலையுறாங்களே:)
         ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் ,காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
           ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் ,காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !

அந்த நர்ஸ், 2013 மிஸ் சென்னை ? 
           ''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
             ''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்தது இந்த மருத்துவமனைன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''

இப்படியும் ஒரு பிள்ளை !
               "மனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய  ஷாஜகானை , அவர் மகன் சிறையில்  அடைத்து வைத்து இருந்தாராம்  ..இதுலே  இருந்து என்ன தெரியுது ?"
               "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது ,நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?
நம்ம ஊர் லாரி,பஸ்களின் பின்னால் ...
பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும் என்றெழுதி இருப்பதைப்  போல  ...
சீனாவில் வெண்சோ நகரிலுள்ள இரு பாலர் பள்ளி ,கடைபிடிக்க  வேண்டிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ...
மாணவர் மாணவி இடையே எப்போதும் அரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது கூட பரவாயில்லை ...
ஹான்க்சோ நகரில் உள்ள பள்ளி அறிவிப்பை படித்தால் அழுவதா  சிரிப்பதாவென்று புரியவில்லை !
மாணவனுக்கும் மாணவனுக்கும் .மாணவிக்கும் மாணவிக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமாம் !
தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை !

16 comments:

 1. சென்று வாருங்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. இதோ சோம்பலைக் கொன்று வந்து விட்டேன் :)

   Delete
 2. மூன்று நாட்கள்தானே பரவாயில்லை. போய்வாருங்கள்.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. மூன்று நாள் தான் என்றாலும் எதையோ இழந்ததைப் போல் உணர்ந்தேன் :)

   Delete
 3. தேடிச் சோறு நிதந்தின்று... பல சின்னஞ் சிறுகதைகள் பேசி... நளவெண்பா பாடி... ஆடி மகிழ்ந்து உண்டு களித்திருப்போம்...!

  இருக்கவே இருக்கு... இனி... சீனியும் மிளகாயும்...!

  மிஸ் சென்னை அழகி நர்ஸ்... ஒங்களோட மிஸஸ் நர்ஸா ஆகப் போறாங்கன்னு பேசிக்கிறாங்களே...!

  கஜானாவையே காலி பண்ணினா... எ மனைவிக்கு நா என்னா கட்டுறது...? “கட்டிப்புடி கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா”ன்னு டாப்போட்டுப் பாடுறா...? நா ரொம்ப சீப்பா போயிட்டேன்...அவ்...அவ்...ரங்கன்...!

  இது மாலை நேரத்து மயக்கம்... பூமாலை போல் உடல் மணக்கும்... ஒரு ஆணும் ஆணும்... ஒரு பெண்னும் பெண்னும்... பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. இதைவிட வேறென்ன வேண்டும் :)

   பாவம் பொண்ணு ,கல்யாணம் ஆகுமா :)

   உலகம் ஆயிரம் பேசும் :)

   அவருக்கு அவர் பெண்டாட்டி ,எனக்கு என் பெண்டாட்டி முக்கியம் இல்லையா :)

   காலக் கொடுமையா இருக்கே ,இப்படியும் ஜோடியா :)

   Delete
 4. Replies
  1. தலைக்கீழாய் பொறந்து , தலைக்கீழாய் அலைவதை ரசிக்க முடியுதா :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல அப்பனாவும் இருக்கணும்னு சொல்றது சரிதானே :)

   Delete
 6. மாணவனுக்கும், மாணவனுக்கும் இடைவெளி எதற்கு ?
  சென்று வென்று வாருங்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க ?நல்ல வேளை,பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடைவெளி எதுக்குன்னு கேட்காம போனீங்களே :)

   Delete
 7. சென்று..வென்று.. கொண்டு...வாருங்கள் நண்பரே..........

  ReplyDelete
  Replies
  1. கொண்டு வரவில்லை என்றாலும் ,'கன்னியாகுமரி 'யாவென்று பார்த்து வந்தேன் :)

   Delete
 8. மருத்துவமனை விளம்பரம் அருமை...ஜி

  அனைத்தும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. உடம்பை சரி செய்வதுக்கு பதிலாய் மனத்தைக் கெடுத்து விடுவார்கள் -போலிருக்கே :)

   Delete